படித்ததும் சிரித்துவிட்டேன்! தசரா விழாவில் மோடி சொன்னதை சுட்டிக் காட்டி மார்க்சிஸ்ட் சண்முகம் கிண்டல்

  • சென்னை: ஏழைகள், விளிம்பு நிலையில் உள்ள மக்களின் நலனா? பிரதமர் நரேந்திர மோடி சொன்னதும் எனக்கு குபீர்னு சிரிப்புதான் வந்தது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ஏழைகள் மற்றும் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் நலனே அரசின் முதன்மையான பணி - இப்படிக் கூறியிருப்பது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அல்ல; நேற்று தசரா விழாவில் பிரதமர் மோடி அவர்கள்தான் இப்படிப் பேசியுள்ளார்.

    Advertisement

    படித்தவுடன் சிரித்துவிட்டேன். 'ஏழைகள், விளிம்பு நிலை மக்கள்' என்று வார்த்தை அளவிலாவது சொன்னதற்காகப் பிரதமரைப் பாராட்டுகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    வடமாநிலங்களில் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் டெல்லியில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொம்ட பிரதமர் நரேந்திர மோடி, பேசுகையில், கடந்த 12 ஆண்டுகளாக அரசாங்கத்தின் வளர்ச்சித் திட்டங்களில் ஏழை, விளிம்பு நிலை மக்களின் நலனே முதன்மையான இந்தியர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், அவர்களுக்கான வாய்ப்புகளை விரிவுப்படுத்தவும் நோக்கமாகக் கொண்ட முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்திருந்தார்.

    எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியிருந்தது. அப்போது பெ. சண்முகம் தனது ட்விட்டர் பக்கத்தில் முதலில் வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம் மோசடி செய்தார்கள்.

    Advertisement
    சனியன்கள் ஒழிந்தது? வாய் துடுக்கு ஆர்எஸ் பாரதி! இத்தோடு பேசுவதை நிறுத்திக்கனும்! சண்முகம் வார்னிங்!

    பிறகு எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கி மோசடி செய்தார்கள். தற்போது, தலைமைத் தேர்தல் ஆணையரே மோசடி பேர்வழி என்பது அம்பலமாகி இருக்கிறது.

    ஆனாலும் இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று நம்பச் சொல்கிறார்கள்? ஜனநாயகம் காப்போம்! வாக்குரிமை காக்க களம் காண்போம்!! இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

    அது போல் அண்மைக்காலமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் ஏழை நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளே காரணம் என்றும் விமர்சித்திருந்தார்.

    Advertisement

    அது போல் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழகம் போன்ற தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையில் தொகுதி மறுவரையறை கொண்டு வர நினைப்பதை எதிர்த்து சண்முகம் குரல் கொடுத்துள்ளார்.

    அது போல் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய மழை, வெள்ள நிவாரண நிதிகள், கல்வி, உள்கட்டமைப்புக்கான மத்திய நிதி ஒதுக்கீடுகளை மறுப்பதன் மூலம் தமிழகத்தின் உரிமையைப் பாஜக அரசு வஞ்சிப்பதாகவும் சண்முகம் குற்றம்சாட்டியிருந்தார்.

    மேலும் சென்னை விமான நிலையம் உள்ளிட்ட பல முக்கியமான விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின்சாரத் துறை, ரயில்வே போன்ற பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு தாரை வார்ப்பதாக மத்திய அரசைத் தொடர்ந்து சண்முகம் விமர்சித்து வருகிறார். தற்போது கூட சென்னை விமான நிலையம், கொல்கத்தா விமானங்களை நிர்வகிக்கும் பணிகளை பொது- தனியார் பங்களிப்பில் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் நேற்று கிடைத்துள்ளது.

    English Summary

    Marxist state secretary P. Shanmugam criticises PM Modi for his speech in Dasara function. PM uses the word welfare of the marginal people.