உச்சத்தில் அரிசி, உளுந்து விலை.. வெங்காயம், சர்க்கரை விலையால் மக்கள் வேதனை.. எவ்வளவு அதிகரிப்பு?

  • சென்னை: அரிசி, பருப்பு, காய்கறி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்திருப்பது சாமானிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உளுந்து ரூ.120ல் இருந்து ரூ.150ஆகவும், சர்க்கரை ரூ.45ல் இருந்து ரூ.70ஆகவும், வெங்காயம் ரூ.40ல் இருந்து ரூ.90ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் புலம்ப தொடங்கியுள்ளனர்.

    Advertisement

    நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரத் தொடங்கி இருக்கிறது. சர்க்கரை, தக்காளி, வெங்காயம் உள்ளிட்டவற்றின் விலை உயர்வால் சாமானிய மக்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகின்றனர். தவெக ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திலேயே அரிசி விலை உயர்த்தப்பட்டது. தற்போது போதிய விளைச்சல் இல்லாததால் காய்கறிகளின் விலையும் அதிகரித்திருக்கிறது.

    Advertisement

    அதேபோல் உளுந்து விலை ரூ.120ல் இருந்து ரூ.150ஆகவும், சர்க்கரை விலை ரூ.45ல் இருந்து ரூ.70ஆகவும், வெங்காயம் விலை ரூ.40ல் இருந்து ரூ.90ஆகவும் விற்கப்படுகிறது. சர்க்கரை விலை உயர்வுக்கு E20 பெட்ரோல் காரணம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக திருவண்ணாமலை மார்க்கெட்டில் பொதுமக்கள் பேசுகையில், விலைவாசி ஒவ்வொரு நாளும் ஒரு ரேட்டில் இருக்கிறது.

    3 மாதங்களுக்கு முன் அரிசி ஒரு 25 கிலோ மூட்டை ரூ.900 ஆக இருந்தது. இப்போது ரூ.1,500ஆக உள்ளது. எண்ணெய் விலை ரூ.100ல் இருந்து ரூ.130ஆக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு பொருளின் விலை அதிகரித்துள்ளது. ஆனால் எங்களின் சம்பளம் அதே தான். அந்த சம்பளத்தை வைத்துதான் வீட்டு வாடகை, மின்சார கட்டணம், பொருள் வாங்க வேண்டும்.

    Advertisement

    இதில் மின்சார கட்டணம் 2 மாதத்திற்கு முன் கட்டியதைவிடவும் அதிகமாக வருகிறது. அதே யூனிட் தான் ஓடுகிறது. ஆனால் கட்டணம் மட்டும் அதிகரித்திருக்கிறது. பெட்ரோல் விலை ஏறினால் வண்டியை விட்டுவிட்டு சைக்கிளில் செல்கிறோம். ரூ.500க்கு வீட்டுக்கு தேவையான பொருள் வாங்கினால், அதனை வைத்து 2 நாட்கள் கூட முழுமையான இருப்பதில்லை. சம்பளம் ஆண்டுக்கு ஒருமுறைதான் ஏற்றுகிறார்கள்.

    3 மாதத்தில் அனைத்து விலைவாசியும் அதிகரித்துவிட்டது. திமுக ஆட்சியை விடவும் இப்போது இன்னும் மோசமாக இருக்கிறது. இதற்கு திமுக ஆட்சியே பரவாயில்லை. பொதுமக்கள் நிம்மதியாக இருக்க முடியவில்லை. மக்கள் உழைப்பதே நல்ல சாப்பாடு சாப்பிட தான். ஆனால் சாப்பாட்டை திருப்தியாக சாப்பிட முடிவதில்லை. குழந்தைகள் கேட்பதை கூட வாங்கி கொடுக்க முடியவில்லை. அது கஷ்டமாக இருக்கிறது.

    Advertisement

    விலைவாசி உயர்வால் மக்கள் மிகப்பெரிய பாதிப்பை மக்கள் அனுபவித்து வருகிறார்கள். 4 மாதத்திற்கு முன் இருந்த சர்க்கரை விலை இப்போது ஏறிவிட்டது. ஒரு டீ விலை ரூ.12 அல்லது ரூ.15க்கு விற்கிறோம். அதனையே கேள்வி கேட்கிறார்கள். சிறுகுறு வியாபாரிகள் மிகப்பெரிய பாதிப்பை அடைகிறார்கள்.. இன்னும் கொஞ்ச நாளில் வியாபாரமே செய்ய முடியாது போல.. எப்படி வியாபாரம் செய்வதென தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    Skyrocketing Rice, Pulses, and Vegetable Costs Burden Common Man due to E20 Petrol and El Nino effect