சென்னை லைட் ஹவுஸ் to அடையாறு வரை உயர்மட்ட பாலம் - போக்குவரத்து நெரிசலை குறைக்க மாஸ்டர் பிளான்!

  • சென்னை: போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், சென்னையில் லைட் ஹவுஸ் முதல் அடையாறு திரு.வி.க பாலம் வரை 4 கி.மீ.க்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு.

    Advertisement

    சென்னையின் மிக முக்கிய கடற்கரை சாலையான கலங்கரை விளக்கம் முதல் அடையாறு திரு.வி.க. பாலம் வரை 4 கிலோ மீட்டர் நீளத்திற்கு உயர்மட்ட சாலை அமைக்கும் திட்டத்திற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

    Advertisement

    இதற்காக விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க நெடுஞ்சாலைத்துறையின் சென்னை நகர சாலைகள் கோட்டம் டெண்டர் கோரியுள்ளது. இதன் மொத்த மதிப்பீடு ரூ.38 லட்சத்து 10 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெண்டர் பணியை மேற்கொள்ள 60 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முன்வைப்புத் தொகையாக ரூ.29,500 செலுத்த வேண்டும். டெண்டர் கட்டணம் இல்லை. தகுதியான ஒப்பந்ததாரர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உயர்மட்ட சாலை அமைந்தால், மெரினா கடற்கரை சாலையில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    With the aim of reducing traffic congestion, the Tamil Nadu government has invited tenders for the preparation of a detailed project report for the construction of a 4 km-long elevated flyover in Chennai, stretching from the Lighthouse to the Thiru. Vi. Ka. Bridge in Adyar.