கூடுவாஞ்சேரி நிஷாவை துண்டாக்கிட்டு.. தம்பதி கூகுளில் தேடியது இதையா? சென்னை சூட்கேஸில் தலை இருந்ததா?

  • சென்னை: சென்னை கூடுவாஞ்சேரி நிஷா கொலை விவகாரத்தில் பல பயங்கரங்கள் வெளிவந்தவண்ணம் உள்ளது.. கைதாகி உள்ள கொலைக்குற்றவாளிகள் மாணிக் உத்தின் லஸ்கர், பகாமதி மாஜி 2 பேர் மீதும் கொலை மற்றும் கொலையை மறைத்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 3ம் தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து இவர்களை விசாரிக்க உள்ளனர். இதனால் நாளுக்கு நாள் நிஷா கொலையில் பரபரப்புகள் அதிகரித்தபடி உள்ளன.

    Advertisement

    கடந்த 5ம் தேதி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் ஆக்ரா ரயில்வே ஸ்டேஷனை வந்தடைந்தபோது, கேட்பாரற்று கிடந்த சூட்கேஸை ரயில்வே போலீசார் சோதனையிட்டனர். அதில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    Advertisement

    கூடுவாஞ்சேரி நிஷா

    உடல் பாகங்கள் சுற்றப்பட்டிருந்த பிளாஸ்டிக் கவர் சென்னை ஜவுளி நிறுவனத்தை சேர்ந்தது என தெரியவந்ததால், விசாரணை சென்னை நோக்கி திரும்பியது. சென்னை சென்ட்ரல் மற்றும் புறநகர் ரயில் நிலையங்களில் 350-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ஒரு ஆணும் பெண்ணும் சூட்கேஸை ரயில்வே ஸ்டேஷனுக்கு எடுத்து சென்று, ரயிலில் வைத்துவிட்டு சென்றதை கண்டுபிடித்தனர்.

    இதனை தொடர்ந்து விசாரணையில், அந்த 2 பேரிடமும் கூடுவாஞ்சேரியில் தங்கியிருந்த வீடு கண்டறியப்பட்டது. அங்கு போலீசார் சோதனையிட்டபோது, பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.

    Advertisement

    சென்னை பெண் கொலை

    சில உடல் பாகங்கள் பிரியாணி அண்டாவில் காய்கறிகள் மற்றும் மைதா மாவுடன் கலந்து வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தடயவியல் பரிசோதனையில் கொலை செய்யப்பட்டவர் ஹைத்துல் நிஷா (38) என அடையாளம் காணப்பட்டார். அவருடன் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மணிக் உத்தீன் லஸ்கர் (22), அவரது மனைவி பகாமதி மாஜி (20) ஆகியோர் தங்கியிருந்தது தெரியவந்தது.

    தலைமறைவான இருவரையும் தனிப்படை போலீசார் தேடிய நிலையில், மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டம் காஷிம்பூரில் பதுங்கியிருந்த 2 பேரையும் கைது செய்தனர். அவர்களை அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், விமானம் மூலம் நேற்றுமுன்தினம் சென்னை அழைத்து வந்தனர். பிறகு 2 பேரையும் போலீஸ் ஜீப்பில் கூடுவாஞ்சேரி ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Advertisement

    பிரியாணி அண்டா, மைதா மாவு

    நிஷாவின் வீட்டுக்கு இருவரையும் நேரில் அழைத்துச் சென்று கொலை எப்படி நடந்தது? உடலை எங்கே துண்டு துண்டாக வெட்டப்பட்டது? உடல் பாகங்களை சூட்கேஸில் அடைத்தது எப்படி? சடலத்தை வெட்ட பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட பொருட்கள் எங்கே? என்றெல்லாம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

    இதனிடையே நிஷா கொலை குறித்து போலீஸ் தரப்பில் சொல்லும்போது, கள்ளக்காதல் தொடர்பாக இந்த கொலை நடந்துள்ளது.. நிஷா கர்ப்பமாகிவிட்டதால், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, மாணிக் உத்தின் லஸ்கரிடம் கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.. அதனால் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாகவே, உத்தின் லஸ்கரும், அவரது மனைவி பகாமதியும் சேர்ந்து நிஷாவை திட்டம் போட்டு கொன்றுள்ளனர்.

    Advertisement

    மனித சதை துண்டுகள்

    இந்த கொலையை செய்ய, மொத்தம் 3 நாட்கள் பிளான் போட்டிருக்கிறார்கள்.. பல்லாவரம் மார்க்கெட்டிலிருந்து இதற்காகவே கத்தி வாங்கினார்கள்.. நிஷா தூங்கும்போது, முகத்தில் மயக்க மருந்து தெளித்துவிட்டு அதற்கு பிறகு அவரை அடித்து கொன்றுள்ளனர். உயிர் பிரிந்ததுமே அவரது உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி சிதைத்துள்ளனர். அத்தனை உடல் பாகங்களையும் கத்தியை கொண்டே வெட்டியிருக்கிறார்கள்..

    பிறகு, பிரியாணி அண்டாவில் அந்த உடல் பாகங்களை போட்டுள்ளனர். இதற்கு பிறகு உடல் பாகங்கள் அழுகாமல் இருப்பதற்காக, யூடியூப் வீடியோக்களை பார்த்து, அதற்கென உள்ள திரவங்களை கடைக்கு போய் வாங்கி வந்து அண்டாவில் உள்ள உடல் பாகங்கள் மீது ஊற்றியிருக்கிறார்கள்.. வீட்டில் வைத்திருந்த மைதா மாவு, மசாலா பவுடர்களை அந்த அண்டாவிலேயே கொட்டிவிட்டு, அதை மூடி வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

    Advertisement

    நிஷாவின் தலை எங்கே

    ஆனால், நிஷாவின் தலையை வெட்டி சூட்கேஸிலேயே வைத்து விட்டதாக சொல்கிறார்கள்.. தலையை சிதைத்து சூட்கேசில் வைத்துவிட்டோம் என்றும், எங்குமே அதனை வீசவில்லை என்றும் தம்பதி உறுதியாக சொல்கிறார்கள்.. அதனால் ஆக்ராவில் ரயில் பெட்டியிலிருந்து எடுக்கப்பட்ட சூட்கேசில் தலை இருந்ததா? மற்ற அனைத்து உடல் பாகங்களும் இருந்ததா? என்றெல்லாம் ஆக்ரா ரயில்வே போலீசாரிடமும், சென்னை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    தற்சமயம், மாணிக் உத்தின் லஸ்கர், பகாமதி மாஜி 2 பேர் மீதும் கொலை மற்றும் கொலையை மறைத்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான இருவரையும் நாளை மறுநாள் அதாவது செப்டம்பர் 3ம் தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். அதற்கு பிறகுதான் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்களை ஜெயிலில் அடைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்கிறார்கள்.

    English Summary

    Guduvanchery Suitcase Nisha Murder.. What Did the Chennai Couple Search on Google After Dismembering Her?