வேதனையை கிளப்புது வெங்காயம்..உரிக்காமாலேயே கண்ணீர் வருதே! விர்ருனு விலையேற்றம்.. பட்ஜெட்டில் துண்டு!

  • சென்னை: வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் அத்தியாவசிய காய்கறிகளான வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலை லேசாக உயர்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கிட்டத்தட்ட இரண்டு மடங்கு வெங்காயத்தின் விலை உயர்ந்திருக்கிறது. மொத்த சந்தை விலையே 25 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக உயர்ந்திருப்பது இல்லத்தரசிகளை கவலை அடையச் செய்துள்ளது. வரும் நாட்களில் விலை இன்னும் அதிகரிக்கும் என்கின்றனர். இதனால் வீட்டு பட்ஜெட்டும் அடிவாங்க வாய்ப்புள்ளது..

    Advertisement

    உரித்தால் மட்டும் அல்ல.. தற்போது உரிக்காமலேயே கண்ணீரை வர வைத்திருக்கிறது வெங்காயம். ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் தொடங்கி இருக்கும் நிலையில் ஏராளமான சுப முகூர்த்த தினங்கள் அடுத்தடுத்து வரிசை கட்டி வர இருக்கிறது.

    Advertisement

    இதனால் காய்கறிகளின் விலை ஏறுவது சகஜம்தான். செப்டம்பரில் இருந்து திருவிழாக்கள், முகூர்த்த தினங்கள் என அடுத்தடுத்து வரும் என்பதால் காய்கறிகளின் விலை ராக்கெட் போல உயர்ந்து வருகிறது. கடந்த காலங்களில் வெங்காயத்தின் விலை அதிகரிக்கும் போது மத்திய அரசு இருப்பு வைத்து தேவைப்படும் காலங்களில் விற்பனைக்கு கொண்டு வரும்.

    வெங்காயம் விலை

    ஆனால் தற்போது வரத்து குறைவு, தேவை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஆகஸ்ட் மாதத்திலேயே வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டு இருக்கிறது. தங்கத்தை போலவே வெங்காயத்தின் விளையும் தாறுமாறாக இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். தமிழகத்தில் வெங்காயம் இல்லாத சமையலையே பார்க்க முடியாது. சாம்பார், புளி குழம்பு, மாமிசம் ஏன் சட்னிக்கு கூட வெங்காயத்துடன் சமைத்து மக்கள் பழகிவிட்டனர்.

    Advertisement

    சின்ன வெங்காயம்

    மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களிலும் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களிலும் சின்ன வெங்காயம் அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்திலும் தேனி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு சராசரியாக 4 லட்சம் டன் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யப்படும் நிலையில், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    வெங்காய விலை உயர்வு

    அதே நேரத்தில் தற்போது வெங்காயத்தின் விலை திடீரென உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுவதும் சராசரியாக ஒரு கிலோ வெங்காயம் 42 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த ஆண்டு விலையுடன் ஒப்பிடும்போது இது கிட்டத்தட்ட 40% என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் 65 ரூபாய்க்கும், சென்னையில் 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கடந்த மாதம் இதே மாதத்தில் வெறும் 30 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    வெங்காயம் பதுக்கல்

    இது மொத்த விலை தான் என்பதையும் கவனிக்க வேண்டும். சில்லறை வணிகத்தில் 70 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை தரத்திற்கு ஏற்ப வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. சில பகுதிகளில் குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் வெங்காயத்தின் விலை 100 ரூபாய் தொட்டு இருக்கிறது. இதற்கு காரணம் இடைத்தரகர்களின் தலையீடு, வெங்காயம் பதுக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டுகின்றனர்.

    வரத்து குறைவு

    அது மட்டும் இல்லாமல் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் தற்போது அதிக அளவில் மழை பெய்து வரும் நிலையில் வெங்காயத்தின் வரத்து வெகுவாக குறைந்து இருக்கிறது. இதனை பயன்படுத்தி வெங்காயம் விலை அதிகரிக்கும் போது விற்பனை செய்து கொள்ளலாம் என பலரும் அதனை பதுக்க ஆரம்பித்து இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. மத்திய அரசு வழக்கம்போல் வெங்காய ஏற்றுமதிக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது வெங்காய பதுக்களை மேலும் அதிகரித்துள்ளது என்கின்றனர்.

    Advertisement

    வீட்டு பட்ஜெட்

    தற்போது மழை அதிக அளவில் இல்லாத நிலையில் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் மழை பொழிவு அதிகரிக்கலாம் என சொல்லப்படுகிறது. அப்போது வெங்காயத்தின் விலை இன்னும் அதிகரிக்கும் எனவே பட்ஜெட்டை பார்த்து பார்த்து செதுக்க வேண்டியது அவசியம் என்கிறனர். என்னதான் பட்ஜெட் போட்டாலும் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை பட்ஜெட்டில் துண்டு விழும் நிலை இருக்கிறது. இதற்கு சர்க்கரை விலை உயர்வும் ஒரு காரணமாக இருக்கும் என்கின்றனர்.

    English Summary

    Onion prices have nearly doubled in Tamil Nadu, with wholesale rates rising sharply and retail prices reaching up to Rs 100.