வழக்கறிஞர்கள் பாதுக்காப்பு சட்டம்.. சட்டத்துறை அமைச்சர் சிடிஆர்.நிர்மல்குமாரின் புதிய அறிவிப்பு

  • சென்னை: தமிழகத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் சிடிஆர்.நிர்மல்குமார் தெரிவித்தார்.

    Advertisement

    தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் எழுச்சி மாநாடு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஈரோடு அருகேயுள்ள மேட்டு கடையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

    Advertisement

    தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த வழக்கறிஞர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவராக வழக்கறிஞர் கரூர்.மாரப்பன், கவுரவ தலைவராக தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்க தலைவரும், மூத்த வழக்கறிஞருமான எஸ்.பிரபாகரன் பொதுச்செயலாளராக அய்யாவு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.

    தமிழ்நாடு புதுவை பார்கவுன்சில் தலைவர் கதிரவன்,துணைத்தலைவர் பாலமுருகன், அகில இந்திய பார்கவுன்சில் உறுப்பினர் அமல்ராஜ் உள்ளிட்ட பார்கவுன்சில் உறுப்பினர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.

    இந்த மாநாட்டில் பேசிய கூட்டமைப்பின் கவுரவ தலைவரும், மூத்த வழக்கறிஞருமான எஸ். பிரபாகரன், வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலியே வழக்கறிஞர்களுக்கான பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும்,
    வழக்கறிஞர்களுக்கான சேம நல நிதியை உயர்த்துவது தொடர்பான தீர்மானம்,அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வழக்கறிஞர்களின் இணைப்பது தொடர்பான தீர்மானத்தை வலியுறுத்தினார்.

    Advertisement

    இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர் , "அரசியலை தாண்டி அரசாங்கத்திற்காக வழக்கறிஞர்களுக்காக வந்துள்ளதாகவும்,தவெக அரசு வழக்கறிஞர்கள் பிரச்சனையை தீர்க்க முதல் நாள் முதல் கொண்டு உழைத்து வருவதாக தெரிவித்தார்.

    வழக்கறிஞர்கள் கஷ்டங்களை நன்றாக அறிவேன் என குறிப்பிட்ட சட்டத்துறை அமைச்சர் சிடிஆர்.நிர்மல்குமார், முதல்வர் விஜய்யின் ஒப்புதலோடு வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை முன்னெடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்..

    வரும் பொங்கலுக்குள் போக்சோ மற்றும் போதை பொருட்கள் தடுப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும்
    பொதுமக்களுக்கான நீதி சரியான நேரத்தில் கிடைக்க வேண்டும் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

    Advertisement

    கீழமை நீதிமன்றங்களில் வழக்கறிஞர்குக்கான அடிப்படை வசதிகள் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். வழக்கறிஞர்களுக்கான சேம நல நிதி உயர்த்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும்,
    வழக்கறிஞர்களுக்கான மருத்துவ காப்பீடு கிடைக்க முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

    இந்த மாநாட்டில், வழக்கறிஞர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்றி அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், வழக்கறிஞர்களின் சேமநல நிதியை பத்து லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், வழக்கறிஞர் குடும்பத்திற்கான விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தைத் ஏற்படுத்தி தர வேண்டும், தகுதியான வழக்கறிஞர்களுக்கு வீட்டு வசதி வாரியத்தால் உள்ள வீடுகள் ஒதுக்கி தரப்பட வேண்டும்,

    Advertisement

    கீழமை நீதிமன்றங்களை அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை ஈரோட்டைச் சேர்ந்த பார் கவுன்சில் உறுப்பினர் அருள் முருகன் மேற்கொண்டிருந்தார்.. தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.

    English Summary

    Steps to Enact Advocates' Protection Act in Tamil Nadu: Law Minister C.T.R. Nirmal Kumar