ஒடிசா காட்டில் 5 ஒராங்குட்டான்கள்.. மரத்தில் தொங்கியதை கண்டு ஆடிப்போன அதிகாரி.. இவங்க எப்படி இங்கே?

  • புவனேஸ்வர்: ஒடிசா காட்டுக்குள் திடீரென 5 குட்டி ஒராங்குட்டான்கள்.. மரக்கிளைகளில் தொங்கியபடி விளையாடிக் கொண்டிருந்த அந்த காட்சியை பார்த்தவர்கள் முதலில் ஏதோ வித்தியாசமான குரங்குகள் என்றுதான் நினைத்தார்கள்.. ஆனால் வனத்துறையினர் வந்து பார்த்தபோதுதான், அவை மிகவும் அரிய ஒராங்குட்டான்கள் என்பது தெரியவந்தது. அதிலும் அவை இந்தியாவில் இயற்கையாக வாழும் விலங்குகள் அல்ல என்பதுதான் இந்தச் சம்பவத்தின் ஹைலைட்டாக மாறியுள்ளது.

    Advertisement

    ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் போகராய் பகுதியில், படாபாய் கிராமம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் செப்டம்பர் நேற்று காலை சுமார் 6 மணியளவில் இந்த 5 குட்டிகளும் தென்பட்டன.

    Advertisement

    ஒடிசா காட்டுக்குள் ஆச்சரியம்

    ஒராங்குட்டான்கள் வந்துவிட்டன என்ற தகவல் வேகமாக பரவியதும் ஏராளமான மக்கள் அங்கு திரண்டனர். கூட்டம் அதிகரித்ததால் வனத்துறையினர் விரைந்து சென்று குட்டிகளை மீட்டனர். அவை சுமார் 1 முதல் 1.5 அடி உயரம் கொண்ட இளம் ஒராங்குட்டான்கள் ஆகும்.. மீட்கப்பட்ட 5 குட்டிகளில் 3 ஆண்களும் 2 பெண்களும் உள்ளன..

    ஆனால் இங்குதான் மிகப்பெரிய கேள்வி எழுகிறது. ஒராங்குட்டான்கள் இந்தியாவை சேர்ந்தவை கிடையாது. போர்னியோ மற்றும் சுமத்ரா தீவுகளின் மழைக்காடுகளில்தான் இவை இயற்கையாக வாழ்கின்றன. இந்தியாவிலிருந்து அவற்றின் இயற்கை வாழ்விடத்துக்கு நேரடி வனவிலங்கு வழித்தடமும் கிடையாது. அப்படியிருக்கும்போது, இந்த 5 குட்டிகளும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒடிசா காட்டுக்குள் எப்படி வந்தன என்பது அதிகாரிகளையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

    Advertisement

    5 ஒராங்குட்டான்கள்

    இதனால் சர்வதேச வனவிலங்கு கடத்தல் கும்பலின் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை தொடங்கியுள்ளது. குறிப்பாக காட்டுக்கு அருகே முந்தைய இரவு ஒரு கருப்பு நிற SUV வண்டி சென்றதாக உள்ளூர்வாசிகள் சொல்கிறார்கள்.. அந்த வாகனம் CCTV கேமராவிலும் பதிவாகியுள்ளது.

    இரவு 11.25 மணியளவில் அந்த வாகனம் அந்தப் பகுதியை கடந்து சென்றதும், சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் திரும்பியதும் பதிவாகியுள்ளதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது.. அந்த வாகனம் கருப்பு Mahindra Thar என்கிறார்கள்.. ஆனால் அந்த வாகனத்தின் ஓனர் என்று தெரியவில்லை.. அதன் உரிமையாளர் யார் என்பதை கண்டுபிடித்தால்தான், இந்த மர்மத்தில் முக்கியமான தடயம் கிடைக்கும் என போலீசார் கருதுகிறார்கள்.

    Advertisement

    வாழைப்பழம், ஆப்பிள், பொம்மைகள்

    குட்டிகள் வாகனம் மூலம் கொல்கத்தா வழியாக ஒடிசாவுக்கு கொண்டுவரப்பட்டனவா, அல்லது மலேசியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்டு கொல்கத்தா வழியாக இந்தியாவுக்குள் வந்தனவா என்பதையும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். ஆனால் இவை கடத்தப்பட்டவை என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.. விசாரணை இப்போதுதான் ஆரம்ப கட்டத்தில் உள்ளது.

    ஒடிசா STF மற்றும் Wildlife Crime Control Bureau இணைந்து CCTV காட்சிகள், உள்ளூர் தகவல்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வருகின்றன. மீட்கப்பட்ட குட்டிகள் தற்போது புவனேஸ்வரின் நந்தன்கானன் உயிரியல் பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுக்கு 24 மணி நேர கண்காணிப்பு, மருத்துவப் பரிசோதனை வழங்கப்படுகின்றன.. அத்துடன் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாழைப்பழம், ஆப்பிள் சாபபிட தருகிறார்கள்.. விளையாட பொம்மைகளை தந்து, ஸ்பெஷல் பராமரிப்புகள் வழங்கப்படுகின்றன.

    Advertisement

    யார் செய்த வேலை இது?

    ஒராங்குட்டான்கள் ஆசியாவில் இயற்கையாகக் காணப்படும் ஒரே "Great Ape" இனமாகும். 3 வகை ஒராங்குட்டான்களுமே மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன.

    அவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்வது பல கோடி ரூபாய் மதிப்புள்ள சர்வதேச வனவிலங்கு குற்றமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இப்படியிருக்கும்போது, இந்திய காட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்த இந்த 5 குட்டிகள் உண்மையில் எங்கிருந்து வந்தன.. யார் கொண்டு வந்தார்கள்.. ஏன் காட்டில் விட்டுச் சென்றார்கள் என்பதற்கான பதிலை தான் நம் அதிகாரிகள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்..!!

    English Summary

    Odisha Orangutans.. 5 Baby Orangutans Found Hanging From Trees, Leaving Officials Shocked.. How Did They Get Here?