இந்தியாவுக்கு தங்கம் எப்படி வருகிறது? நகை கடைகளை விட பெரிய கில்லாடி இவங்க தான்!

Subscribe to Oneindia Tamil

இந்தியர்களுக்கு தங்கம் என்றால் உணர்ச்சி பொங்கும் விஷயமாக தான் பார்க்கிறார்கள், திருமணம், பண்டிகை, முதலீடு என எல்லா நேரத்திலும் தங்கத்துக்கான டிமாண்ட் இந்திய சந்தையில் இருந்து வருகிறது. ஆனால் இந்த தங்கம் நம்முடைய நாட்டுக்குள் எப்படி வருகிறது, யார் கொண்டு வருகிறார்கள், எந்த முறையில் வருகிறது என்பதை பலருக்கும் தெரியாது.

எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் வெளிநாட்டில் ஆர்டர் செய்தால் விமானம் மூலம் இந்தியாவில் சப்ளை செய்யப்படும் என்பது தான் எல்லோருக்கும் தெரிந்த ஒகு விஷயமாக இருக்கிறது. ஆனால் இத்தகைய முறையில் ஒகு சில கிராமுகளை மட்டுமே கொண்டு வர முடியும்.

Gold silver import How Gold is Imported to India RBI Gold Import Rules Consignment Basis Gold Import Banks Controlling Gold Market India Gold Import Process Explained how gold reaches india gold import process india rbi gold import methods consignment basis gold import banks importing gold in india hdfc sbi icici gold import mmtc gold import gold consignment explained rbi circular 1998 gold import who imports gold to india only 30-40 players control gold market india gold import dealers in india silver import dealers india gold vault banks india legal gold import channels india 1998 30-40

இந்தியா முழுக்க தேவையான தங்கத்தை தினமும் டன் கணக்கில் கொண்டுவர பெரிய சிஸ்டம் செயல்பட்டு வருகிறது. இது சற்று சிக்கலான செயல்முறை. 1998ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி (RBI) ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டது, இந்த அறிக்கைக்கு பின்பு தான் தங்க இறக்குமதியில் பெரும் மாற்றம் இந்தியாவில் வந்தது.

இந்த அறிக்கையில் இந்தியாவில் தங்கம் இறக்குமதி செய்ய வேண்டும் என்றால் நான்கு முறைகளின் கீழ் மட்டுமே அனுமதிக்கப்பட்டும் என அறிவித்தது. இதன் மூலம் பல வழிகளை தடைபெற்ற மொத்த இறக்குமதியும் அரசு மற்றும் நிதி அமைப்பின் கட்டுப்பாட்டிற்குள் வந்து. இன்று முதல் இன்று வரையில் இந்த நான்கு வழிகளில் தான் இந்தியாவுக்கு தங்கம் வருகிறது.

ஆர்பிஐ அனுமதித்த நான்கு தங்க இறக்குமதி முறைகள்

முதல் முறை - நேரடி வாங்குதல். வெளிநாட்டில் தங்கத்தை நேரடியாக வாங்கி, இந்தியாவுக்குள் கொண்டு வருவது. இதற்கு இறக்குமதி வரி முழுமையாக கட்ட வேண்டும்.

இரண்டாவது முறை - கடன் அடிப்படையில் தங்கம் வாங்குவது. தங்கத்தை வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து கடனாகப் பெற்று, பின்னர் அதே அளவு தங்கத்தை திருப்பிக் கொடுப்பது.

மூன்றாவது முறை - வாங்குபவர் அல்லது விற்பவர் கடன் முறை. தங்கத்தை கடனில் வாங்கி, பின்னர் அதற்கான பணத்தை திருப்பிக் கொடுப்பது.

நான்காவது மற்றும் இன்று மிக அதிகம் பயன்படுத்தப்படும் முறை கன்சைன்மென்ட் அடிப்படை. இன்று பெரும்பாலான தங்கம் வரும் கன்சைன்மென்ட் முறையில் தான் வர்த்தகமாகிறது.

கன்சைன்மென்ட் முறை

கன்சைன்மென்ட் முறையை எளிதாக புரிந்துகொள்ள ஒரு உதாரணத்துடன் பார்ப்போம். ஒரு மளிகைக்கடைக்கு ஒருவர் தனது புதிய பிஸ்கட் பாக்கெட்-ஐ விற்க வேண்டும் என்று நினைக்கிறார்.

