கிச்சடி இருக்கு.. சாம்பார் இல்லை! அரசு பள்ளி மாணவர்கள் 2,500 பேர் பட்டினி! சொதப்பிய அதிகாரிகள்

  • சென்னை: அரக்கோணத்தில் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட காலை உணவில், கிச்சடிக்கு சாம்பார் பரிமாரப்படாததால், சுமார் 2,500 மாணவர்கள் உணவை எடுத்துக்கொள்ளாமல் பட்டினியுடன் வகுப்பறைக்கு சென்றிருக்கின்றனர்.

    Advertisement

    மாணவர்கள் பசியுடன் இருக்கக்கூடாது என்பதால்தான் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், அந்த உணவையும் முழுமையாக கொடுக்காமல் தவிர்க்கப்பட்டிருப்பது இந்த திட்டத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது என்று பலரும் விமர்சித்துள்ளனர்.

    Advertisement

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள அரசு பள்ளியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அரக்கோணத்தில் உள்ள சுமார் 23 அரசு பள்ளிகளில் 2,500க்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் காலை உணவு திட்டத்தை நம்பித்தான் பள்ளிக்கு வருகிறார்கள். இப்படி இருக்கையில், இன்று மாணவர்களுக்கு கிச்சடி விநியோகிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கான சாம்பார் விநியோகிக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் கிச்சடியை சாப்பிடாமல் தவிர்த்திருக்கிறார்கள். இன்று இந்த 2,500 மாணவர்களும் பட்டினியாக பள்ளிக்கு சென்றிருக்கிறார்கள்.

    அரசு பள்ளியில் சமானிய மக்களின் குழந்தைகள்தான் படிக்கிறார்கள். குழந்தைகளின் பெற்றோர்கள் பெரும்பாலும் கூலி தொழிலாளர்களாகவும், தினக்கூலியாகவும் இருக்கின்றனர். காலையில் எழுந்து வேலைக்கு போவதா? குழந்தைகளுக்கு சோறு செய்து வைப்பதா? என்பதே இவர்களுக்கு பெரிய கேள்வியாக இருக்கிறது. இப்படியான வாழ்க்கை போராட்டத்தால், பெரும்பாலும் பள்ளிக்கு வரும் குழந்தைகள் காலை உணவை எடுத்துக்கொள்ளாமலேயே வருகின்றனர்.

    Advertisement

    குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டுதான், மாணவர்களின் பசியை போக்க காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அப்படி இருந்தும் கூட மாணவர்களுக்கு உணவு முறையாக விநியோக்காமல் இருப்பது.. இந்த திட்டத்தின் நோக்கத்தை கேள்வி எழுப்பியிருப்பதாக கல்வியாளர்கள், மாணவர் அமைப்பினர், பெற்றோர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

    இந்தியாவை மூன்று பக்கமும் சூழும் ஆபத்து.. மாபெரும் உணவு பஞ்சம் தாக்கும்! விநியோக சங்கிலிக்கு சவால்!

    ஏன் அரக்கோணத்தில் விநியோகிக்கப்பட்ட காலை உணவு முழுமையானதாக இல்லை? என்று அரக்கோணம் நகராட்சி சுகாதாரத்துறை அலுவலரிடம் கேட்கையில், புதியதாக காண்டிராக்ட் மாற்றப்பட்டிருப்பதால் கிச்சடிக்கு சாம்பார் வழங்கப்படவில்லை என்று விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    மேலோட்டமாக பார்த்தால் இது சாதாரண பிரச்சனை மாதிரித்தான் தெரியும். உண்மையில் இது மிகப்பெரிய பிரச்சனை என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். அதாவது மாணவர்களுக்கான உணவுப்படி மிக மிக குறைவாக இருக்கிறது. இதனால்தான் மாணவர்களுக்கு தரமான உணவை வழங்க முடிவதில்லை. இனி வரும் காலங்களில் இதுபோன்ற உணவு பிரச்சனைகள் அதிகம் வரும். எனவே அரசு முன்னெச்சரிக்கையாக இப்போதே தீர்வு காண வேண்டும். மாணவர்களின் உணவு படி தொகையை அதிகரிப்பதுதான் தீர்வு என்று கூறியுள்ளனர்.

    English Summary

    Arakkonam, school: In Arakkonam, approximately 2,500 students went to their classrooms hungry without eating the meal provided to them, as sambar was not served with the kichadi.