அடுத்தடுத்து காவிரி ஆற்றுக்குள் குதித்த விவசாயிகள்.. தமிழகத்துக்கு தண்ணீர் விட கடும் எதிர்ப்பு

  • பெங்களூர்: காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கூடாது என்று தொடர்ந்து கர்நாடகாவில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தமிழகத்துக்கு ரகசியமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி மண்டியாவை சேர்ந்த விவசாயிகள் அடுத்தடுத்து காவிரி ஆற்றில் குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Advertisement

    தமிழகத்துக்கு காவிரியில் 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    ஆனால் கர்நாடகா முறையாக தண்ணீர் திறப்பது இல்லை. இதற்கு முக்கிய காரணம் தமிழகத்துக்கு தண்ணீர்தறிக்க கூடாது என்று அங்கு நடக்கும் போராட்டம் தான்.

    இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வர உள்ளது. இதற்கிடையே தான் தமிழகத்துக்கு கபினி அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. ஆனால் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள கேஆர்எஸ் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாமல் இருந்தது.

    இதற்கிடையே நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 80 மதகுகள் வழியாக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதற்கு விவசாய சங்கத்தினர், எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

    Advertisement

    இந்நிலையில் தான் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்படுவதை எதிர்த்து மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் பாயும் காவிரி ஆற்றில் குதித்து 'பூமித்தாய் போராட்ட சமீதி' எனு் விவசாய அமைப்பினர் விவசாய சங்க தலைவர் நஞ்சுண்டே கவுடா முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் காவிரி ஆற்றுக்குள் இறங்கி கோஷமிட்டனர்.

    அப்போது, ''தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டுள்ள கர்நாடகா அரசு ஒழிக.. தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டுள்ள கர்நாடகா முதல்வர் (டிகே சிவக்குமார்) ஒழிக.. தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டுள்ள கர்நாடகா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் (செலுவராயசாமி) ஒழிக.. தமிழகத்துக்கு தண்ணீர் திறந்தும் வாய்த்திறக்காமல் உள்ள மண்டியா மக்கள் பிரதிநிதிகள் ஒழிக.. '' என கோஷமிட்டனர்

    Advertisement

    இதற்கிடையே தான் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் செலுவராயசாமி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதை முற்றிலுமாக மறுத்துள்ளார். இதுபற்றி அவர், ''கேஆர்எஸ். அணையில் இருந்து இதுவரை தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் எதுவும் திறக்கப்படவில்லை. ஜூன் மாதத்தில் இருந்தே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்திருக்க வேண்டும்.

    ஆனால் தண்ணீர் திறக்கவில்லை. தற்போது, வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீரைத் திறக்குமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அதேபோல் அணைகளின் கசிவு நீரும் தமிழகம் செல்கிறது'' என்றார்.

    English Summary

    Protests against the release of Cauvery water to Tamil Nadu have been ongoing in Karnataka. Amidst this, a major stir has been caused by farmers from Mandya who, alleging that water was being secretly released to Tamil Nadu, staged a protest by repeatedly jumping into the Cauvery River.