ஹெச்டிஎப்சி vs ஐசிஐசிஐ vs யெஸ் வங்கி: காலாண்டு முடிவுகள் சொல்லும் ரகசியம்.. முதல்ல இதை செக் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2025-26 நிதியாண்டின் நான்காவது காலாண்டு முடிவுகளை இந்திய நிறுவனங்கள் அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் யெஸ் வங்கி ஆகிய மூன்று பெரிய தனியார் வங்கிகளின் பங்கு விலையில் சமீபத்தில் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டு உள்ளது. இந்த நிலையில் இக்காலாண்டு முடிவுகள் இந்த 3 வங்கி பங்கள் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த 3 வங்கி பங்குகள் மீது முதலீடு செய்தவர்கள் அடுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை விரிவாக பார்ப்போம். மேலும் இன்றைய வர்த்தகத்தில் 3 வங்கி பங்குகள் நிலை என்ன..?

Stock market HDFC bank ICICI bank investment HDFC vs ICICI vs Yes Bank Q4 Results Bank Stocks Q4 FY26 ICICI Bank Strong Growth HDFC Bank Profit Analysis Yes Bank Asset Quality Improvement hdfc vs icici vs yes bank q4 fy26 icici bank q4 results 2026 hdfc bank profit growth q4 yes bank gnpa improvement icici bank share price today hdfc bank stock reaction q4 yes bank npa reduction q4 best bank stock for long term nim comparison hdfc icici yes bank nii growth private banks india asset quality private banks q4 fy26 icici bank compounding story hdfc bank stability vs growth yes bank turnaround progress q4 bank results stock impact Q4 FY26 vs vs q4 fy26 q4 q4 gnpa q4 npa nim nii q4 fy26 vs q4

பங்கு விலை நிலவரம்

ஐசிஐசிஐ வங்கி பங்குகள் காலை மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் 2 சதவீதம் மேல் உயர்த்த நிலையில் மதியம் 2.29 மணிக்கு வெறும் 0.86 சதவீதம் மட்டுமே உயர்ந்து ரூ.1,359.10-ஆக வர்த்தகமானது. இதன் சந்தை மதிப்பு ரூ.9,84,666.91 கோடியாக உயர்ந்தது. யெஸ் வங்கி பங்கு 1.24 சதவீதம் சரிந்து ரூ.19.95 ஆக உள்ளது. மறுபுறம் ஹெச்டிஎப்சி வங்கி பங்கு இன்று காலையில் பெரும் சரிவில் இருந்து மீண்டு தற்போது வெறும் 0.16 சதவீதம் சரிவுடன் ரூ.798.95-ஆக வர்த்தகமானது.

லாப வளர்ச்சியில் யார் முன்னிலை?

லாப வளர்ச்சியில் யெஸ் வங்கி முன்னிலை வகிக்கிறது. ஹெச்டிஎப்சி வங்கி ரூ.19,221 கோடி லாபத்தைப் பதிவு செய்து, வருடாந்திர அடிப்படையில் 9.11 சதவீதம் வளர்ச்சியைக் காட்டியது. ஐசிஐசிஐ வங்கி ரூ.13,701 கோடி லாபத்துடன் 8.5 சதவீதம் ஆண்டு வளர்ச்சியையும், 21 சதவீதம் காலாண்டு வளர்ச்சியையும் (QoQ) அடைந்தது.

யெஸ் வங்கி கடந்த ஆண்டு மார்ச் காலாண்டில் 738 கோடியாக இருந்த நிகர லாபம், இந்த ஆண்டு 44.8% உயர்ந்து 1,068.4 கோடியாக உயர்ந்துள்ளது.

நிகர வட்டி வருமானம் (NII) மற்றும் நிகர வட்டி மார்ஜின் (NIM)

ஹெச்டிஎப்சி வங்கி-இன் நிகர வட்டி வருமானம் மார்ச் காலாண்டில் ரூ.33,281 கோடியாக இருந்தது. இது வருடாந்திர அடிப்படையில் 3.8 சதவீதம் வளர்ச்சியைக் காட்டுகிறது. அதன் நிகர வட்டி மார்ஜின் மொத்த சொத்துகளின் அடிப்படையில் 3.38 சதவீதமாகவும், வட்டி ஈட்டும் சொத்துகளின் அடிப்படையில் 3.53 சதவீதமாகவும் இருந்தது.

