தமிழகத்தில் இன்று
சென்னை:
நீலகிரி விவசாயிகளை காப்பாற்ற தேயிலை (டீ தூள்) இறக்குமதியை தடை செய்ய வேண்டும். தேங்கி கிடக்கும் தேயிலையை ரேஷன் கடைகள் மூலம்விற்பனை செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னையில் புதன் கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தேயிலையை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதை தடை செய்யாமல், தமிழ்நாட்டில் மட்டும் 4 மாதத்திற்கு வரிச் சலுகை அளிப்பதாலோ,ஊக்கத்தொகையாக ஒரு கிலோவுக்கு 5 ரூபாய் கொடுப்பதாலோ, நீலகிரி விவசாயிகளின் பிரச்னையை தீர்க்க முடியாது.
இயற்கை சீற்றத்தாலும், அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையாலும் தேயிலை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து தேயிலை இறக்குமதி செய்வதால், அவர்கள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர். பச்சைத் தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ.15 நிர்ணயம்செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காமல், பதப்படுத்தப்பட்ட தேயிலைக்கு ரூ.5 ஊக்கத் தொகை வழங்குவதால் எந்த நன்மையும்ஏற்படாது.
தேயிலை இறக்குமதியை உடனடியாக தடை செய்ய வேண்டும்.
மத்திய அரசு நடத்தும் நிறுவனங்கள் மூலமாகவும், ரேஷன் கடைகள் மூலமாகவும் தேயிலையை கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் என்றுஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications