காவல் மரணமா? நாகர்கோவில் சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயம்! பிரேத பரிசோதனை அறிக்கையில் ஷாக் தகவல்

  • குமரி: நாகர்கோவிலில் சிறைக்கைதி சபரிவர்மன் காவலர்களால் அடித்து கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்ட நிலையில், மாவட்ட நீதிபதி சத்தியமூர்த்தி நேரில் விசாரணை மேற்கொண்டார். இன்று காலையில் பிரேத பரிசோதனை நடந்த நிலையில் இதம் விவரம் தற்போது வெளிவந்துள்ளது. இதில் சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயம் இருப்பதாக தெரியவந்துள்ளது. கை, கால்களை கட்டிப்போட்டு தாக்கியதற்கான அடையாளங்கள் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    Advertisement

    குமரி மாவட்டம் வடக்கு தாமரைக்குளம் அருகே நாராயணன்புதூர் பகுதியை சேர்ந்தவர் சபரிவர்மன் (வயது 33). அப்பகுதியில் கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த 9 ஆம் தேதி குட்கா விற்றதாக தென் தாமரைக்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து சபரிவர்மன் நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

    Advertisement

    உறவினர்கள் போராட்டம்

    இந்த நிலையில் நேற்று திடீரென அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். நேற்று அதிகாலை​யில் சபரிவர்​மன் மயங்​கிய நிலை​யில் கிடந்​த​தாகவும், உடனே அவரை ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் போலீசார் அனுமதித்ததாகவும் அப்போது மருத்துவர்கள் பரிசோதனை அவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. இது அவரது உறவினர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    மேலும் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு சென்ற அவர்கள், சபரிவர்மனுக்கு எந்த ஒரு நோய் பாதிப்பும் கிடையாது. போலீசார் தாக்கியதால் தான் அவர் உயிரிழந்து இருக்கக்கூடும் என தெரிவித்து மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சபரிவர்மன் உடலை வாங்க மறுத்து அங்கு தர்ணா செய்தனர். உடனே மாவட்ட எஸ்பி பேச்சுவார்த்தை நடத்தினார்.

    Advertisement

    சிறைக் கைதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரம் குறித்து கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக உடலை வாங்க மறுத்து சபரிவர்மன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் தான் அடித்து கொலை செய்துவிட்டதாகவும் விரிவான விசாரணை வேண்டும் எனவும் உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்தனர்.

    19 இடங்களில் காயம்

    இன்று மாலையில் பிரேத பரிசோதன அறிக்கை முடிவுகள் வெளிவரும் என கூறப்பட்டது. இந்த நிலையில் மாவட்ட நீதிபதி சத்தியமூர்த்தி முன்னிலையில் பிரேத பரிசோதனையானது நடந்தது. இதில், சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயம் இருந்தது தெரியவந்தது. மேலும் கை கால்களை கட்டிப்போட்டு தாக்கியதற்கான அடையாளம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. வலது முழங்கையில் வெளிப்பூறங்களில் சிராய்ப்பு காயங்கள் இருந்ததாகவும், வலது முழகாங்காலுக்கு மேல், வலது காலில் கீழ் பகுதியில் காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    Advertisement

    3 பேர் கைது

    மேலும் இறந்த சபரிவர்மனின் இடது கை, தலை, கழுத்து பகுதியில் காயங்கள் இருந்ததாகவும் பிரதே பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த விவாகரம் தொடர்பாக தற்போது சிறை வார்டன் உள்பட 3 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறை வார்டன் ஜெகன், வார்டன்கள் சிவக்குமார், திருவிடைநம்பியை நேசமணி நகர் போலீசார் கைது செய்தனர்.

    English Summary

    Nagercoil: The postmortem report in the Nagercoil Sabarivarman death case revealed 19 injuries on his body. The findings, presented before the district judge, also indicated possible signs that his hands and legs had been tied before the assault.