ஐசிஐசிஐ வங்கியின் நிகர வட்டி வருமானம் 8.4 சதவீதம் அதிகரித்து 22,979 கோடி ரூபாயாக உள்ளது. இதேபோல் நிகர வட்டி மார்ஜின் 4.30 சதவீதம் உயர்ந்துள்ளது.

மேலும் யெஸ் வங்கியின் நிகர வட்டி வருமானம் 16 சதவீதம் அதிகரித்து 2276 கோடி ரூபாயாக உள்ளது. இதேபோல் நிகர வட்டி மார்ஜின் 2.7 சதவீதம் உயர்ந்துள்ளது.

சொத்து தரம் (Asset Quality)

ஹெச்டிஎப்சி வங்கி Q4 காலாண்டில் தனது சொத்து தரத்தை மேம்படுத்தியுள்ளது. மொத்த வாராக் கடன் விகிதம் (GNPA) 1.24% இலிருந்து 1.15% ஆக குறைந்துள்ளது. நெட் NPA 0.42% இலிருந்து 0.38% ஆக சரிந்துள்ளது. மொத்த GNPA ₹34,061.2 கோடியாக உள்ளது.

ஐசிஐசிஐ வங்கி தொடர்ந்து சொத்து தரத்தில் முன்னேற்றம் காட்டியுள்ளது. GNPA 1.53% இலிருந்து 1.40% ஆக குறைந்ததுடன், கடந்த ஆண்டின் 1.67% இலிருந்தும் குறைந்துள்ளது. நெட் NPA 0.33% ஆக குறைந்துள்ளது. புதிய NPA சேர்த்தாலும், மீட்பு மற்றும் write-off மூலம் சமநிலை கணப்பட்டு உள்ளது.

யெஸ் வங்கி முக்கியமான முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. GNPA 1.5% இலிருந்து 1.30% ஆக குறைந்துள்ளது. நெட் NPA 0.3% இலிருந்து 0.20% ஆக சரிந்துள்ளது. FY2020க்கு பிறகு இதுவே வங்கியின் குறைந்த NPA நிலையாகும்.

எந்த வங்கி சிறப்பாக உள்ளது?

ஹெச்டிஎப்சி வங்கி நிதி நிலையிலும், வங்கி செயல்பாட்டிலும் நிலைத்தன்மையிலும் முன்னிலையில் உள்ளது. அதன் சொத்து தரம் சிறந்த நிலையில் இருந்தாலும், வளர்ச்சி வேகம் சற்று மெதுவாக உள்ளது முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டும். ஐசிஐசிஐ வங்கி வலுவான வளர்ச்சி, சிறந்த நிகர வட்டி மார்ஜின் மற்றும் நீண்ட காலக் கண்ணோட்டத்தில் உயர் தரமான வளர்ச்சியை வழங்கும் வங்கியாக திகழ்கிறது. யெஸ் வங்கி சொத்து தரத்தில் முன்னேற்றம் காட்டினாலும், லாபத்தன்மை மற்றும் செயல்பாட்டில் பிரச்சனைகள் இன்னும் உள்ளது.

மூன்று வங்கிகளிலும் ஐசிஐசிஐ வங்கி தான் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு மிகவும் ஈர்க்கக்கூடிய மற்றும் உயர் தரமான வளர்ச்சிக் பங்காக உள்ளது. இதேவேளையில் ஹெச்டிஎப்சி வங்கி நிலையான மற்றும் பாதுகாப்பான தேர்வாக இருக்கும்.

முதலீட்டாளர்கள் இலக்கு மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப இந்த வங்கி பங்குகளில் முதலீடு செய்யலாம் என தேர்வு செய்யலாம். தற்போதைய சந்தை நிலவரத்தில் ஐசிஐசிஐ வங்கி-இன் செயல்பாடு மிகவும் சமநிலையானதாகவும், எதிர்கால வளர்ச்சிக்கு உகந்ததாகவும் பார்க்கப்படுகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Tamil.oneindia.com அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+