செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கை ஏன் கைது செய்யல? ஆதாரம் இல்லையா? திமுக சரவணன் எழுப்பிய கேள்விகள்

  • சென்னை: "யாரோ ஒரு நபர் ஒரு எம்எல்ஏவை தொடர்பு கொண்டார் கைது செய்திருக்கிறீர்கள், ஏன் பின்னர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கை கைது செய்யவில்லை? ஆதாரம் ஏதும் இல்லை என்பதால் தானே? மீடியாவில் ஆதாரமற்ற தகவல்களை பரப்பி, திமுக மீது அவதூறு செய்வது ஏன்?" என தவெகவுக்கு திமுக வழக்கறிஞர் சரவணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம், தவெகவுக்கு எதிராக வாக்களிக்கச் சொல்லி பேரம் பேசியதாக 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகியோரின் அறிவுரையின் பேரிலேயே இதில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளதாக காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    Advertisement

    இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், "செந்தில் பாலாஜி, ஸ்டாலின், உதயநிதி உத்தரவில் 50 கோடி வரை தருவதாக கூறி எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேசி உள்ளனர். குதிரை பேரத்தை 40 நாளாக எங்கள் உறுப்பினர்களிடம் பேசி வருகின்றனர்" எனக் குற்றம்சாட்டினார். இந்நிலையில், திமுக செய்தி தொடர்பாளரான வழக்கறிஞர் சரவணன் 8 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    சரவணன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தவெக அரசை கவிழ்ப்பதற்காக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசுகிறார்கள் திமுகவினர் என அமைச்சர் சிடிஅர் நிர்மல் குமார் ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார். அவருடைய பேட்டியில் "Only Sound No Substance"
    நமக்கு எழும் கேள்விகள்.

    Advertisement

    1. ஊத்தங்கரை எம்எல்ஏ மட்டுமே புகார் கொடுத்திருக்கிறார்.
    வேறு எந்தெந்த எம்எல்ஏக்கள் என்ற விவரத்தை வெளியிட்டிருக்க வேண்டுமா, இல்லையா?

    2. பணம் ஏதாவது கைமாறியதா? தகவல் இல்லை.
    சபாநாயகரை பதவி நீக்கும் தீர்மானம் ஏதாவது நிலுவையில் உள்ளதா?
    இல்லை.

    3.புகார் 29ஆம் தேதி கொடுக்கப்பட்டிருக்கிறது, இதே அவசரம் அமைச்சர் சரத் மேலெழுந்திருக்கும் புகார் மீது காட்டப்பட்டதா?
    இல்லை.

    4. யாரோ ஒரு நபர் ஒரு எம்எல்ஏவை தொடர்பு கொண்டார் கைது செய்திருக்கிறீர்கள், ஏன் பின்னர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கை கைது செய்யவில்லை? ஆதாரம் ஏதும் இல்லை என்பதால் தானே?

    Advertisement

    5. மீடியாவில் ஆதாரமற்ற தகவல்களை பரப்பி, திமுக மீது அவதூறு செய்வது ஏன்?

    6. நாளை ஊழலில் ஊறித் திளைத்த 2 விஜயபாஸ்கர்களையும் கட்சியில் இணைக்க இது "டேக் டைவர்ஷனா?"

    7. குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் முதல்வர் என வைகோ பொது வெளியில் போட்டுடைத்ததால் நடத்தப்படும் இமேஜ் க்ளினிங் முயற்சியா இது?

    8. அதிமுகவின் 5 எம்எல்ஏக்கள் பதவி விலகல், குதிரை பேரம் தானே?
    பதில் உண்டா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

    English Summary

    “Someone contacted an MLA asking, ‘You have made arrests, so why wasn’t Senthil Balaji’s brother Ashok arrested? Was it because there was no evidence? Why spread baseless information in the media and defame the DMK?’ — this is the question DMK lawyer Saravanan has posed to TVK.”