சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அரசு சார்பில் முன்னெச்சரிக்கை, நிவாரண பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் களம் அடியோடு மாறியுள்ளது. சென்னையில் தவெகவினரை நிவாரண பணிகளுக்கு திமுக மேயர் பிரியா தடையாக இருப்பதாக தவெக எம்எல்ஏ பல்லவி குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் முதலமைச்சர் ரிப்பன் மாளிகை வந்ததை கூட சொல்லவில்லை. அவர்கள் தான் என்னை புறக்கணிக்கிறார்கள் என்று பிரியா பதிலளித்துள்ளார்.
சென்னையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மேயர் அரசாங்கத்தை புறக்கணிக்கவில்லை. அரசாங்கம் தான் மேயரை புறக்கணிக்கிறது. நான் திமுகவை சேர்ந்தவர் என்கிற ஒரே காரணத்திற்காக இப்படி செய்கிறார்கள். அது கூட தெரியாமல் சட்டமன்ற உறுப்பினர் என் மீது புகார் வைத்துள்ளார். மாநகராட்சி சார்பில் முன்பிருந்தே டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்போம்.
திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் வீடு வீடாக சென்று விழிப்புணர்வில் ஈடுபட்டோம். தவெக ஆட்சிக்கு வந்து எதையுமே செய்யவில்லை. ஆகஸ்ட் மாதம் வரை வெற்றியை கொண்டாடுவதிலேயே இருந்துவிட்டனர். அவர்களின் மெத்தன போக்கே இந்த நிலைக்கு காரணம். தவெக ஆட்சியில் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான நிதியே இன்னும் ஒதுக்கப்படவில்லை. இதற்காக திமுக சார்பில் வட சென்னை, தென் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். மழை பேரிடருக்காக ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டது. அதற்கு எங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை. முதலமைச்சர் விஜய் மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் ஆய்வு செய்தார். அந்த தகவலை கூட எனக்கு சொல்லவில்லை. நான் வேறு ஒரு பகுதியில் ஆய்வு செய்தபோது முதலமைச்சர் ரிப்பன் மாளிகை வந்துள்ளார் என்கிற தகவலை சொன்னார்கள். வந்த பிறகு சொல்வதை விட, முன்கூட்டியே சொன்னால் தானே அந்த நேரத்தில் நான் செல்ல முடியும். அழைப்பே கொடுக்காமல் மேயர் வரவில்லை, மேயர் புறக்கணிக்கிறார் என்கிற குற்றச்சாட்டை வைக்கிறார்கள். மேயர் வார்டில் உணவு வழங்க விடுவதில்லை என்று சட்டமன்ற உறுப்பினர் குற்றம் சாட்டியுள்ளார். பள்ளிகளுக்காக காலை உணவு திட்டத்தை எங்கள் தலைவர் கொண்டு வரப்பட்டது. பள்ளிகளுக்கு எதேர்ச்சையாக விடுப்பு வழங்கப்பட்டது. காலை உணவுக்காக தயாரிக்கப்பட்ட உணவை கொடுக்க சொன்னார்கள். அது கூட தெரியாமல் எம்எல்ஏ புகார் சொல்கிறார்" என்றார்.தகவலே இல்லை
தெரியாம பேசக் கூடாது