“ஆண்டவன் மீது ஆணை..” முதல் நாளே போட்டு உடைத்த விஜய்! புருவத்தை உயர்த்திய இடதுசாரிகள்!
சென்னை: விஜய் இன்று முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். இந்த விழாவில், ஆண்டவன் மீது ஆணையாக உறுதியேற்கிறேன் என்று விஜய் கூறியிருந்தது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
மதவாத சக்திகள் உள்ளே வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் விஜய்க்கு ஆதரவு என்று இடதுசாரிகள் கூறியிருந்தனர். ஆனால், இடதுசாரி தலைவர்களுக்கு நன்றி சொல்ல சென்ற விஜய் கையில் சிவப்பு கயிறு நெற்றியில் திலகமிட்டு சென்றிருந்தார். அப்போதே பலரும் விஜய் குறித்து எச்சரிக்க தொடங்கினர்.

இடதுசாரிகள் மற்றும் திமுக எம்பிக்கள் பலரும் உளமாற பதவியேற்கிறேன் என்று சொல்லிதான் பதவியேற்பார்கள். ஆனால் விஜய், பதவியேற்கும்போது ஆண்டவன் மீது ஆணையாக என்று சொல்லியிருப்பது, இடதுசாரிகள் வயிற்றி புளியை கரைத்திருக்கிறது.
விஜய் மட்டுமல்லாது அடுத்து அமைச்சராக பதவியேற்ற என். ஆனந்த், செங்கோட்டையன், அருண்ராஜ், பிரபு என அனைவரும் ஆண்டவன் மீது ஆணையாக பதவியேற்றுக்கொள்வதாக கூறியிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications