கரூர் இஷ்யூ தவெகவுக்கு சவப்பெட்டியாகி இருக்கணும்.. ஆனா கிஃப்ட்டா மாறிடுச்சு! இதுவே காரணம்: அய்யநாதன்

  • சென்னை: "கரூர் சம்பவம் தமிழ்நாட்டில் தவெகவுக்கு ஒரு பெரிய சவப்பெட்டியாக மாறியிருக்க வேண்டும். ஆனால், மாறாக அந்த சம்பவம் அவருக்கு ஒரு பெரிய கிஃப்ட்டாக மாறியுள்ளது. அது எதனால் என்றால், விஜய் பாஜகவின் அடிமையாகிப் போனதால்தான்" என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

    Advertisement

    ஒரு பிரபல சேனலுக்கு பேட்டி தந்துள்ள அய்யநாதன், "சமூக நீதித்துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் வன்னியரசு எழுப்பிய கேள்விகள் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்குவதில் முரண்பாடுகள் உள்ளன.

    Advertisement

    திமுக மைனாரிட்டியாக இருந்தபோதே கூட்டணி கட்சிகளுக்கு பதவிகளை வழங்கியது.. ஆனால், தேர்தல் வெற்றிக்கு பிறகு பதவியும் அதிகாரமும் கிடைத்தவுடன் தவெக தங்கள் நிலைப்பாட்டை மாற்றி பேசுகிறார்கள்.. மாற்றத்தை விரும்புவதாக சொல்லிவிட்டு பிறகு மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்..

    திமுக - மைனாரிட்டி

    தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு மற்றும் தமிழ் தேசிய பாதையில் பயணிக்க போவதாக கூறப்படுவதன் பின்னணியில் எந்த நியாயமும் இல்லை... தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் பதவிகள் பரிதாபத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டதா அல்லது சமூக நீதியின் அடிப்படையிலா என்ற கேள்வி எழுகிறது.

    Advertisement

    தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக திமுக அரசு செய்த சாதனைகள், சட்டப் போராட்டங்கள் மற்றும் கலைஞர் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட ஒதுக்கீடுகள் மிக முக்கியமானவை.

    திமுக மீது அபாண்டமான குற்றச்சாட்டு

    தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து பேசுபவர்களை எதிர்ப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, திமுக மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்.. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் சமூகத்தில் முன்னேறுவதற்கும், அதிகாரத்தில் பங்கு பெறுவதற்கும் எந்த ஆட்சியினர் காரணம் என்பதை தவெக தெளிவாக சொல்ல வேண்டும்.

    இஸ்லாமியர்களின் பாதுகாப்பு மற்றும் திமுகவின் நிலைப்பாடு குறித்து இஸ்லாமிய எம்எல்ஏக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.. குறிப்பாக, 1998 கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு நிகழ்வின் போது திமுக அரசு எடுத்த கடுமையான நடவடிக்கைகள் மற்றும் அதன் பின்னணியில் ஏற்பட்ட அரசியல் தாக்கங்கள் வரலாற்றில் பதிவாகியிருக்கின்றன..

    Advertisement

    தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்திற்காக டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது திராவிட ஆட்சிக்காலத்தின் பெரும் சாதனையாகும். தமிழக வெற்றிக் கழகத்தில் எம்பிக்கள் இல்லாததால் அவர்களை இந்தியா கூட்டணியில் சேர்க்க முடியாது என்று மாணிக்கம் தாகூர் சொல்வதில் அரசியல் லாபங்கள் அடங்கியுள்ளன.

    விஜய் பிரதமர் வேட்பாளராக 9.2% வாக்குகள்

    தேர்தல் களத்தில் ஊடகங்களின் சர்வேக்கள் நம்பகத்தன்மையற்றவை.. இந்தியா டுடே போன்ற ஊடகங்கள் விஜய்யை பிரதமர் வேட்பாளராக 9.2% மக்கள் தேர்ந்தெடுத்ததாக சொல்வது ஒரு புள்ளிவிவர மோசடி அல்லது செயற்கையாக ஹைப் உருவாக்குவதற்கான வேலை மட்டுமே.

