ரிஷபம் வார ராசி பலன்: அக்.26 முதல் வேலை, தொழிலில் அதிரடி முன்னேற்றம்.. பிரச்சனைகள் தீரும்

  • Rasi palan this week: அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் ரிஷபம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    கன்னியில் இருக்கும் சூரிய பகவான் துலாம் ராசிக்கு வரக்கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். இந்த மாதத்தில் நிறைய பிரச்சனைகள் தீரும். கும்பம், ரிஷபம், கன்னி ஆகிய ராசிக்கு இந்த வாரத்தில் அபாரமான முன்னேற்றம் ஏற்படும். சந்திரன் தனுசு ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். செவ்வாய், குரு இணைவதால் அபரிமிதமான மாற்றமும், எதிர்பாராத சுப நிகழ்ச்சியும் நடக்கும் வாய்ப்புள்ளது.

    அதன்படி, அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    Advertisement

    ரிஷபம் ராசி பலன்

    ரிஷபம் ராசியினருக்கு வயிறு, முதுகு தொடர்பான பாதிப்புகளை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களிலும் ஏற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சநை தீரும். கொடுத்த வாக்கை வீட்டிலும், வெளியிடத்திலும் காப்பாற்றக்கூடிய அற்புதமான அமைப்பு உள்ளது.

    யோக பலன்

    தொழில், வியாபாரம், படிப்பு, வேலையில் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு யோக பலன்கள் கிடைக்கும். இதுவரை இருந்து வந்த பலவிதமான சங்கடங்கள் எல்லாம் பரிபூரணமாக நிவரத்தியாகும். உத்தியோகம் ரீதியாக அற்புதமான ஏற்றங்கள் உண்டாகும். கடல் கடந்து தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் வெற்றி பெறும் அமைப்பு உள்ளது.

    Advertisement

    பிரச்சனை தீரும்

    28, 29 ஆம் தேதிகளில் குழப்பங்கள், செலவுகள் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் ஏராளமான சந்தோஷங்கள் ஏற்படும். கடன், வழக்குகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். புதிய வேலைகள் கிடைக்கும். இளைய சகோதரன், சகோதரியுடைய வாழ்க்கை, உங்களுடைய கை, மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

    கவனம்

    வேலை, தொழில், அந்தஸ்து, உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றங்கள் காணப்படும். பெரிய மாற்றங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் இருக்கும் என்பதால் மிகுந்த கவனம் தேவை. ஆவணங்கள் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தங்கத்தில் முதலீடு செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் யோகத்தைக் கொடுக்கும்.

    English Summary

    Weekly rasi palan: In this feature, we look at the lucky outcomes, remedial measures, deities to worship, and areas requiring caution for the Rishabam (Taurus) sign during the period from October 26 to November 1.