சென்னை: இந்திய ஜனநாயகத்தின் மிக முக்கியமான தூணாக விளங்குவது இந்திய தேர்தல் ஆணையம் . பொதுவாக தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் அனைத்தும் மூன்று ஆணையர்களால் கூட்டாக ஆலோசித்து எடுக்கப்படும். ஆனால், ஆணையத்தின் வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத வகையில், தலைமைத் தேர்தல் ஆணையரின் செயல்பாடுகளுக்கு எதிராக மற்ற இரண்டு ஆணையர்களே 14 முறை எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனை தெரிவித்திருப்பது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
அதாவது தேர்தல் ஆணையர்கள் 2 பேரின் எதிர்ப்பை மீறி தலைமை தேர்தல் ஆணையர் தவறான பல முடிவுகளை எடுத்துள்ளார் என்பதே புகார் .. அப்படி அவர் எடுத்த முடிவுகள் என்னென்ன?
பிரபல ஆங்கில நாளிதழான 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' வெளியிட்ட புலனாய்வுச் செய்தி மூலம் இந்த விவகாரம் நாடெங்கும் வெடித்தது. கடந்த 10 மாதங்களில் (நவம்பர் 2025 முதல் ஆகஸ்ட் 2026 வரை), தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட பல முக்கிய உத்தரவுகள் தங்களுக்குத் தெரியாமலேயே எடுக்கப்பட்டதாக இரண்டு ஆணையர்கள் பதிவு செய்த அதிகாரப்பூர்வ ஆட்சேபனைக் குறிப்புகள் அந்தச் செய்தியில் அம்பலமானது. இந்திய தேர்தல் ஆணையத்தில் மூன்று ஆணையர்கள் இருப்பார்கள்: தலைமைத் தேர்தல் ஆணையர்: க்யானேஷ் குமார் இதில் தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகிய இருவரும் தலைமைத் தேர்தல் ஆணையர் க்யானேஷ் குமார் தலைமையிலான நிர்வாக நடவடிக்கைகளுக்கு எதிராகவே இந்த 14 முறை எழுத்துப்பூர்வ குறிப்புகளை அனுப்பியுள்ளனர். கேள்வி 3: அவர்கள் எழுப்பிய முக்கியமான குற்றச்சாட்டுகள் மற்றும் ஆட்சேபனைகள் என்ன? இரண்டு ஆணையர்களும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, வாக்காளர்கள் பெயர் நீக்கம், தேர்தல் ஆணைய வழக்கு மற்றும் மென்பொருள் பயன்பாடு, தொடர்பாக நான்கு முக்கியப் பிரச்சனைகளை சுட்டிக்காட்டியுள்ளனர்: 1. எங்களுக்குத் தெரியாமலேயே முடிவுகள் எடுக்கப்படுகின்றன: ஆணையத்தின் பெயரில் பல சுற்றறிக்கைகளும் கொள்கை முடிவுகளும் தங்களுக்குத் தெரியாமலும், தங்களின் முன் ஒப்புதல் பெறாமலும் வெளியிடப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர். 2023-ம் ஆண்டு இயற்றப்பட்ட தேர்தல் ஆணைய சட்டப்படி, முடிவுகள் அனைத்தும் ஒருமனதாகவோ அல்லது பெரும்பான்மை அடிப்படையிலோதான் எடுக்கப்பட வேண்டும். 2. புதிய வாக்காளர் பதிவு படிவத்தில் (Form 6) சட்டவிரோத மாற்றம்: புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்துக்கொள்ள விண்ணப்பிக்கும் படிவம் 'படிவம் 6' ஆகும். இந்த படிவத்தில் விதிகளுக்குப் புறம்பாக ஒரு புதிய கேள்வி சேர்க்கப்பட்டது. அதாவது, "உங்கள் பெயரோ அல்லது உங்கள் பெற்றோர்/தாத்தா பாட்டி பெயரோ இதற்கு முந்தைய வாக்காளர் சிறப்பு திருத்தப் பட்டியலில் இருந்ததா?" என்ற விவரம் கட்டாயமாக கேட்கப்பட்டது. 1950-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி மத்திய அரசின் விதி திருத்தம் இல்லாமல் இந்தப் படிவத்தை மாற்ற முடியாது என விவேக் ஜோஷி எச்சரித்தும் அந்த மாற்றம் அமல்படுத்தப்பட்டது. இதை சுக்பீர் சிங் சாந்து அதிகார வரம்பற்றது மற்றும் சட்டவிரோதமானது என்று கடிதத்தில் சாடினார். 