மறைத்து வைக்கப்பட்ட எக்னாமிக் ஆயுதம்.. மோடிக்கு இது தெரியமா போச்சே.. செம ஐடியா கொடுத்த தீபக்!

Subscribe to Oneindia Tamil

பிரதமர் நரேந்திர மோடி இந்திய மக்களை தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு காலம் தள்ளிப் போடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சனையை சரி செய்ய டக்கரான ஐடியாவை கேப்பிடல்மைண்ட் மியூச்சுவல் பண்ட் சிஇஓ தீபக் ஷெனாய் முன்வைத்துள்ளார்.

இந்தியா 2026 நிதியாண்டில் தங்கம் இறக்குமதிக்காக மட்டும் 71.98 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 24 சதவீதம் அதிகம். வெள்ளி இறக்குமதி 12 பில்லியன் டாலர் அதிகரித்து 150 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. இரண்டு உலோகங்களும் சேர்ந்து 84 பில்லியன் டாலர் அந்நிய செலாவணியை வெளியேற்றியுள்ளது. நாட்டின் டாலர் இருப்பை காப்பாற்றவே மோடி தங்கம் வாங்குவதை ஒரு வருடம் நிறுத்துமாறு அறிவித்தார்.

RBI Gold rbi sell gold reserves deepak shenoy modi gold purchase appeal alternative rbi gold sale save 30 billion forex india gold imports 92 billion fy26 current account deficit reduction gold deepak shenoy rbi gold solution modi stop buying gold criticism rbi 800 tonnes gold domestic sale india forex outflow gold silver rbi gold sale stabilise rupee deepak shenoy economic weapon gold modi austerity gold appeal backlash india current account deficit 80 billion rbi sell 200 tonnes gold jewellery deepak shenoy proposal rbi gold 2026 RBI RBI 30 92 RBI RBI 800 RBI RBI 200

மக்களை தங்கம் வாங்க வேண்டாம் என மோடி அறிவுறுத்துவதை கையில் இருக்கும் தங்கத்தை வைத்து இந்த பிரச்சனையை எளிதாக சரி செய்யலாம். ஆம், ரிசர்வ் வங்கி (RBI) தனது தங்கக் கையிருப்பை உள்நாட்டில் விற்பனை செய்யலாம் என்ற புதிய யோசனையை தீபக் ஷெனாய் முன்வைத்துள்ளார்.

இந்த நடவடிக்கை மூலம் இந்தியா சுமார் 30 பில்லியன் டாலர் அளவுக்கு அந்நிய செலாவணியை சேமிக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு தங்கம் வாங்குவதை தடை செய்யாமல், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவும் ஒரு நடைமுறை தீர்வாகப் பார்க்கப்படுகிறது. எப்படி?

நடப்பு கணக்கு பற்றாக்குறை சிக்கல்

இந்தியா 2025 நிதியாண்டில் தங்கம் இறக்குமதிக்காக 51 பில்லியன் டாலர் செலவிட்டது. 2026 நிதியாண்டில் இது 92 பில்லியன் டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதி சுமார் 102 பில்லியன் டாலராக உள்ளது. இந்த இரண்டு இறக்குமதிகளும் சேர்ந்து நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை (Current Account Deficit) 80 பில்லியன் டாலராக உயர்த்தியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 30 பில்லியன் டாலர் அதிகம். தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதியை தலா 25 சதவீதம் குறைத்தால் இந்த பற்றாக்குறையை கணிசமாகக் குறைக்க முடியும்.

ரிசர்வ் வங்கியின் தங்கக் கையிருப்பு

ரிசர்வ் வங்கியிடம் தற்போது 800 டன் தங்கம் உள்ளது. இது மிகவும் அதிகம் என்று கருதப்படுகிறது. RBI தங்கத்தை வெளிநாட்டில் சேமித்து வைத்திருந்ததை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வரும் பணியை தொடர்ந்து செய்து வருகிறது. ஆண்டுக்கு 100 முதல் 200 டன் வரை இந்தியாவுக்கு கொண்டு வருகிறது.

இந்த நிலையில், RBI உள்நாட்டு சந்தையில் 200 டன் தங்கத்தை விற்பனை செய்தால், நகைத் தொழில் தேவையில் பாதியை பூர்த்தி செய்ய முடியும். இதனால் 30 பில்லியன் டாலர் அளவுக்கு அந்நிய செலாவணி வெளியேற்றம் தடுக்கப்படும்.

பொதுமக்களுக்கு தங்கம் வாங்க தடை தேவையில்லை

ரிசர்வ் வங்கி தங்கத்தை விற்பனை செய்தால், பொதுமக்கள் தங்கம் வாங்குவதை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. தங்கத்தின் விலை குறைந்தால் தானாகவே தேவை குறையும். ரூபாய் மதிப்பு மேம்பட்டால் இறக்குமதி குறையும்.

பணபுழக்க பிரச்சனை

RBI தங்கத்தை விற்பனை செய்வதால் ரூபாய் பணப்புழக்கம் சிறிது குறையும் (சுமார் 3 லட்சம் கோடி ரூபாய்). ஆனால் தற்போது பணப்புழக்கம் அதிகமாக உள்ளதால், இந்த இழப்பை RBI வட்டி விகிதக் குறைப்பு அல்லது அரசுப் பத்திரங்கள் வாங்கும் மூலம் மிகவும் எளிதாக சமாளிக்க முடியும்.

டபுள் ஜாக்பாட்

RBI தங்கத்தை விற்பனை செய்வது ரூபாய் மதிப்பை ஸ்திரப்படுத்த உதவும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய உதவும். இது ஒரு ஆண்டுக்கு போதுமான தீர்வாக இருக்கும்.

அதன் பிறகு, அரசு வெளிநாட்டு முதலீட்டுக்கு தடைகளை குறைத்தல், வரி குறைப்பு, ஒற்றை சாளர அனுமதி ஆகியவற்றை செயல்படுத்தினால் நீண்டகால பொருளாதார வளர்ச்சி சாத்தியமாகும். இதற்கிடையில் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு அதிகரித்து இறக்குமதி செலவுகளை எளிதாக குறைக்க முடியும்.

மோடியின் வேண்டுகோள் மற்றும் மக்கள் எதிர்வினை

பிரதமர் மோடியின் "தங்கம் வாங்க வேண்டாம்" என்ற வேண்டுகோள் மக்களிடையே எதிர்மறை எதிர்வினையை ஏற்படுத்தும் என்று சிலர் கருதுகின்றனர். அரசின் மீது நம்பிக்கை குறைவாக உள்ளதால், அரசு தடை செய்தால் மக்கள் அதிகம் வாங்கும் போக்கு துவங்கும் அச்சமும் உள்ளது. எனவே, RBI தங்கத்தை விற்பனை செய்வது போன்ற நடைமுறை மூலம் பொதுமக்களையும், வர்த்தக சந்தையை எளிதாக திருப்திப்படுத்த முடியும்.

RBI மாதத்துக்கு 15 டன் தங்கத்தை உள்நாட்டில் விற்பனை செய்தால், தங்கம் இறக்குமதி குறையும், நடப்பு கணக்கு பற்றாக்குறை குறையும், ரூபாய் மதிப்பு மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்காமல் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என தீபக் ஷெனாய் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+