குவியும் பல டன் தங்கம்.. உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை எப்படி வாங்குகின்றன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

மும்பை: உலக நாடுகளின் மத்திய வங்கிகள் கடந்த சில காலமாகவே போட்டி போட்டுக் கொண்டு தங்கத்தை வாங்கி வருகின்றன. நாம் நமக்குத் தங்கம் தேவை என்றால் அருகே உள்ள நகைக் கடைக்குச் சென்று வாங்குவோம். அப்போது உலக நாடுகளின் மத்திய வங்கிகள் எங்குப் போய் தங்கத்தை வாங்கும்? இந்தக் கேள்வி பலருக்கும் இருக்கலாம். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

கடந்த சில ஆண்டுகளாகத் தங்கம் விலை புதிய உச்சத்திற்குப் போய்க் கொண்டு இருப்பது அனைவருக்கும் தெரியும். தங்கம் விலை ஏற்றத்திற்கு வேறு சில காரணங்கள் இருந்தாலும் கூட இந்தளவுக்கு விலை உச்சத்திற்குப் போக உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்குவதும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. 2022 முதல் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கம் வாங்கி வருவது, தங்கத்தின் விலையை வரலாறு காணாத உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

gold world investment

அது சரி, இந்தத் தங்கத்தை உலக நாடுகளின் மத்திய வங்கிகள் எங்கிருந்து வாங்குகின்றன. நாம் தங்கம் தேவை என்றால் நகைக் கடைக்குச் சென்று வாங்குவோம். அப்போது உலக நாடுகள் எங்குச் சென்று வாங்கும். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

உலக தங்க கவுன்சில்

உலக தங்க கவுன்சில் கடந்த 2025ம் ஆண்டின் தங்கக் கையிருப்புகள் குறித்த டேட்டாவை வெளியிட்டுள்ளது. அதில் சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள் வாங்கும் தங்கத்தில் 41% முந்தைய கையிருப்பாகவும், 32% ஓடிசி சந்தையிலிருந்தும் பெறப்படுகிறது. கையிருப்பு ஓகே அதென்ன ஓடிசி சந்தை என்று நீங்கள் கேட்கலாம். உலகளாவிய ஓவர்-தி-கவுண்டர் என்பதே ஓடிசி சந்தை எனப்படும்.

ஓடிசி

அதாவது எந்தவொரு எக்ஸ்சேஞ்ச் அல்லது இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக இரு தரப்பு வர்த்தகம் செய்வதே ஓடிசி சந்தை எனச் சொல்கிறார்கள். இதில் ஒரு எக்ஸ்சேஞ்ச் அல்லது இடைத்தரகர் தேவை இருக்காது. உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றால் நாம் ஒரு பங்கை வாங்குகிறோம் என்றால் அதை மும்பை பங்குச்சந்தை அல்லது தேசியப் பங்குச்சந்தை மூலம் வாங்குவோம். அது ஒரு எக்ஸ்சேஞ்ச். அதன் மூலமே நாம் பங்குகளை வாங்கவும் விற்கவும் முடியும். ஆனால், ஓடிசியில் நேரடியாக ஒரு பங்கை நாம் வாங்கலாம்.

இந்தியா சுவிட்சர்லாந்தில் இருந்து அதிகத் தங்கத்தை இறக்குமதி செய்கிறது. எந்தவொரு எக்ஸ்சேஞ்சும் இல்லாமல் நாம் சுவிட்சர்லாந்தில் இருந்து தங்கத்தை வாங்குகிறோம். இதுதான் ஓடிசி சந்தை எனப்படும். இந்தியா ஒவ்வொரு ஆண்டும் சுவிட்சர்லாந்து, ஐக்கிய அமீரகம், தென் ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்தே அதிகத் தங்கத்தை உற்பத்தி செய்வது குறிப்பிடத்தக்கது.

எங்கிருந்து வாங்குகிறது!

அதேபோல உள்நாடுகளில் உள்ள சுரங்கங்களில் இருந்தும் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்குகின்றன. உலகளவில் பார்க்கும் போது மத்திய வங்கிகள் தங்க உற்பத்தியாளர்கள், சிறு மற்றும் குறு தங்க உற்பத்தியாளர்கள் என இரு தரப்பிடம் இருந்தும் வாங்கும். குறிப்பாக 47% மத்திய வங்கிகள் பெரிய அளவிலான சுரங்கங்கள் மூலம் மட்டும் 37% தங்கத்தை வாங்கியுள்ளன. சிறு மற்றும் குறு தங்க உற்பத்தியாளர்களிடம் இருந்து 16% மட்டுமே தங்கத்தை வாங்கியுள்ளன.

தங்கம் நீண்ட காலமாகச் சர்வதேச வங்கிகள் தங்கத்தை வாங்கியே வருகின்றன. இந்த நாடுகள் ரிசர்வ் சொத்தாகத் தங்கத்தை வாங்கி வருகின்றன. ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் தங்கம் வாங்குவது பல மடங்கு அதிகரித்துள்ளன. பணவீக்கம் மற்றும் புவிசார் அரசியல் காரணங்களால் மத்திய வங்கிகள் அதிகளவில் தங்கத்தை வாங்கி வருகின்றன. அப்படி எந்தளவுக்கு அதிகம் எனக் கேட்கிறீர்களா.. கடந்த ஓராண்டில் ஒவ்வொரு மாதமும் மத்திய வங்கிகளின் சராசரியாக 27 டன் தங்கத்தை வாங்கியுள்ளன. குறிப்பாக கஜகஸ்தான், துருக்கி, போலந்து மற்றும் சீனா ஆகிய நாடுகளின் அதிகத் தங்கத்தை வாங்கியுள்ளன.

உலக நாடுகளின் மத்திய வங்கிகள்

பொதுவாக அமெரிக்காவில் மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்தும் போது தங்கம் விலை குறையும். கொரோனாவுக்குப் பிறகு கடந்தாண்டு வரை அமெரிக்க மத்திய வங்கி தொடர்ச்சியாகப் பல முறை வட்டி விகிதத்தை அதிகரித்தது. அப்படிப் பார்த்தால் தங்கம் விலை குறைந்திருக்க வேண்டும். ஆனால், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவித்ததாலேயே தங்கம் விலை பெரியளவில் குறையவில்லை. வரும் காலங்களிலும் உலக வங்கிகள் தங்கத்தின் கையிருப்பை அதிகரிக்கவே செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+