சென்னை: டாஸ்மாக்கில் ரூ.500க்கு மேல் மதுபானம் வாங்கும் வாடிக்கையாளர்கள் விரைவில் ரொக்கமாக பணம் கொடுக்காமல் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறையை கொண்டு வருவது பற்றி பரிசீலனை செய்யப்படடு வருகிறது. இதன் பின்னணி பற்றிய பரபரப்பானக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் 4,700க்கும் அதிகமான டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி வந்ததும் டாஸ்மாக்கில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆன்லைனில் மதுபானம் முன்பதிவு செய்து வாங்குவது நடைமுறையில் உள்ளது. அதுமட்டுமின்றி விரைவில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு யூனிபார்ம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் தற்போது புதிய நடைமுறையை அமல்படுத்துவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது டாஸ்மாக்கில் இனி ரூ.500க்கு மேல் மதுபானம் வாங்கினால் அதற்கான பணத்தை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வழியாக வாங்குவது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த நடைமுறை அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் முக்கிய நோக்கம் டாஸ்மாக்கில் ரொக்கமாக வழங்கப்படும் பணப்பரிவர்த்தனைகளை குறைப்பது தான். தற்போது டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறை உள்ளது. இருப்பினும் அதன் அளவு குறைவாகவே உள்ளது. தற்போது 20 சதவீதம் வரை மட்டுமே டிஜிட்டல் பணப்பரிமாற்றம் உள்ள நிலையில் 80 சதவீதம் வரை ரொக்க முறையில் தான் இருக்கிறது. தினமும் சராசரியாக தமிழகத்தில் ரூ.150 கோடிக்கு மதுபானம் விற்பனை செயயப்படுகிறது. வார இறுதி நாட்கள் மட்டும் சிறப்பு விடுமுறை நாட்களில் இந்த விற்பனை அதிகரிக்கிறது. இதனால் இந்த ரொக்கப்பணத்தை பாதுகாப்பது தினமும் சவாலாக உள்ளது. திருட்டு பயம் இருக்கிறது. இதனால் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை அதிகரிக்க தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக மதுபான உற்பத்தி நிலையங்கள் முதல் சில்லறை விற்பனை கடைகள் வரை அனைத்து செயல்பாடுகளையும் டிஜிட்டல் மயமாக்க டாஸ்மாக் நிறுவனம் சார்பில் 2024ம் ஆண்டி்ல கணிணியமயமாக்கல் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதனடிப்படையில் டாஸ்மாக்கில் விற்கப்படும் ஒவ்வொரு மதுபான பாட்டிலும் கையடக்க கருவிகள் மூலம் ஸ்கேன் செய்யப்படுகிறது. இந்த கருவிகளில் உள்ள கியூஆர் கோட்டை ஸ்கேன் செய்து வாடிக்கையாளர்களால் பணம் செலுத்தவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது ரொக்க பணப்பரிவர்த்தணைகளை குறைத்து டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ. 500-க்கு மேல் ஒருவர் மதுபானம் வாங்கினால் அவர் டிஜிட்டல் முறையில் மட்டுமே பணப்பரிமாற்றம் செய்ய வேண்டிய சூழல் வரலாம்.