சென்னை: சென்னையில் இயங்கி வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ நாளை, நாளை மறுநாள் என்று 2 நாட்கள் நடைபெற உள்ளது. பிகாம், எம்காம், எம்பிஏ (பைனான்ஸ்) உள்ளிட்ட படிப்புகளை படித்தவர்கள் நேரடியாக இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
எச்சிஎல் நிறுவனத்தில் அசோசியேட் மேனேஜர் (Associate Manager) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பில்லிங் ஆபரேஷன் பிரிவில் நியமனம் என்பது இருக்கும். இந்த பணிக்கான இண்டர்வியூவில், பிகாம்/எம்காம், எம்பிஏ (பைனான்ஸ்) உள்ளிட்ட படிப்புகளை முடித்து சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 10 - 12 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் பங்கேற்கலாம். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோருக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும். 10-12 ஆண்டுகள் வரை ஓடிசி பில்லிங் ஆபரேஷனில் அனுபவம் இருக்க வேண்டம். SAP அல்லது பிற பில்லிங் தொடர்புடைய இஆர்பி சிஸ்டம் பற்றி தெரிந்திருக்க வேண்டும். 20 முதல் 25+க்கும் அதிகமானவர்களை கொண்ட டீமை மேனேஜ் செய்த அனுபவம் இருக்க வேண்டும். அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். யுடிலிட்டி கிளைன்ட் இருந்தால் பிளஸ் பாயிண்ட்டாகும். இதுதவிர OTC, பில்லிங் ஆபரேஷன், இன்வாய்ஸ் புராசசிங் மற்றும் வேலிடேஷன், SAP/ERP சிஸ்டம்ஸ், டீம் லிடர்ஷிப், கஸ்டமர் சர்வீஸ் எக்ஸலன்ஸ், எம்எஸ் எக்ஸலில் நல்ல அனுபவம் உள்ளிட்டவை இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமை அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இண்டர்வியூ செல்வோர் லேப்டாப்எடுத்து செல்ல அனுமதியில்லை. அதேவேளையில் அரசு அடையாள அட்டை, இண்டர்வியூக்கான சான்றுகள் உள்பட பிறவற்றை கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும். இந்த பணிக்கான இண்டர்வியூ ஆகஸ்ட் 8 (நாளை), ஆகஸ்ட் 9 (நாளை மறுநாள்) என காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை 2 நாட்கள் நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் No 602/3, 138, Elcot Speical Economic Zone (SEZ), Gate 2, Tower 4, Near Sholinganallur, Medavakkam High Road,Sholinganallur, Chennai, Tamil Nadu 600 119 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here