தமிழக துணை சபாநாயகர் நீக்கம்? ரெடியான கருப்பையா? சட்டசபை செயலாளருடன் சந்திப்பு – பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை துணை சபாநாயகராக இருக்கும் ரவிசங்கர் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார். அடிப்படை வசதி கோரி சென்ற நபரை அவர் தாக்கிய வீடியோ வெளியானது. இது தவெக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவரை அந்த பொறுப்பில் இருந்து நீக்கவும், அவருக்கு பதில் தவெக எம்எல்ஏ கருப்பையாவை அந்த பொறுப்பில் நியமிக்க முதல்வர் விஜய் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக சட்டசபையின் துணை சபாநாயகராக இருப்பவர் ரவிசங்கர். இவர் திருச்சி மாவட்டம் துறையூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். இந்நிலையில் தான் ரவிசங்கர், கார்த்திக் குமார் என்பவரை அடித்து மிரட்டி உள்ளதாக சர்ச்சை கிளம்பி உள்ளார்.

துறையூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் கார்த்திக் குமார் வசித்து வருகிறார். இவர் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று தொகுதியின் எம்எல்ஏவும், துணை சபாநாயகருமான ரவிசங்கரிடம் கூறியுள்ளார். ஆனால் ரவிசங்கர் அவரை அடித்து மிரட்டி உள்ளார்.

Tamil Nadu Deputy Speaker Ravi Shankar

இதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையானது. அதன்பிறகு கார்த்திக் குமார் வெளியிட்ட வீடியோவில் இருவரும் சமாதானம் ஆகிவிட்டதாக கூறினார். அதன்பிறகு திடீரென்று தனது கருத்தை மறுத்தார். துணை சபாநாயகர் ரவிசங்கர் எனது குடும்பத்தை கொல்வதாக மிரட்டியதால் தான் மாற்றி பேசியதாகவும், உண்மையில் துணை சபாநாயகர் ரவிசங்கர் தன்னை அடித்து மிரட்டியதாகவும் இன்னொரு வீடியோ வெளியிட்டார். இது சர்ச்சையானது.

இதனால் துறையூர் எம்எல்ஏ ரவிசங்கரை துணை சபாநாயகர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளன. அடுத்தடுத்து தவெக எம்எல்ஏக்கள் சர்ச்சைகளில் சிக்கி வருவது முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நாளை தவெக எம்எல்ஏக்களின் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் சென்னையில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் துறையூர் எம்எல்ஏ ரவிசங்கரை சட்டசபை துணை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்குவதற்கான முடிவை முதல்வர் விஜய் எடுக்கலாம் என சொல்லப்படுகிறது. இதற்கிடையே தான் இன்று திடீரென்று மதுரை மாவட்டம் சோழவந்தான் தவெக எம்எல்ஏ கருப்பையா, தமிழக சட்டசபை செயலாளருடன் சந்திப்பு ஒன்றை நடத்தி உள்ளார். இந்த தவெக எம்எல்ஏ கருப்பையா யார் என்றால் முதல்வர் விஜய் ஆட்சி அமைந்தவுடன் தமிழக சட்டசபையில் தற்காலிக சபாநாயகராக இருந்து சபையை வழிநடத்தியவர். இவர் இன்று சட்டசபை செயலாளரை சந்தித்து இருப்பது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

ரவிசங்கருக்கு பதில் முதல்வர் விஜய் அரசு கருப்பையாவிற்கு சட்டசபை துணை சபாநாயகர் பதவியை வழங்க தயாராகிவிட்டதா? அதற்காக தான் கருப்பையா சட்டசபை செயலாளரை சந்தித்து பேசினாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி தற்போயைத சபாநாயகர் ரவி சங்கர் பட்டியலினத்தை சேரந்தவர். அதேபோல் கருப்பையாவும் பட்டிலியனத்தை சேர்ந்தவர். இதனால் ரவிசங்கருக்கு சரியான மாற்றாக கருப்பையா இருக்கலாம் என முதல்வர் விஜய் கருதுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் நாளை தவெக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் துணை சபாநாயகர் பதவி ரவிசங்கரிடம் இருந்து பறிக்கப்பட்டு கருப்பையாவிற்கு வழங்கப்படுமா? என்பது பற்றிய விவாதம் நடக்கலாம் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+