மிசாவுக்கு அர்த்தம் தெரியாத அறிவுஜீவி நிர்மல்குமார்! இதைவிட கேவலம் இருக்க முடியுமா? பரந்தாமன் ஆவேசம்

  • சென்னை: அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாருக்கு மிசாவுக்கு அர்த்தம் கூட தெரியவில்லை என்று திமுக நிர்வாகி பரந்தாமன் சாடியுள்ளார். சிடிஆர் நிர்மல்குமார் சட்டம் படித்து தான் வந்தாரா என்று கேள்வி எழுப்பியுள்ள பரந்தாமன், பைத்தியத்தை சட்ட அமைச்சராக வைத்துக் கொண்டு தமிழ்நாடு படும் பாடு மோசமாக இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.

    Advertisement

    சட்டசபையில் அமைச்சர் நிர்மல்குமார் பேசுகையில், பெண்கள் குறித்து அவதூறாக பேசியதற்கு தான் ஸ்டாலின் அப்போது கைது செய்யப்பட்டார். மிசாவில் கைது செய்யப்பட்டவர் என்று எந்தக் குறிப்பிலும் இல்லை என்று குற்றம்சாட்டினார். அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாரின் பேச்சிற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

    Advertisement

    ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சிகள் சிடிஆர் நிர்மல்குமாரை, மிசா கால கொடுமைகள் பற்றி கொஞ்சம் படித்துவிட்டு வாருங்கள் என்று அட்வைஸ் கொடுத்துள்ளது. இந்த நிலையில் திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மிசாவில் கைது செய்வதை, பல வழக்குகளிலும் கைது செய்வார்கள் என்பதை போல் அறிவுஜீவி அமைச்சர் நிர்மல்குமார் பேசுகிறார்.

    குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், பெண்கள் சம்மப்பந்தப்பட்ட வழக்குகள், திருட்டு வழக்குகளில் இருப்பவர்களை கூட மிசாவில் கைது செய்வார்கள். MISA என்றால் Maintainence of Internal Security Act. உள்நாட்டு பாதுகாப்பை கட்டுப்படுத்த கொண்டு வரப்பட்ட சட்டம் அது.. இந்தியா காந்தி எமர்ஜென்சியை கொண்டு வந்த போது, மிசாவில் கைது செய்வது தான் அரசியல் தலைவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை.

    Advertisement

    அதனை எவ்வளவு கொச்சையாக பேசுகிறார்.. ஏனென்றால் நிர்மல்குமார் வந்த வழி அப்படி.. உங்கள் புத்தி அப்படி.. டாய்லெட்டில் எட்டி பார்த்தவர் தானே நிர்மல்குமார்.. மிசாவில் யாரை கைது செய்ய முடியும்.. இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் இருந்தால் கைது செய்ய முடியும். சட்டம் ஒழுங்குக்கு குந்தகை விளைவித்தால் கைது செய்ய முடியும். அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கைது செய்யப்படுவார்கள்.

    இப்படிப்பட்ட கைதுகளுக்கு தான் மிசா இருக்கிறது. பெண்கள் சம்மந்தப்பட்ட வழக்கிற்கோ, வழிபறிக்கோ இந்த சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியாது. நீங்கள் சட்டம் படித்து தான் வந்தீர்களா அல்லது திருட்டு சான்றிதழ் பெற்றுவிட்டீர்களா.. மிசாவுக்கு அர்த்தம் தெரியாமலேயே ஒரு சட்ட அமைச்சர் இருக்கிறார் என்றால், இதனை விட ஒரு கேவலம் இருக்க முடியுமா?

    Advertisement

    சிறுவயதில் ஏதோவொரு Traumaவில் வளர்ந்திருக்கிறார். ஒரு பைத்தியத்தை சட்ட அமைச்சராக வைத்துக் கொண்டு தமிழ்நாடு படும் பாடு மோசமாக இருக்கிறது. இவருக்கு அடுத்த சட்டசபை கூட்டத்தொடருக்குள் சிகிச்சை கொடுத்து அழைத்து வர வேண்டும். உங்கள் தலைவரே ஒரு சைக்கோ தான்.. ஒரு சைக்கோ எப்படி செயல்படுமோ, அப்படிதான் சட்டசபையில் முதல்வர் செயல்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    DMK Leader Paranthaman Attacks Law Minister CTR Nirmal Kumar, Questions His Educational Qualifications