சென்னை: பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணுக்கு இந்திய ராணுவ ரகசியங்களை பகிர்ந்ததாக முன்னாள் பீரங்கிப்படை கேப்டனான பாபு என்பவரை உளவுத்துறை தகவலின் மூலம் கைது செய்திருக்கிறது காவல்துறை. ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு மும்பையில் இருந்தபோது பாகிஸ்தான் பெண்ணிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு ராணுவ ரகசியங்களை கசிய விட்ட அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த கீழ்வல்லம் பகுதியை சேர்ந்தவர் பாபு (52). இவர் கடந்த 28 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் பணியாற்றி கடந்த ஆண்டு ராணுவ தளவாட பிரிவில் கேப்டனாக இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
1994ஆம் ஓய்வு பெற்ற நிலையில், கடைசியாக பீரங்கிப் படையில் கேப்டனாக பணியாற்றியுள்ளார். இந்நிலையில், இதனை அடுத்து சொந்த ஊரான கீழ்வல்லம் பகுதியில் வசித்து வரும் இவரது செல்போன் வாட்ஸாப் எண் மூலம் ஓராண்டுக்கு முன் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் அறிமுகம் ஆகி உள்ளார். அந்த பெண் முதலில் நைசாக பேசி, வீடியோ காலில் ஆபசமாக பழகியிருக்கிறார். பழக்கம் தொடர்ந்த நிலையில், இந்திய ராணுவம் தொடர்பான தகவலை கேட்டுள்ளார். அந்த பெண் கேட்ட தகவல் அனைத்தையும் பகிர்ந்த அவர், தனக்கு தெரியாத தகவல்களையும் இராணுவ அலுவலகத்திற்கு போன் செய்து கேட்டுள்ளார். தொடர்ந்து அந்த பெண்ணிடம் ராணுவ ரகசியங்கள், தளவாட தகவல்களளை கசிய விட்டுள்ளார். இந்நிலையில், அடிக்கடி ராணுவம் தொடர்பான தகவல்களை பாபு கேட்பதால் சந்தேகம் அடைந்த ராணுவ அதிகாரிகள் மத்திய உளவுத்துறை மூலம் நேரில் விசாரித்துள்ளனர். விசாரணையில் பல தகவல்களை அடையாளம் தெரியாத அந்த பெண்ணிடம் கடந்த ஓராண்டாக தெரிவித்து வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மத்திய உளவுத்துறையினர் நேற்று முன்தினம் பாபுவை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பின்னர் நேற்று இரவு வேலூர் கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக வேலூர் கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முன்னாள் ராணுவ அதிகாரி பாபுவிடம் தகவலை பெற்ற பெண் யார்?எந்த ஐபி முகவரியில் இருந்து தொடர்பு கொண்டார்? அந்த ஐபி முகவரியை இயக்குபவர் யார்? வெளிநாட்டவர் தொடர்பு உள்ளதா? என்பன உள்ளிட்ட கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார்.துண்டு துண்டாக உடைக்கப்படும் பாகிஸ்தான்.. ராணுவ தளபதி அசீம் முனீர் கையில் பெரிய பிளான்.. பின்னணி