குரு அதிசாரப் பெயர்ச்சி: கடகத்தில் இருந்து குரு பகவான் அதிசாரமாக சிம்மத்திற்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சி நிகழ்வால் கடகம், சிம்மம், கன்னி ஆகிய 3 ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
கடகத்தில் இருக்கும் குரு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு சிம்மத்திற்கு வருகிறார். மீண்டும் வக்கிரமாகி பின்னோக்கி கடகத்திற்குச் செல்வார். இந்த நிகழ்வே குரு அதிசாரப் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. சுமார் 90 நாட்கள் அதிசாரம் நடக்கும். 9 கிரகங்களுக்கும் அதிசாரம் நடைபெறும். இந்த கிரக மாற்றத்தின்போது 12 ராசிகளுக்கும் பல்வேறு பலன்கள் கிடைக்கும்.
அக்டோபர் 31 ஆம் தேதி பகல் 12.05 மணிக்கு குரு அதிசாரமடைகிறார். ஜனவரி 25 ஆம் தேதி இந்த நிகழ்வு நிறைவடைகிறது. அதன்படி, இந்த 3 மாதங்களில் குரு அதிசாரப் பெயர்ச்சியால் கடகம், சிம்மம், கன்னி ஆகிய 3 ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். கடக ராசியினருக்கு உச்சகுருவாக வீட்டில் இருந்தாலும் பெரிய மாற்றங்கள் தெரியவில்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த அதிசார குருப்பெயர்ச்சி நல்ல மாற்றத்தைக் கொடுக்கும். எல்லா பொறுப்புகளையும் உங்கள் தலையில் போட்டுக் கொண்டிருந்த சூழ்நிலை மாறும். காசு பணம் வந்தாலும் அதனை சேர்க்க முடியவில்லை, ஓய்வெடுக்க முடியவில்லை என்கிற நிலைமைகள் எல்லாம் மாறும். பணத்தை உங்களுக்காக செலவு செய்யத் தொடங்குவீர்கள். நிம்மதியாக சில பயணங்களை மேற்கொள்வீர்கள். உங்களுக்காக நேரத்தை ஒதுக்குவீர்கள். கடன் அமைப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். 6 ஆம் இடம் வலுப்பதால் கடன் அமைப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். 6 ஆம் இடத்தை குரு பார்க்கும்போது வயிறு சம்பந்தப்பட்ட, அஜீரணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும். சரிவிகித உணவுகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இரவு நேரத்தில் சாப்பிடுவது, உப்பு அதிகமாக சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. வரும் 3 மாதங்கள் அதிக எடை கூடுவதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 2 ஆம் இடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்துக்கு குரு வருவதால் சவால்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். வண்டி, வாகனங்கள் வாங்குவது, நிலம், வீடு போன்ற புதிய சொத்துக்கள் வாங்குவது, தொழில் ஸ்தாபனம் உருவாக்குவது, பொருளாதாரத்தில் அடுத்த படிநிலைக்கு செல்வது போன்ற யோகம் உள்ளது. திருமண யோகம் உண்டாகும். குடும்பத்திற்குள் புதிய வரவு ஏற்படும். குரு அதிசாரப் பெயர்ச்சியில் கடன், ஆரோக்கியம், எதிரிகள் விஷயத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். யார் உங்கள் எதிரி என்பதில் கவனம் தேவை. சிம்ம ராசியினருக்கு குரு அதிசாரமாகி ராசிக்குள் வருவதால் முகம் பொழிவடையும். இதுவரை இருந்து கவலை எல்லாம் நீங்கி முகம் தெளிவடையும். மனதில் தைரியம் ஏற்படும். சின்ன சின்ன விஷயங்களுக்கும் மற்றவர்களை சார்ந்திருந்த தன்மைகல் மாறும். தன் வேலையை தானே பார்க்கக்கூடிய அமைப்பு ஏற்படும். நல்ல பழக்க வழக்கங்களை இனி தொடங்குவீர்கள். வயதுக்கு