விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தால் MLA பதவி காலி.. எடப்பாடி தரப்பு எச்சரிக்கை! இரண்டாக பிளவுபட்ட அதிமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இப்போது மீண்டும் உட்கட்சி குழப்பம் வெடித்துள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என சிவி சண்முகம் கூறியிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் செய்தியாளர்கள் சந்தித்தனர். அதில் நாளைய தினம் அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும் தவெகவுக்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் ஓஎஸ் மணியன் தெரிவித்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் தொடர் குழப்பங்களே இருந்து வருகிறது. இடையில் குழப்பங்கள் எல்லாம் ஓய்ந்து சில காலம் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்றார். இருப்பினும், சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு மீண்டும் குழப்பம் வெடித்துள்ளது.

AIADMK Internal Crisis ADMK

அதிமுகவில் பிளவு

எஸ்பி வேலுமணி- சிவி சண்முகம் ஆகியோர் விஜய்யின் தவெக அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனச் சொல்லி வருகிறார்கள். நாளை சட்டசபையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்கும் சூழலில், அதில் தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கப் போவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதற்கிடையே அவர்களைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதில் நாளை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தவெகவுக்கு எதிராக வாக்களிப்போம் என்றும் அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும் தவெகவுக்கு எதிராக வாக்களிப்போம் என்றும் ஓ எஸ் மணியன் தெரிவித்தார். மேலும், எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் கூட்டணி பேசினார் என இல்லாத ஒன்றை அவதூறாகப் பரப்பி வருகிறார்கள் என்றும் ஓ எஸ் மணியன் கூறினார்.

நடவடிக்கை பாயும்

அவர்கள் மேலும் கூறுகையில், "எடப்பாடி பழனிசாமிதான் அதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவர்; அதிமுகவின் 47 எம்.எல்.ஏ.க்களும் இதற்கான கையெழுத்துப் போட்டுள்ளனர்; அந்தக் கடிதத்தைச் சபாநாயகரிடம் அளித்துள்ளோம்.. தவெக அரசு மீதான நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் அதிமுக எதிர்த்து வாக்களிக்கும்.. கட்சிக் கொறடா உத்தரவை மீறி ஆதரவாக வாக்களித்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

திமுக- அதிமுக கூட்டணி?

அப்போது ஓ எஸ் மணியன் பேசுகையில், "இன்று காலை பேட்டி கொடுத்த சிவி சண்முகம், திமுகவுடன் எடப்பாடி கூட்டணியைப் பேசியதாக அவதூறாக.. உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறியுள்ளனர். அதிமுகவினரை தங்கள் பக்கம் ஈர்க்க இதுபோல தவறான தகவல்களைத் தந்து கொண்டு இருக்கிறார். என்றும் திமுகவும் அதிமுகவும் எதிர் எதிர்க துருவங்கள் தான். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் சட்டசபை கட்சி தலைவர் என்று சொல்லி அனைத்து 47 எம்எல்ஏக்களும் கையெழுத்திட்டு இருக்கிறோம். அந்தக் கடிதத்தைச் சபாநாயகரிடம் கொடுத்துள்ளோம். அந்த அடிப்படையில் தான் எடப்பாடி கட்சி கொறடாவை நியமித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் மட்டும் தான் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்ட முடியும். வேறு யாருக்கும் இதற்கான அதிகாரம் இல்லை. மற்றவர்கள் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்ட முடியாது. அதிமுக ஒன்றாக இருக்கிறது. அதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. எடப்பாடி தான் சட்டசபை தலைவர் என்று அனைவரும் போட்டுள்ள கையெழுத்தே அதற்குச் சாட்சி!

பாஜக கூட்டணி?

பாஜக உடன் கூட்டணியில் இல்லை எனச் சிலர் சொல்கிறார்கள். இதைச் சொல்லும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே இருக்கிறது. அதுதான் அதிமுகவின் சட்ட விதிகள். வேறு யாரும் இது குறித்து எல்லாம் பேச முடியாது. அதிகாரம் வேண்டும்.. அமைச்சராக வேண்டும் என்ற ஆசையில் சிலர் இப்படி (தவெக ஆதரவு) பேசி வருகிறார்கள்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+