கார்கள் தானாக பிரேக் பிடிக்கும்.. புதிய தொழில்நுட்பத்தை கட்டாயமாக்கும் மத்திய அரசு! எப்படி இயங்கும்?

  • சென்னை: டிரைவர் சரியான நேரத்தில் பிரேக் பிடிக்க தவறினாலும் தானாகவே பிரேக் பிடிக்கும் சிஸ்டத்தை கட்டாயம் ஆக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அட்வான்ஸ்டு எமர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டம் என்ற இந்த தொழில் நுட்பம் 2030-ல் இருந்து அறிமுகம் செய்யப்படும் புதிய கார்களுக்கு கட்டாயம் ஆக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    உலக அளவில் அதிக விபத்துகள் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது. விபத்துகளுக்கு போக்குவரத்து விதி மீறல், சாலை பராமரிப்பு உள்ளிட்டவையே முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. எனவே விபத்துகளை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    Advertisement

    அந்த வகையில், புதிய கார் மாடல்களில் அவசர காலங்களில் தானாகவே பிரேக் பிடிக்கும் மேம்பட்ட தொழில் நுட்பத்தை கட்டாயம் ஆக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. AEBS எனப்படும் மேம்பட்ட அவசர கால பிரேக்கிங் சிஸ்டம் அமைப்பு வரும் 2030 ஆம் ஆண்டு முதல் கட்டாயம் ஆக்க மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல்க்ள் வெளியாகியுள்ளது.

    எப்படி இயங்கும்?

    இந்த ஏஇபிஎஸ் சிஸ்டம் எப்படி இயங்கும் என்ற கேள்வி வாகன ஓட்டிகளுக்கு எழக்கூடும். எளிதாக சொல்வது என்றால் இந்த தொழில் நுட்பம், காரின் முன்னால் உள்ள வாகனங்கள் அல்லது ஏதேனும் தடுப்புகள், தடங்கல்கள் இருந்தால், மோதல் ஏற்படும் அபாயம் இருப்பதை கண்டறிந்தால், டிரைவருக்கு உடனடியாக அலர்ட் செய்யும்.

    Advertisement

    டிரைவர் உடனே செயல்பட தவறினால், கார் தானாகவே பிரேக் பிடித்து விபத்தை தவிர்க்க உதவும். அல்லது விபத்தின் தீவிரம் குறைக்க உதவும். 2030 ஆம் ஆண்டுக்கு முன்பே அறிமுகம் செய்யப்பட்ட கார்கள் மற்றும் உற்பத்தியில் இருக்கும் கார்களின் மாடல்களுக்கு இந்த தொழில் நுட்பம் 2032 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் கட்டாயம் ஆக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    மேம்பட்ட தொழில்நுட்ப வசதி

    இதற்கான வரைவு அறிவிக்கை விரைவில் வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து விவமரமறிந்த வட்டாரங்கள் தரப்பில் கூறப்பட்டதாவது:- டேக்சி போன்ற வணிக வாகனங்களுக்கு இந்த தொழில் நுட்பம் கொண்டு வருவதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று தெரிகிறது. வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கும், வாகனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கும் இந்தத் தொழில்நுட்பத்திற்கு மாறுவதற்குத் தேவையான கால அவகாசத்தைக் கருத்தில் கொண்டு, காலக்கெடு நிர்ணயிக்கப்படும்.

    Advertisement

    ADAS தொழில் நுட்பம் என்பது 100-க்கும் மேற்பட்ட எலக்ட்ரானிக் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய மேம்பட்ட தொழில்நுட்ப உதவி அமைப்பாகும். இது சாலையில் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் கண்டறிந்து டிரைவருக்கு எச்சரிக்கை விடுக்கும். சில இக்கட்டான சூழ்நிலைகளில், விபத்தைத் தவிர்ப்பதற்காக வாகனத்தின் பிரேக் அல்லது ஸ்டீயரிங்கைத் தானாகவே கட்டுப்படுத்தும் திறனையும் கொண்டிருக்கும். தற்போது சில கார்களில் மட்டும் இந்த வசதி உள்ளது.

    என்னென்னா பாதுகாப்பு அம்சங்கள்

    புதிய லாரி மற்றும் பேருந்துகளுக்கு 2027 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஆட்டோமெட்டிக் அவசரகால பிரேக்கிங் அமைப்பைக் கட்டாயமாக்கப்படலாம் என்ற திட்டத்தையும் மத்திய அரசு வைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி வாகனத்தின் பக்கவாட்டு பகுதி அதாவது பிளைண்ட் ஸ்பாட் என்று சொல்லக்கூடிய இடங்களில் இருப்பதை அறியும் வசதி, ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்தால் அதனை கண்டறிந்து எச்சரிக்கும் அமைப்பு, லேன் (பாதை) மாறும்போது அலர்ட் செய்யும் வசதி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.

    English Summary

    central government is planning to make a system mandatory that automatically applies the brakes if the driver fails to do so in time. Reports indicate that the government is considering making this technology—known as the 'Advanced Emergency Braking System'—compulsory for all new cars introduced from 2030 onwards.