குரு அதிசாரப் பெயர்ச்சி 2026: தனுசு ராசிக்கு அடிக்கப் போகும் ஜாக்பாட்..கடன் தீரும்..கல்யாணம் கைகூடும்

  • குரு அதிசாரப் பெயர்ச்சி: கடகத்தில் இருந்து குரு பகவான் அதிசாரமாக சிம்மத்திற்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சி நிகழ்வால் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    கடகத்தில் இருக்கும் குரு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு சிம்மத்திற்கு வருகிறார். மீண்டும் வக்கிரமாகி பின்னோக்கி கடகத்திற்குச் செல்வார். இந்த நிகழ்வே குரு அதிசாரப் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. சுமார் 90 நாட்கள் அதிசாரம் நடக்கும். 9 கிரகங்களுக்கும் அதிசாரம் நடைபெறும். இந்த கிரக மாற்றத்தின்போது 12 ராசிகளுக்கும் பல்வேறு பலன்கள் கிடைக்கும்.

    Advertisement

    அக்டோபர் 31 ஆம் தேதி பகல் 12.05 மணிக்கு குரு அதிசாரமடைகிறார். ஜனவரி 25 ஆம் தேதி இந்த நிகழ்வு நிறைவடைகிறது. அதன்படி, இந்த 3 மாதங்களில் குரு அதிசாரப் பெயர்ச்சியால் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    தனுசு ராசி பலன்

    தனுசு ராசியினருக்கு குரு பகவான் 9 ஆம் இடத்துக்கு வருகிறார். இதுவரை படாத துன்பங்களை, வெளியில் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வந்திருப்பீர்கள். தற்போது, பாக்கிய ஸ்தானத்தில் குரு பகவான் வருவதால் வயதிற்கு தகுந்த நல்ல பலன்கள் கிடைக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவர்கள் வாழ்க்கைக்கான முன்னேற்றங்களும் அனைத்தும் நடக்கும் காலகட்டம்.

    Advertisement

    தொழில் தொடங்கலாம்

    மாணவர்களுக்கு படிப்பு நன்றாக இருக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் ஏற்படும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமண யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத் தொழிலை செய்ய ஆசைப்படுபவர்களுக்கு அதனைத் தொடங்குவதற்கான காலகட்டமாக இருக்கும். புதிய தொழிலிலும் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். அப்பாவின் மூலமாக பொருளாதாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பார்ட்னர்ஷிப்பை தவிர்த்துக் கொள்வது நல்லது.

    பதவி உயர்வு

    ஆன்மிகம், கல்வி, நகை, நிதி சார்ந்த தொழில்களில் வெற்றி பெறும் அமைப்பு உள்ளது. இ-காமர்ஸ் பிசினஸில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை அமைப்புகளில் நல்ல பதவி உயர்வு கிடைக்கும். 9க்கு குரு பகவான் வருவதால் பூர்வ புண்ணிய பலன்களால் நல்ல கணவன், மனைவி அடைவதற்கான வாய்ப்பு ஏற்படும். நீண்ட காலமாக உறவில் இருப்பவர்கள் வீட்டில் சொல்லி திருமணம் செய்யக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

    Advertisement

    பணவரவு

    அப்பா வழி சொந்தங்கள், அவருடைய சொந்தங்கள் மூலமாக மாப்பிள்ளை, பெண் அமையும் வாய்ப்புள்ளது. கடன் பிரச்சனைகளில் இருந்து வெளிவரக்கூடிய அமைப்பு உள்ளது. பொருளாதார நெருக்கடி இதுவரை அதிபயங்கரமாக இருந்திருக்கும். இனிமேல் அந்த சிக்கலில் இருந்து வெளிவருவீர்கள். உங்கள் துணையின் மூலமாக நல்ல பணவரவு ஏற்படும். பொருளாதார உதவிகள் கிடைக்கும்.

    கவனம்

    இரக்க குணம் அதிகமாக இருக்கும் காலகட்டம் என்பதால் தகுதியான நபர்களுக்கு பணம் கொடுப்பது நல்லது. ரகசியங்களை மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது. யாரிடமும் பகிராமல் இருப்பது நன்மை பயக்கும். தொப்பை போடுவது, எடை கூடுவது, ஜாயிண்டுளில் பிரச்சனை வர வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்.

    Advertisement

    வழிபாடு

    அபிராமி அந்தாதியை தினமும் கேட்பது, படிப்பது ஏற்றத்தைத் தரும். தினந்தோறும் குங்குமத்தை நெற்றியில் வைப்பது நன்மை பயக்கும். அப்பாவின் முன்னோர் படங்களை வைத்து வழிபாடு செய்வது, பரிகாரத் தலங்களுக்குச் செல்வது தெய்வத்தின் பரிபூரண அருளைக் கொடுக்கும். வியாழக்கிழமை தோறும் மெளன விரதம் இருப்பது நல்லது. யானை, குதிரைக்கு உங்களால் முடிந்த உதவியை செய்வது மேன்மையைத் தரும். ஸ்ரீ முஷ்ணம் சென்று வழிபாடு செய்வது பூர்வ ஜென்ம பாவங்களை நீக்கும்.

    English Summary

    Guru Adhisara Peyarchi 2026 is predicted to bring Dhanusu Rasi natives new opportunities, career growth, financial improvement, and relationship harmony, while advising caution in business partnerships and debt.