3. டெல்லியில் குவிக்கப்படும் வாக்காளர் பட்டியல் கட்டுப்பாடு பொதுவாக வாக்காளர் பட்டியலைச் சேர்க்கவோ நீக்கவோ அந்தந்த தொகுதி தேர்தல் பதிவு அதிகாரிகளுக்குத்தான் சட்டப்பூர்வ அதிகாரம் உண்டு. ஆனால், டெல்லியில் உள்ள தொழில்நுட்பக் குழு மூலமாக 'ERONet' மென்பொருளின் முழுக் கட்டுப்பாடும் மத்திய மயமாக்கப்பட்டு, கள அதிகாரிகளின் முடிவுகள் மேலெழுதப்படுவதாக ஆணையர்கள் குற்றம்சாட்டினர். இதனால் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் இல்லாத நபர்கள் வாக்காளர் தரவுகளில் தலையிடும் ஆபத்து உள்ளதாக எச்சரித்தனர். 4. மாநிலங்களில் ஏற்பட்ட குளறுபடிகள்: மேற்கு வங்கத்தில் வாக்காளர் நீக்கத்திற்கு எதிரான மேல்முறையீடுகள் கையாளப்பட்ட விதம் மற்றும் கோவாவில் நீதிமன்ற உத்தரவு இருந்தும் மென்பொருள் கோளாறால் 97 தகுதியான வாக்காளர்கள் சேர்க்கப்படாமல் போனது போன்ற சம்பவங்களையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். கேள்வி 4: அமைச்சரவைச் செயலாளரிடம் ஆணையர்கள் முறையிட்டது உண்மையா? ஆம். தேர்தல் ஆணையத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் தங்களுக்குத் தெரியாமல் அதிகாரிகள் மற்றும் பொறுப்புகள் மாற்றப்பட்டபோது, சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகிய இருவரும் நேரடியாக மத்திய அமைச்சரவைச் செயலாளர் டி.வி. சோமநாதனுக்குத் தனித்தனியாக கடிதம் எழுதினர். இதனைத் தொடர்ந்து அந்தப் பணி மாற்ற உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. கேள்வி 5: தேர்தல் ஆணையம் (ECI) இதற்கு என்ன பதில் அளித்துள்ளது? இந்த செய்தி வெளியானதும் தேர்தல் ஆணையம் விளக்கம் ஒன்றை அளித்தது: எந்தவொரு அமைப்பிலும் முடிவுகள் எடுப்பதற்கு முன் உள் விவாதங்கள், அதிகாரிகளின் மாற்று ஆலோசனைகள் மற்றும் கேள்விகள் எழுப்பப்படுவது ஒரு வழக்கமான நடைமுறைதான். 10 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான முடிவுகளில் குறிப்பிட்ட 14 குறிப்புகளை மட்டும் தனித்துப் பிரித்துக் காட்டுவது முழுமையான சித்திரத்தைத் தராது. வாக்குத் திருத்தப் பணிகள் (SIR) மற்றும் தேர்தல் தொடர்பான அனைத்து இறுதி முடிவுகளும் மூன்று ஆணையர்களின் ஒப்புதலுடன் ஒருமனதாகவே (Unanimous) எடுக்கப்பட்டுள்ளன என்று ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. கேள்வி 6: எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்ன? இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாகக் கையில் எடுத்துள்ளன. வாக்குப்பட்டியலில் இருந்து லட்சக்கணக்கான பெயர்கள் முறைகேடாக நீக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், தேர்தல் ஆணையத்தின் வெளிப்படைத்தன்மை முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் தலைமைத் தேர்தல் ஆணையர் க்யானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், இந்த முறைகேடுகள் குறித்து உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் தனி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். கேள்வி 7: சாமானிய மக்களுக்கு இதனால் ஏற்படும் பாதிப்பு என்ன? வாக்காளர் பட்டியல் என்பது ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் அடித்தளம். தேர்தல் நடத்தும் சுதந்திரமான ஆணையத்திற்குள்ளேயே, வாக்காளர்களைச் சேர்ப்பது மற்றும் நீக்குவது தொடர்பான அதிகாரப்பூர்வ படிவங்கள் மற்றும் தகவல் அமைப்புகள் மீது உள் அதிகாரிகளே சந்தேகம் எழுப்பியிருப்பது, வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மை குறித்த கவலையை பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. கேள்வி 8: இந்திய தேர்தல் வரலாற்றிலேயே இது ஏன் ஆகப்பெரிய முறைகேடு அல்லது மெகா ஊழல்என்று அழைக்கப்படுகிறது? இந்திய தேர்தல் வரலாற்றில் வாக்குச்சாவடியைக் கைப்பற்றுவது