"என்னுடைய பொருளை உங்கள் கடையில் வைத்து விற்கலாமா?" என்று கேட்கிறார். கடைக்காரர் "சரி, வைத்துவிடுங்கள். பிஸ்கட் விற்றால் பணம் தருகிறேன். விற்காவிட்டால் உங்கள் பொருளை எடுத்துக்கொண்டு போய்விடுங்கள்" என்று சொல்வார். விற்கப்பட்ட பிஸ்கட்க்கு கமிஷன் அல்லது விற்பனை விலையில் லாபம் என ஏதாவாது ஒன்று கடைக்காரர்கள் பெறுவார்கள் இதே மாதிரிதான் கன்சைன்மென்ட் முறையும் செயல்படுகிறது.

உலக நாடுகளில் உள்ள சப்ளையர்கள் தங்களுதை தங்கத்தை இந்தியாவில் விற்பனை செய்ய வேண்டும் என்றால், நேரடியாக விற்க முடியாது. இந்தியாவில் உள்ள ஒரு வங்கி அதை வாங்கி தனது லாக்கரில் பத்திரமாக வைக்கும். யாராவது வாங்க விரும்பினால் அந்த தங்கத்தை விற்று, பணத்தை சப்ளையருக்கு அனுப்புகிறது. விற்கப்படும் வரை சப்ளையருக்கு பணம் கொடுக்கப்படாது. இந்த முறையில் தான் இன்று இந்தியாவுக்கு அதிகபட்சமாக தங்கம் வருகிறது.

யார் இந்தியாவுக்கு தங்கம் இறக்குமதி செய்கிறார்கள்?

தங்கம் இறக்குமதி செய்யும் உரிமை எல்லோருக்கும் கிடையாது. மொத்த இந்தியாவிலும் லீகலாக தங்கம் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டவர்கள் மிகக் குறைவு. தனிநபர் மற்றும் நிறுவனங்கள் என அனைத்தையும் சேர்த்து சுமார் 50 முதல் 60 மட்டுமே தங்க இறக்குமதி செய்வதற்கான உரிமத்தைப் பெற்றுள்ளனர். வெள்ளி இறக்குமதிக்கு மட்டும் 20 டீலர்கள் உள்ளனர்.

தங்கம் மற்றும் வெள்ளி இரண்டையும் சேர்த்து பார்த்தால் மொத்தம் 30 முதல் 40 பெரிய நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவின் முழு சந்தையையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவர்களைத் தேர்வு செய்தது ரிசர்வ் வங்கிதான். இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயம் செய்வதில் இவர்களுக்கு தான் முக்கிய பங்கு உள்ளது.

இந்த பட்டியலில் முன்னணி வங்கிகள் ஹெச்டிஎப்சி வங்கி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் பேங்க், கோடக் மஹிந்திரா பேங்க் ஆகியவை அடங்கும். இந்த வங்கிகள் தங்கத்தை வாங்கி தங்கள் வால்ட்டில் பாதுகாப்பாக வைத்து, விற்பனை நடைபெறும் போது சப்ளையருக்கு பணத்தை அனுப்புகின்றன. இதுதவிர MMTC போன்ற சில சிறப்பு ஏஜென்சிகளும் சட்டபூர்வமாக தங்கம் இறக்குமதி செய்கின்றன. இவர்கள் மூலமாகத்தான் இந்தியாவின் தங்கத் தேவை பெரும்பாலும் நிறைவேற்றப்படுகிறது.

இந்த சிக்கலான முறை காரணமாகவே தங்கத்தின் விலை நிலையாக இருக்கிறது மற்றும் முறைகேடாக இறக்குமதி கட்டுப்படுத்தப்படுகிறது. எளிய மக்களுக்கு இது ஒரு பெரிய விஷயமாகத் தெரியாவிட்டாலும், நமது நாட்டின் பொருளாதாரம் மற்றும் தங்கச் சந்தையின் பின்னணியில் இந்த சில பெரிய வங்கிகளும் ஏஜென்சிகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த அமைப்பு சரியாக இயங்குவதால்தான் நாம் தங்கத்தை நம்பிக்கையுடன் வாங்க முடிகிறது.

வங்கிகளுக்கு தங்கத்தை வாங்கி வைக்கவும், விற்கவும் கமிஷன் மற்றும் பிராசசிங் கட்டணத்தை சப்ளையர் மற்றும் வாங்குபவர்களிடம் வசூலித்துக்கொள்ளும். இதுவே யார் வேண்டுமானாலும் இறக்குமதி செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் இறக்குமதி செய்யலாம் என்ற நிலை இருந்தால் தங்கம் விலை நிர்ணயம் செய்வதில் பெரும் குளறுபடி உருவாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+