Chennai Gold Rate: ஒரே நாளில் ரூ.8560 உயர்ந்த தங்கம் விலை.. ஆடிப்போன மக்கள்..!
சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இன்று 2 முக்கிய விஷயங்கள் நடக்கிறது, ஒன்று விஜய் தலைமையிலான தவெக கட்சிக்கான நம்பிக்கை வாக்கெடுப்பை சட்டமன்றத்தில் நடந்து வருகிறது. இதேவேளையில் மோடியின் தங்கம் மீதான இறக்குமதி அறிவிப்பால் சென்னையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.
தங்கம் விலை இன்று அதிரடியான உயர்வை பதிவு செய்துள்ளது. 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.15,400 ஆகவும், வெள்ளி விலையும் ஒரு கிராமுக்கு ரூ.330 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த விலை மாற்றங்கள் நகை வாங்கும் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய விலை நிலவரம்
சென்னை ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.1,070 உயர்ந்து ரூ.15,400 ஆக உள்ளது. இதேபோல் 18 காரட் தங்கத்தின் விலை ரூ.910 உயர்ந்து ரூ.12,860 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி உயர்வு சில்லறை சந்தையில் தங்கம் வாங்கும் மக்களுக்கு பெரும் பாதிப்பாக பார்க்கப்படுகிறது.
இதேவேளையில் 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 1,167 ரூபாய் அதிகரித்து 16,800 ரூபாயாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.330 ஆக உள்ளது. இதன் மூலம் ஒரு கிலோ வெள்ளி விலை 3,30,000 ரூபாயாகவும், ஒரு பவுன் தங்கம் விலை 8560 ரூபாய் அதிகரித்து 1,23,200 ரூபாயாக உள்ளது.
நேற்றைய விலை நிலவரம்
சென்னையில் நேற்று தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்தது. 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.230 அதிகரித்து ரூ.14,330 ஆக உயர்ந்தது, 18 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.11,950 ஆக இருந்தது. அதேபோல், வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.15 உயர்ந்து ரூ.300 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
மே மாதம் டாப்பு கியர்
மே மாதத்தில் தங்கம் விலை கடும் ஏற்றம் கண்டுள்ளது. மே 1ஆம் தேதி 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,186 ஆக இருந்த நிலையில், மே 13ஆம் தேதி ரூ.16,800 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், 22 கேரட் தங்கம் ரூ.13,920 இலிருந்து ரூ.15,400 ஆக உயர்ந்துள்ளது.
இந்த மாதத்தின் குறைந்தபட்ச விலை மே 5ஆம் தேதி பதிவாகியிருந்த நிலையில், அதன்பின் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து 10.63% ஏற்றத்தை பதிவு செய்துள்ளது. இதனால் நகை வாங்க திட்டமிடும் மக்களுக்கு கூடுதல் செலவு சுமை ஏற்பட்டுள்ளது.
ஏன் அதிரடி உயர்வு? பின்னால் இருக்கும் முக்கிய காரணங்கள்
மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது. அதேபோல், பிளாட்டினம் இறக்குமதி மீதான வரியை 6.4 சதவீதத்தில் இருந்து 15.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்த அதிரடி முடிவு, மத்திய கிழக்கு போரின் காரணமாக ஏற்பட்டுள்ள அந்நிய செலாவணி பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கம், வெள்ளி சார்ந்த பிற பொருட்களான தங்கம் - வெள்ளி டோர், நாணயங்கள் மற்றும் பிற தொடர்புடைய பொருட்களின் மீதான வரியும் உயரும் காரணத்தால் ஒட்டுமொத்த உலோக சந்தையும் இறக்குமதி வரி உயர்வால் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் ரீடைல் சந்தைக்கு வரும் தங்கம் சர்வதேச தங்கத்தின் விலையுடன் தங்கம் இறக்குமதிக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள 15 சதவீத இறக்குமதி வரியுடன் 3 சதவீத IGST வரியும் சேர்ந்து விற்கப்படுகிறது. இதனாலேயே சர்வதேச விலைக்கும், இந்திய சந்தை விலைக்கும் பெரிய வித்தியாசம் உருவாகிறது. ஆனால் இந்த வரி இதோடு நிற்கவில்லை.












Click it and Unblock the Notifications