கள்ள உறவால் ஒரே நாளில் பல ஆயிரம் கோடியை பறிகொடுத்த என்விடியா சிஇஒ! பணக்காரர்கள் லிஸ்ட்டிலும் பலத்த அடி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரும் என்விடியா நிறுவனத்தின் சிஇஓவுமான ஜென்சன் ஹூவாங், சீனா உளவாளி என்று சந்தேகிக்கப்படும் பெண்ணுடன் வைத்து இருந்த ரகசிய உறவு வெளிச்சத்துக்கு வந்ததால், அவரது சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடி ஒரே நாளில் சரிந்துள்ளது. இதனால், உலக பணக்காரர்கள் பட்டியலில் 2 இடங்கள் பின் தள்ளப்பட்டுள்ளார்.

உலகின் மிக அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள் மற்றும் ஏ.ஐ. தொழில்நுட்பத்திற்குத் தேவையான அசுர பலம் கொண்ட 'ஜி.பி.யு' சிப்களை தயாரிக்கும் பிரபல நிறுவனம் என்விடியா. அந்த நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமாக இருந்து வருபவர் ஜென்சன் ஹூவாங் (வயது 63). தைவானில் பிறந்த இவர் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று அமெரிக்க குடியுரிமை பெற்று வசித்து வருகிறார்.

Nvidia CEO loses thousands of crores in one day due to Spy Scandal loses 2 spots in Billionaire list

கள்ள உறவு இருந்ததை ஒப்புக்கொண்டார்

அமெரிக்காவை சேர்ந்த லோரி என்பவருடன் இவருக்கு திருமணமாகி மகள் மற்றும் மகன் உள்ளனர். இவரை பற்றிய பெரிய சர்ச்சை ஒன்று தற்போது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது. சீனாவை சேர்ந்த இளம்பெண்ணான ஆலிஸ் விரித்த வலையில் சிக்கியுள்ளார். சீனாவுக்காக பல்வேறு ரகசிய தொழில் நுட்பங்களை ஆலிஸ் திரட்டியிருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை சந்தேகித்துள்ளது.

இதையடுத்து என்விடியா நிறுவனத்தின் இயக்க்குநர்கள் குழு இது தொடர்பாக உள்விசாரணையை தொடங்கியுள்ளது. இதற்கிடையே, சீன பெண்ணுடன் தனக்கு நெருக்கமான உறவு இருந்ததை ஜென்சன் ஹூவாங் ஒப்புக்கொண்டார். தனது குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கோரியிருந்தார். ஜென்சன் ஹூவாங் தனது முறை தவறிய உறவை ஒப்புக்கொண்ட நிலையில், என்விடியா நிறுவனத்தின் பங்குகள் தாறுமாராக சரிந்தன.

சொத்து மதிப்பில் 10 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்

இதனால் ஒரே நாளில் 7.4 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.66,000 கோடி) மதிப்பை இழந்தார். இதன் தொடர்ச்சியாக உலக பணக்காரர்கள் பட்டியலிலும் ஜென்சன் ஹூவாங் சரிவை சந்தித்துள்ளார். போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்ட செய்தியின் படி ஹாவுங் சொத்து மதிப்பு 154 பில்லியன் டாலர் ஆகும். இந்திய மதிப்பில் சுமார் ரூ.13.6 லட்சம் கோடியாகும். சொத்து மதிப்பு வீழ்ச்சி கண்டதால் தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் 8-வது இடத்தில் இருந்து 10 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

விவாகரத்து கோரினால்

தனது மனைவிக்கு துரோகம் செய்துவிட்டதாக ஜென்சன் ஹுவாங் மன்னிப்பும் கோரியிருந்தார். 1985 ஆம் ஆண்டு லோரி ஹூவாங்கை ஜென்சன் ஹூவாங் திருமணம் செய்து கொண்டார். ஒருவேளை இருவருக்கும் விவாகரத்து ஏற்பட்டால் அவரது மனைவிக்கு சுமார் 81.1 பில்லியன் டாலர் கொடுக்க வேண்டியிருக்கும் என்று சொல்லப்படுகிறது. உலகின் மிகவும் மதிப்பு மிக்க விவகாரத்து செட்டில்மெண்ட்களில் ஒன்றாக இது இருக்கும் எனவும் ஊடகங்கள் மதிப்பிட்டுள்ளன. எனினும், இருவரும் விவகாரத்து எதுவும் தற்போது வரை விண்ணப்பிக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+