ஸ்டாலினை வீழ்த்திய கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவை.. கட்டி அணைத்து கன்னத்தை கிள்ளி முத்தமிட்ட ஆனந்த்

  • சென்னை: கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் கன்னத்தில் கிள்ளி கட்டியணைத்த அமைச்சர் ஆனந்த் அவருக்கு முத்தமிட்டு அன்பை பொழிந்தார்.

    Advertisement

    விஜய்யின் ரசிகராக இருந்து அவரது ரசிகர் மன்றத்தை கவனித்து வந்தவர் ஆனந்த். இவர் புதுவையைச் சேர்ந்தவர். அங்கு புஸ்ஸி தொகுதியில் வென்றதால் இவர் புஸ்ஸி ஆனந்த் என அழைக்கப்படுகிறார்.

    Advertisement

    தற்போது திநகர் தொகுதியில் போட்டியிட்டு அமைச்சராகவும் ஆகிவிட்டார். இவர் ரசிகர் மன்றத்தில் இருந்து வந்ததால், இவருடன் இளைஞர்கள் நன்றாக பழகுகிறார்கள்.

    அந்த வகையில் அமைச்சரான நிலையிலும் விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்து தவெகவில் இணைந்தவர்களின் விழாக்களுக்கும் சென்று வருகிறார்கள்.

    அத்துடன் புதிய சட்டசபை உறுப்பினர்களின் அலுவலக திறப்பு விழாவுக்கும் ஆனந்த் சென்று சிறப்பிக்கிறார். அந்த வகையில் அவர் மதுரவாயல் எம்எல்ஏ ரேவந்த் சரண் அலுவலக திறப்பு விழாவுக்கு சென்றார்.

    அங்கு ரிப்பன் வெட்டி அலுவலகத்தில் சாமி கும்பிட்டு அங்கிருந்தோருக்கு இனிப்புகளை வழங்கினார். அப்போது அங்கு வந்த கொளத்தூர் சட்டசபை உறுப்பினர் வி.எஸ்.பாபுவை பார்த்து அவரை கட்டி அணைத்தார்.

    Advertisement

    மேலும் அவரது கன்னத்தை கிள்ளி முத்தமிட்டார். ஆனந்தின் அன்பு மழையில் நனைந்த பாபு, ஆனந்தை விடாமல் பிடித்துக் கொண்டே இருந்தார்.

    கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை தோற்கடித்தவர் வி.எஸ்.பாபு. இவர் திமுகவில் இருந்தார். கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். 2011 ஆம் ஆண்டு கொளத்தூரில் ஸ்டாலின் போட்டியிட்ட போது இவர்தான் முன்னின்று அனைத்து பணிகளையும் கவனித்தார்.

    பின்னர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அங்கு அவருக்கு முக்கியத்துவம் இல்லாத நிலையில் அதிலிருந்தும் விலகி கடந்த பிப்ரவரி மாதம் தவெகவில் இணைந்தார்.

    Advertisement

    2026 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டார். பாபு 82,997 வாக்குகளும் ஸ்டாலின் 74,202 வாக்குகளையும் பெற்றனர். இருவருக்கும் இடையே வாக்கு வித்தியாசம் 8,795 ஆகும்.

    கொளத்தூர் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ, முதல்வரையே தோற்கடித்து விஜய்யின் மனதில் சிறப்பிடம் பெற்றார் பாபு.

    English Summary

    Minister Anand hugs Kolathur MLA V.S.Babu and kisses him by pinching his cheeks at Maduravoyal MLA office inauguration.