மேகதாது அணைக்கு நிதி ஒதுக்கீடு- சித்தராமையாவுக்கு தமிழக விவசாயிகள் கடும் கண்டனம்!!
பெங்களூரு: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு 5912 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு விவசாய சங்கங்கள் கண்டித்துள்ளன.
தமிழக கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை ஒன்றை கட்டப் போவதாக கர்நாடக அரசு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உருவானது.

இந்நிலையில், 70வது சுதந்திர தினம் கொண்டாடிய கர்நாடாக முதலமைச்சர் சித்தராமையா, மேகதாதுவில் அணை கட்ட 5912 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக பேசி உள்ளார். இதற்கு தமிழக விவசாயிகள் சங்கங்கள் சார்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு தலைவர் பாண்டியன் கூறுகையில், சித்தராமையா உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக பேசி, அவமதிப்பு செய்துள்ளார். இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. ஒரு மாநில முதலமைச்சர் சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது. அணை கட்டும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்றார்.
தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் ஜீவக்குமார் கூறுகையில், மேகதாதுவில் அணை கட்டி தமிழ்நாட்டை அழிப்பது போல கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பேசியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என்றும் வழக்கம் போல் தமிழகம் அமைதி காக்காமல் உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் தனபால் கூறுகையில், ஏற்கனவே தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளாக குறுவை சாகுபடி இல்லை. இதனால் 16 லட்சம் விவசாயத் தொழிலாளர்களும், 4 லட்சம் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சித்தராமையாவின் இந்தப் பேச்சு பேரடியாக தமிழக விவசாயிகள் மேல் விழுந்துள்ளது. இது குறித்து தமிழக அரசு பிரதமருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தைத் சேர்ந்த ரவீந்திரன், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் வரதராஜன் உள்ளிட்ட தமிழக விவசாய சங்கப் பிரதிநிதிகள் சித்தராமையாவின் இந்தப் பேச்சிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம்












Click it and Unblock the Notifications