    கேரளாவில் விஜய்யின் உருவபொம்மை எரிக்கப்பட்ட நிகழ்வு மற்றும் வட இந்தியாவில் விஜய் குறித்து பரப்பப்படும் தகவல்கள் திட்டமிட்ட பிரச்சாரமாகும். தமிழ்நாட்டில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு காங்கிரஸ் கட்சி எந்த வகையிலும் முக்கியக் காரணம் கிடையாது.. தமிழ்நாட்டில் காங்கிரஸின் வாக்கு வங்கி மிகக் குறைவு.

    Advertisement

    கட்சிகள் தனித்து நின்று போட்டியிடும்போது கிடைக்கும் வாக்கு சதவீதங்களே கிரவுண்ட் ரியாலிட்டி எனப்படும் உண்மையான நிலவரத்தைக் காட்டும்.

    தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் இன்னும் 180 தொகுதிகளில்தான் பலமாக உள்ளது. சென்னை போன்ற பகுதிகளில் உள்ள 16 தொகுதிகளில் 14 தொகுதிகளில் தவெக பலமாக உள்ளதாக சொல்கிறார்கள்.. அப்படியெல்லாம் எதுவும் கிடையாது.

    வாக்குச்சீட்டு முறை

    ஜனநாயகத்தைக் காப்பாற்றவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நீக்கிவிட்டு மீண்டும் வாக்குச் சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே அனைத்துத் தலைவர்களையும் நேரில் சந்தித்து வருகிறோம்... அந்தவகையில் மு.க. ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினோம்.

    Advertisement

    எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து எங்களிடம் பேசும்போது, "நாங்கள் பரிசீலனை செய்து பார்த்தோம், எங்களாலேயும் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்களிடம் டாக்டரேட் வாங்கிய இன்ஜினியர்கள் தான் இருக்கிறார்கள், அவர்களாலேயே கண்டுபிடிக்க முடியாதபோது, இதை சரி செய்ய வேண்டியது ஆளுங்கட்சியும், நீதிமன்றமுமதான் உதவ வேண்டும்" என்று தெளிவாக சொல்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி தெளிவு

    எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை, தான் மட்டுமே அதிமுகவின் மையமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.. தான் மட்டுமே தலைவராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரே தவிர, மற்றபடி அரசியல் சூழலை மதிப்பிடுவதில் எப்போதும் தெளிவாகவே இருக்கிறார். கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் இருந்து வந்த மத்திய அமைச்சர்கள் எடப்பாடியிடம் கூட்டணி குறித்து பேசியிருக்கிறார்கள். அதற்கு எடப்பாடி, தவெக போன்ற கட்சிகள் எல்லாம் நமக்குத் தேவையில்லை, நாமே ஜெயிப்போம் என்று அவர்களிடம் திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.

    கரூர் சம்பவம் தமிழ்நாட்டில் தவெகவுக்கு ஒரு பெரிய சவப்பெட்டியாக மாறியிருக்க வேண்டும். ஆனால், மாறாக அந்தச் சம்பவம் அவருக்கு ஒரு பெரிய கிஃப்ட்டாக மாறியுள்ளது. அது எதனால் என்றால், விஜய் பாஜகவின் அடிமையாகிப் போனதால்தான்.

    இன்றுவரை கள்ளக்குறிச்சி சம்பவத்தில் எந்தவிதமான குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. இந்தச் சம்பவம் நடந்து இன்றுடன் 11 மாதங்கள் முடிந்துவிட்டன. இந்த சம்பவத்தில் யார் பக்கத்தில் விஜய் நிற்கிறார்? விஜய்யை யார் காப்பாற்றுகிறார்கள்? என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Karur Issue Should Have Been a Coffin for TVK.. But It Turned Into a Gift! Ayyanathan Makes Sensational Remark