அல்லது பணப்பட்டுவாடா போன்ற குற்றச்சாட்டுகள் இதற்கு முன்பும் வந்துள்ளன. ஆனால், இந்த விவகாரம் அவற்றை விட மிக ஆபத்தானது, அதிர்ச்சியானது. எதிர்க்கட்சிகள் இதை சாதாரணப் பிழை என்று சொல்லாமல், "சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய தேர்தல் சதி / வாக்குத் திருட்டு" என்று வர்ணிப்பதற்கு பின்வரும் ஐந்து ஆணித்தரமான காரணங்கள் உள்ளன: இத்தனை காலம் தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டுகளை அரசியல் கட்சிகள் எழுப்பும்; தேர்தல் ஆணையம் நடுநிலையான நடுவராக நின்று அதை விசாரிக்கும். ஆனால் இந்த முறை, நடுவர் வீட்டிற்கு உள்ளேயே இருக்கும் இரண்டு அதிகாரப்பூர்வ ஆணையர்களே "எங்களுக்குத் தெரியாமல் சட்டவிரோதமாக முடிவுகள் எடுக்கப்படுகின்றன" என்று புகார் எழுப்பியுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை ஆணையத்திற்குள் இருந்தே நொறுக்கிய முதல் சம்பவம் இதுதான். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தின் கீழ், 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுமார் 13 கோடிக்கும் அதிகமான பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. களத்தில் இருக்கும் அதிகாரிகளுக்குத் தெரியாமல், டெல்லி சர்வரில் ஒரே ஒரு பொத்தானை அழுத்தி லட்சக்கணக்கான மக்களின் ஜனநாயக உரிமையைப் பறிக்கும் அளவுக்கு ஒரு ரகசிய அமைப்பு செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. ஒரு குடிமகனுக்குத் தெரியாமலேயே அவரது வாக்குரிமையை அடியோடு அழிப்பது ஊழலை விடக் கொடூரமான ஜனநாயகக் குற்றம். 18 வயது நிரம்பிய இளைஞர்கள் புதிய வாக்காளராகப் பதிவு செய்யும்போது, "உங்கள் தாத்தா பாட்டி பழைய வாக்காளர் பட்டியலில் இருந்தார்களா?" என்று சட்டம் சொல்லாத ஒரு விதியைத் திணித்து விண்ணப்பத்தை நிராகரிக்கும் சூழலை உருவாக்கினர். முதல்முறை வாக்களிக்கும் லட்சக்கணக்கான இளம் தலைமுறையினரைத் தடுத்து நிறுத்தி, வாக்காளர் பட்டியலின் அமைப்பையே திட்டமிட்டு மாற்றியமைக்கும் வேலை இது. அரசியலமைப்புச் சட்டத்தின் 324-வது பிரிவு மற்றும் 2023-ம் ஆண்டு சட்டத்தின்படி, தேர்தல் ஆணையம் என்பது கூட்டாக முடிவெடுக்கும் ஒரு அமைப்பு. ஆனால், மற்ற இரண்டு ஆணையர்களின் ஆட்சேபனைகளையும் புறந்தள்ளி, தலைமைத் தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தல் ஆணையமே ஒரு தனிநபரின் கட்டுப்பாட்டிற்குள் சுருங்கிவிட்டது என்பது ஜனநாயகக் கட்டமைப்பின் உச்சகட்டச் சிதைவு. தேர்தல் நாளன்று இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்வதை விட, யார் வாக்களிக்க வேண்டும், யார் வாக்களிக்கக் கூடாது என்பதை தேர்தல் நடப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பே கணினி சர்வர் மூலம் முன்கூட்டியே தீர்மானிப்பதே இந்த முறைகேட்டின் உச்சம். மக்கள் வாக்களிக்கும் அடிப்படை உரிமையையே கபளீகரம் செய்வதால், இது இந்திய தேர்தல் வரலாற்றின் மிக மோசமான சதி என்று எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.கேள்வி 1: இந்த சர்ச்சை எப்படி வெளிச்சத்திற்கு வந்தது?
கேள்வி 2: ஆட்சேபனை தெரிவித்த ஆணையர்கள் யார்? யார் மீது புகார்?
தேர்தல் ஆணையர்கள்: சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி.திருட்டு வெளியில் நடக்கவில்லை, வீட்டிற்குள்ளேயே நடந்துள்ளது
13 கோடிக்கும் அதிகமான வாக்குகள் நீக்கம் - யார் கணக்கு? யார் அனுமதி?:
புதிய தலைமுறை வாக்காளர்களை முடக்கும் சதி
தனிநபர் சர்வாதிகாரம்:
வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே முடிவை மாற்றும் வேலை: