ஜீவனாம்சம் கேட்ட மாடல் அழகி.. ரூ.1.70 கோடி வீடு இருக்கே என்ற கணவன்.. நீதிபதி என்ன சொன்னார் தெரியுமா

  • சென்னை: சென்னையைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர் தொடர்ந்த குடும்பநல வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. ரூ.1.70 கோடி மதிப்பிலான வீடும், 2 ஆடம்பர கார்களும் அந்த மனைவிக்கு இருந்தாலும், கணவர் மாதந்தோறும் ரூ.1 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்ற குடும்பநல நீதிமன்றத்தின் உத்தரவை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

    Advertisement

    முதலில் என்ன நடந்தது என்று வழக்கை பார்ப்போம்.. ஜி.ஆர். கோகுல் என்பவரும், மாடல் அழகியான ஐஸ்வர்யாவும் கடந்த 2014-ம் ஆண்டு பொதுவான நண்பர் மூலம் அறிமுகமானார்கள்.. கோகுல் தன்னை சினிமா தயாரிப்பாளர் என்றும், கல்வி நிறுவனம் நடத்தி வருவதாகவும் சொல்லி ஐஸ்வர்யாவிடம் நெருங்கி உள்ளார்.

    Advertisement

    மாடல் அழகி மனைவி

    அத்துடன், முதல் மனைவியை தான் விவாகரத்து செய்துவிட்டதாகக்கூறி அதற்குரிய ஆவணங்களையும் ஐஸ்வர்யாவிடம் காட்டியிருக்கிறார்.. இதையடுத்து, உத்திரமேரூரில் உள்ள கோயிலில் கடந்த 2020 ஜனவரி 20-ம் தேதி ஐஸ்வர்யாவ - கோகுல் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்..

    இவர்களுக்கு 2021 மார்ச் 15-ம் தேதி வெற்றி என்ற ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில காலம் வரை, அன்பாக, பாசமாக பேசி கொண்டிருந்த கோகுல், திடீரென அவர்களைப் பார்ப்பதை நிறுத்திவிட்டார்.

    ஜீவனாம்சம் கேட்டு மனு

    இந்நிலையில், குழந்தை பிறந்ததால் ஐஸ்வர்யாவில் மாடலிங் வேலைக்கும் போக முடியவில்லை.. குறைந்த வருமானத்திலும் குடும்பத்தை நடத்த முடியவில்லை.. அதனால் ஐஸ்வர்யா குடும்ப நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். கோகுல் மாதம் ரூ.30 லட்சம் சம்பாதிப்பதால், தனக்கு ரூ.6 லட்சமும், மகனுக்கு ரூ.4 லட்சமும் ஜீவனாம்சம் கோரினார்.

    Advertisement

    உடனே கோகுல் இதற்கு பதில் மனு தாக்கல் செய்தார்.. இந்த கல்யாணம் முறைப்படி நடக்கவில்லை, ஐஸ்வர்யாவுக்கு ஏற்கனவே ரூ.1.70 கோடி மதிப்பிலான பிளாட் மற்றும் 2 ஆடம்பர கார்கள் இருக்கின்றன.. அப்படியிருக்கும்போது ஜீவனாம்சம் தேவையில்லை என்று வாதிடவும் செய்தார்.

    ஹைகோர்ட் நீதிபதி தந்த தீர்ப்பு

    இந்த வழக்கை விசாரித்த குடும்ப நீதிமன்றம், ஏமாற்றி திருமணம் செய்ததைச் சுட்டிக்காட்டி, 2026 மார்ச் 13-ம் தேதி ஐஸ்வர்யாவுக்கு மாதம் ரூ.1 லட்சமும், குழந்தை வெற்றிக்கு ரூ.1.50 லட்சமும் ஜீவனாம்சமாக வழங்க அதிரடியாக உத்தரவிட்டது.

    மன அழுத்தம், ஜீவனாம்சம், மருத்துவ செலவு.. 43வது மாடியில் இருந்து குதித்த 28 வயது இன்ஜினியர் மரணம்
    Advertisement

    குடும்ப நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து கோகுல், உடனே சென்னை ஹைகோர்ட்டுக்கு அப்பீலுக்கு போனார்.. இந்த வழக்கை நீதிபதி சுந்தர் மோகன் விசாரித்தார்.. அப்போது ஆதார் அட்டைகள், பிறப்புச் சான்றிதழ் மற்றும் போட்டோக்களை சுட்டிக்காட்டி, இருவரும் நீண்ட காலமாக கணவன்-மனைவியாக வாழ்ந்ததை உறுதி செய்தார்.

    தொடர்ந்து தன்னுடைய தீர்ப்பில் நீதிபதி சொல்லும்போது, "ஜீவனாம்சம் வழக்குகளில் குற்ற வழக்கு போல திருமணத்தை கடுமையாக நிரூபிக்கத் தேவையில்லை. ஒரு ஆணும் பெண்ணும் நீண்ட காலம் குடும்பமாக வாழ்ந்தாலே திருமணம் நடந்ததாகக் கருதப்படும்..

    மனைவியிடம் விலைமதிப்புள்ள பிளாட் மற்றும் சொகுசு கார்கள் இருப்பது அவரது முறையான மற்றும் நிலையான மாதாந்திர வருமானம் ஆகாது.. அதனால் ஐஸ்வர்யாவுக்கு மாதம் ரூ.1 லட்சமும், மகனுக்கு ரூ.1.50 லட்சமும் சேர்த்து மொத்தம் மாதம் ரூ.2.50 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும்" என்று கூறி குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.

    English Summary

    Model Wife Seeks Maintenance.. Husband Says She Owns Rs 1.70 Crore House.. What Did HC Say?