எஸ்பி வேலுமணிக்கு புது அசைன்மெண்ட்.. தவெக தலைமையின் திட்டத்தை சொன்ன அமைச்சர் ஆனந்த்.. காரணம் என்ன?

  • சென்னை: எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்புக்கு அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் மூலமாக தவெக ஒரு புதிய அசைன்மெண்ட்டை கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. பட்ஜெட் தாக்கலுக்கு பின் தங்களை அதிமுகவின் தனி அணியாக அங்கீகரிக்க வேண்டும் என்று எஸ்பி வேலுமணி தரப்பில் அமைச்சர் ஆனந்தை சந்தித்து கோரியது. அதற்கு தவெக மேலிடத்துடன் ஆலோசித்து, முக்கியமான பதிலை கொடுத்துள்ளார்.

    Advertisement

    ஆகஸ்ட் 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் மற்றும் கேபி அன்பழகன் தரப்பில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஆகியோரை சந்தித்தது. அந்த சந்திப்பின் போது அமைச்சர் செங்கோட்டையனும் உடனிருந்ததாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    அப்போது எஸ்பி வேலுமணி தரப்பில் தங்களை தனி அணியாக கருத வேண்டும் என்றும், சட்டசபையில் பேச எங்கள் தரப்புக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கிட்டத்தட்ட அதிமுக அதிருப்தி எம்எல்ஏ-க்கள் என்ற புதிய அணியை எஸ்பி வேலுமணி தரப்பு கட்டமைக்க விரும்பியது இதன் மூலமாக தெரிய வந்தது. இதற்கு அமைச்சர் ஆனந்த் தரப்பில் உடனடியாக எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

    முதல்வர் விஜய்யிடம் இந்த விஷயத்தை எடுத்து செல்கிறேன் என்று மட்டும் பதில் அளித்திருந்தார். இந்த நிலையில் தவெக மேலிடம் அமைச்சர் ஆனந்த் மூலமாக ஒரு பதிலை எஸ்பி வேலுமணி தரப்புக்கு கொடுத்திருக்கிறது. அதன்படி உங்களை தனி அணியாக கருத வேண்டும் என்றால், 3ல் இரண்டு பங்கு எம்எல்ஏ-க்களை உங்கள் பக்கம் கொண்டு வாருங்கள்..

    Advertisement

    உங்களை அதிமுகவின் இன்னொரு அணியாக அங்கீகரிக்கிறோம் என்று அமைச்சர் ஆனந்த் கூறி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து எஸ்பி வேலுமணி, சிவி சண்முக, கேபி அன்பழகன் உள்ளிட்டோர் எம்எல்ஏ-க்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. சட்டசபையில் இப்படியொரு அணி உருவாகுவதை தொடக்கம் முதலே தவெக விரும்பி வருகிறது.

    இதன் மூலமாக மறைமுகமாக தவெகவுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் அந்த அணி இருக்கும். அதேபோல் அதிமுக தொடர்ந்து பலவீனம் அடைந்து கொண்டே வரும். மறுபக்கம் மைனாரிட்டி ஆட்சியாக இருந்தாலும் கூட, அதிருப்தி எம்எல்ஏ-க்கள் ஆதரவு இருப்பதால், எந்தவித பயமும் கொள்ள தேவையில்லை. இதனால் எஸ்பி வேலுமணி தரப்பு தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது தெரிய வந்துள்ளது.

    English Summary

    SP Velumani: TVK Leadership Responds to SP Velumani Faction's Demand for Separate ADMK Group Status