இன்னைக்கு ஒரு பிடி.. பிரியாணியுடன் களை கட்டிய தீபாவளி! திருப்பூரில் அலைமோதிய வாடிக்கையாளர்கள்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூரில் இன்று பிர்யாணியுடன் தீபாவளி களை கட்டியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு இனிப்பு பலகாரங்கள் செய்தும், மாட்டன் குழம்பு செய்தும் வீடுகளில் அசைவ உணவுடன் ஏராளமானவர்கள் தீபாவளி கொண்டாடும் நிலையில், திருப்பூரில் ஏராளமானவர்கள் பிரியாணி கடைகளில் பிரியாணி வாங்கி திகட்ட திகட்ட கொண்டாடியுள்ளனர். பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றதால் வழக்கத்துக்கு மாறாக இருமடங்கு பிரியாணி விற்பனை இருந்தது. இதனால் பிரியாணி கடைகளில் பெரும்பாலானவற்றில் பார்சல் மட்டும் வழங்கப்பட்டது.

தீபாவளி பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. காலையிலேயே எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து இனிப்புகளை பரிமாறிக்கொண்டதோடு, பட்டாசுகளை கொளுத்தியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Diwali Celebrations Customers Flock to Biryani Shops in Tiruppur

தொழில் நகரமான திருப்பூரிலும் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக பரஸ்பரம் தீபாவளி வாழ்த்துகளை கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு இனிப்பு பலகாரங்கள் செய்தும், மாட்டன் குழம்பு செய்தும் வீடுகளில் அசைவ உணவுடன் ஏராளமானவர்கள் தீபாவளி கொண்டாடும் நிலையில், திருப்பூர் பகுதி பொதுமக்களில் ஏராளமானவர்கள் பிரியாணி கடைகளில் பிரியாணி வாங்கி தீபாவளியை உற்சாகமாக பிரியாணி உடன் கொண்டாடுகின்றனர்.

இதனால் திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள சிடிசி கார்னர் பகுதியில் உள்ள 50 க்கும் மேற்பட்ட பிரியாணி கடைகளில் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் ஒவ்வொரு பிரியாணி கடைகளிலும் வரிசையில் நின்று பிரியாணி பார்சல் வாங்கி சென்றனர். பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றதால் வழக்கத்துக்கு மாறாக இருமடங்கு பிரியாணி விற்பனை இருந்தது.

கூட்டம் காரணமாக பிரியாணி கடைகளில் பெரும்பாலானவற்றில் பார்சல் மட்டும் வழங்கினார்கள். தமிழகம் முழுக்க தீபாவளி பண்டிகை களை கட்டியுள்ள நிலையில், கறி கடைகளிலும் கூட்டம் அலை மோதியது. பெரும்பாலான நகரங்களில் பிரியாணி கடைகளிலும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதை காண முடிந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+