5 மாதங்களில்.. ரூ.6 கோடி செலவு! காஸ்ட்லி முதல்வர் விஜய்.. மக்கள் அதிருப்தி!

  • சென்னை: அரசு அலுவலகங்களில் உள்ள முதலமைச்சர் விஜய்யின் புகைப்படத்தை மாற்ற புதிய உத்தரவு வெளியாகியிருந்தது. இதன் மூலம் அரசுக்கு தேவையில்லாமல் ரூ.6 கோடி வரை செலவாகிறது என்று பல்வேறு தரப்பினரும் விமர்சித்திருக்கின்றனர்.

    Advertisement

    முதலமைச்சரின் புகைப்படம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், நூலகங்கள் என அனைத்து இடங்களும் மாட்டப்படும். விஜய் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டபோதும் இதேபோல அரசு பயன்பாட்டிற்கான புகைப்படம் வெளியாகியிருந்தது.

    Advertisement

    ஆனால், அந்த புகைப்படம் பல்வேறு சலசலப்புகளை ஏற்படுத்தியிருந்தது. பழைய படத்தில் விஜய்யின் சிரிப்பு இயல்பாக இல்லை என்று அவரது ரசிகர்கள் கூறி வந்தனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களும் இதே காரணத்தை கூறி, புதிய புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்று கேட்டு வந்தனர். இப்படி இருக்கையில்தான் தற்போது அரசு பயன்பாட்டிற்கான அதிகாரப்பூர்வ புதிய புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது.

    சென்னையில் உள்ள தலைமை செயலகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் 43க்கும் மேற்பட்ட முதன்மை அரசுத் துறைகளின் தலைமை அலுவலகங்கள், தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாநிலம் முழுவதும் உள்ள 220க்கும் மேற்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்கள், 21 மாநகராட்சிகள், 150 நகராட்சிகள், 561 பேரூராட்சிகளின் நிர்வாக அலுவலகங்கள், 12,500க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி அலுவலகங்களில் புதிய படத்தை மாட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    Advertisement

    இது போக, வட்டார அளவில் உள்ள 3856 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், இது போக ஆயிரக்கணக்கான காவல் நிலையங்கள், அரசு பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் சார்பதிவாளர் அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், மின்வாரிய அலுவலகங்களில் புதிய புகைப்படத்தை மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இவை அனைத்துக்கும் குறைந்தது ரூ.6 கோடி வரை செலவாகும் என்று சொல்லப்படுகிறது. ஆட்சி அதிகாரத்திற்கு வந்து 5 மாதங்களே ஆகும் நிலையில் இவ்வளவு பெரிய செலவை செய்யும் காஸ்ட்லி முதல்வர் விஜய்தான் என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

    English Summary

    Vijay: A new order was issued to replace the photographs of Chief Minister Vijay in government offices. Various quarters have criticized this move, noting that it entails an unnecessary expenditure of up to ₹6 crore for the government.