தகுந்தாற்போல உடலமைப்பை மாற்றுவதற்கான ஆர்வம் ஏற்படும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை இனி தொடங்குவீர்கள். கடவுளை கும்பிடுவதற்காக நேரத்தை ஒதுக்குவீர்கள். அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு மாறக்கூடிய நேரமாக இந்த குரு அதிசாரப் பெயர்ச்சி அமையும். வேலை, தொழில் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் பதவி உயர்வு கண்டிப்பாக கிடைக்கும். அலுவலகத்தில் மானக் குறைபாடு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கும். வீட்டு சூழ்நிலை, கடன் போன்றவற்றை மனதில் வைத்து வேலை செய்து கொண்டிருந்த நிலைமை எல்லாம் மாறி, சுமூகமான நிலைமைகள் ஏற்படும். மேலதிகாரிகளிடம் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். தொழில் செய்யக்கூடியவர்கள் கடன் அமைப்பில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். புதிய பார்ட்னர்களை இந்த 3 மாதம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தினந்தோறும் கோளார் பதிகம் கேட்பது நல்லது. பிரதோஷத்திற்கு தவறாமல் சிவன் கோயிலுக்குச் செல்வது நல்லது. வில்வம் சாற்றுவது, வில்வ இலையில் திருநீறு வைத்து வழிபாடு செய்வது நல்ல மாற்றங்கள் வரும். ஞாயிற்றுக்கிழமை தோறும் சாம்பார் சாதம் தானமாகக் கொடுப்பது ஏற்றத்தைத் தரும். திருவாணைக்காவல் ஜம்புகேஷ்வரர் அகிலாண்டேஷ்வரி அம்மனை வழிபாடு செய்வது சகலவித முன்னேற்றங்களையும் கொடுக்கும். கன்னி ராசியினருக்கு நிம்மதியான தூக்கம் வரக்கூடிய காலகட்டமாக இருக்கும். மன அழுத்தம், வேலை அழுத்தம் காரணமாக இருந்து வந்த தூக்கமின்மை நீங்கும். நல்ல சாப்பாடு கிடைக்கும். நல்ல உணவு, நல்ல தூக்கம், நிம்மதி கிடைக்கக்கூடிய அமைப்பு. 12க்கு குரு வரும்போது நிம்மதி உண்டாகும். செலவுகள் அதிகமாக இருந்த நிலைமைகள் மாறி கட்டுக்குள் வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாபம் கிடைக்கக்கூடிய அமைப்பு உள்ளது. நகைத் தொழில், ஏற்றுமதி தொழில், சேவைத் துறை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம், மாற்றம் வரும். வேலை அமைப்புகளில் இடமாற்றம் கிடைக்கும். வெளியூர், உள்ளூர் இடமாற்றம் கிடைக்கும். வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு விசா, பிஆர், சிட்டிசன்ஷிப் போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வெளிமாநிலங்களில் வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். தாம்பத்திய வாழ்க்கையில் இருந்த வந்த தடைகள் நீங்கும். நல்லபடியாக திருமணக்கும் நடக்கும் யோகம் ஏற்படும். திடீர் திருமண யோகம் ஏற்படும். 7 ஆம் இடத்தில் சனி இருப்பதால் ஜாதகம் பார்த்து திருமண் செய்வது நன்மை பயக்கும். காதல் திருமணத்துக்கு குடும்பத்தில் பச்சைக் கொடி காட்டுவார்கள். தினந்தோறும் வீட்டில் அனுமன் சாலிஷா கேட்பது, படிப்பது நன்மை பயக்கும். தினந்தோறும் 15 நிமிடம் தியானம் செய்வது நன்மை பயக்கும். எள் தானமாகக் கொடுப்பது நல்ல மாற்றங்களைத் தரும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது மேன்மையைக் கொடுக்கும். ஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்குச் சென்று வருவது சகலவித நன்மைகளையும் ஏற்படுத்தும்.கடகம் ராசி பலன்
சிம்ம ராசி பலன்
கன்னி ராசி பலன்