ஈரான் போர் முடிவுக்கு வருகிறது.. ஈரான் வைத்த ஒரேயொரு கண்டிஷன்.. அடம்பிடிக்கும் டிரம்ப்!
தெஹ்ரான்: ஈரான் அரசு பாகிஸ்தான் வாயிலாக அமெரிக்காவுக்கு ஒரு புதிய அமைதி ஒப்பந்த திட்டத்தை அளித்துள்ளது. இந்த திட்டம் நிறைவேறினால் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கப்படும், தற்போது நடைபெற்று வரும் போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் வெள்ளி, சனி ஆகிய நாடுகளில் ஈரானின் பாகிஸ்தான் பயணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக ஈரான் தலைவர் அப்பாஸ் பாகிஸ்தான் செல்வதாக அறிவித்த உடனே டிரம்ப் அமெரிக்க குழுவை அவசர அவசரமாக பாகிஸ்தானுக்கு செல்ல உத்தரவிட்டது, அதன் பின்பு பயணம் ரத்து செய்யப்பட்டது முதல் இன்று ஈரான் தலைவர் ரஷ்ய அதிபர் புடின்-ஐ சந்திப்பது என ஈரான் போர் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

இதற்கு ஏற்றார் போல் கச்சா எண்ணெய் விலை 1 சதவீதம் வரையில் உயர்ந்து உலக நாடுகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.15 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் விலை 106.5 டாலராக பியூச்சர்ஸ் மார்க்கெட்டில் (futures market) வர்த்தகமாகி வருகிறது.
ஈரானின் புதிய அமைதி ஒப்பந்த திட்டம்
ஈரான் முன்வைத்துள்ள இந்த புதிய திட்டத்தில் அணு ஆயுதங்கள், அணு சக்தி, யூரேனியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை பிந்தைய காலக்கட்டத்திற்கு தள்ளி வைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் உடனடியாக ஹார்முஸ் நீரிணை திறக்க முடியும், போர் நிறுத்தம் போன்ற முக்கிய விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்க முடியும் என ஈரான் பாகிஸ்தானிடம் தெரிவித்துள்ளது. இந்த அணுகுமுறை பேச்சுவார்த்தைகளை சுமூகமாக முன்னெடுக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்ப் நிலைப்பாடு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் தடை நடவடிக்கையை தொடர்ந்து நிலைநாட்ட விரும்புவதாக சிக்னல் அளித்துள்ளார். அதாவது போர் நிறுத்தம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இக்கடற்படை பாதுகாப்பு தொடர டிரம்ப் முடிவு செய்துள்ளார். இதன் மூலம் தொடர்ந்து ஈரானின் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவது மட்டும் அல்லாமல் ஹார்முஸ்-ஐ ஈரான் கைகளுக்கு செல்வதை தடுக்கவும் முடியும் என டிரம்ப் நம்புகிறார்.
மேலும் ஈரான் பாகிஸ்தானில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வெள்ளிக்கிழமை பயணத்தில் விருப்பம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், டிரம்ப் தனது சிறப்பு தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் பாகிஸ்தான் செல்லும் பயணத்தை ரத்து செய்ததாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த முடிவு தற்போதைய பேச்சுவார்த்தை சூழலை தெளிவாகக் காட்டுகிறது.
திங்கள்கிழமை முக்கிய சந்திப்பு
இதற்கிடையில் ஈரான் கொடுத்துள்ள புதிய அமைதி ஒப்பந்த திட்டம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று திங்கள்கிழமை தனது உயர்மட்ட தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை குழு உறுப்பினர்களுடன் சந்திப்பு நடத்த உள்ளார். இந்த சந்திப்பு வெள்ளை மாளிகையின் சிச்சுவேஷன் அறையில் நடைபெறும் என்று மூன்று அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த கூட்டத்தில் ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
மாஸ்கோ பயணம்
இதே திங்கட்கிழமை ஈரான் வெளியுறவு அதிகாரியான அராக்சி பாகிஸ்தான் பயணம் முடித்துவிட்டு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு பயணம் செய்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு தற்போதைய சர்வதேச நிலவரத்துடன் தொடர்புடையதாக அமையும்.
ஏற்கனவே ஈரான் அரசுக்கு ரஷ்யா ஒரு ஆஃபரை கொடுத்துள்ளது. அதாவது ஈரானிடம் இருக்கும் செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை ரஷ்யா வாங்கிக்கொள்ள தயார் என அறிவித்துள்ளது. இதன் மூலம் இரு நாடுகள் மத்தியிலான பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும் என தெரிவித்தது. இன்றைய சந்திப்பில் இதுவும் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது.














Click it and Unblock the Notifications