தமிழக அரசால் விற்கப்படும் ரூ.30 சன்ன ரக அரசியில் 16 டன் மட்டுமே விற்பனை.. என்ன காரணம்?

  • சென்னை: தமிழ்நாடு அரசால் 184 விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 439 டன் ரூ.30 சன்ன ரக அரசியில் 16 டன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த கடைகளில் சன்னரக அரிசி கிடைக்கும் என்ற முறையான அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.

    Advertisement

    தமிழ்நாட்டில் வெளி மாா்க்கெட்டில் அரிசி விலை உயா்ந்துள்ள நிலையில், அரிசி விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் கூட்டுறவு அங்காடிகள், அமுதம் அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்ன ரக அரிசி விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

    Advertisement

    அதன்படி, தனியாரிடம் சன்ன ரக அரிசியை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சம் 5 கிலோ வரை விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதுவரை 184 விற்பனை நிலையங்கள் மூலம் 16 மெட்ரிக் டன் அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசால் 184 விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 439 டன் ரூ.30 சன்ன ரக அரசியில் 16 டன் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு, பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    Advertisement

    இதன் ஒரு பகுதியாக, சன்னரக அரிசியின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு முழுவதும் அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30 (பொட்டலத்துடன்) என்ற விலையில் சன்னரக அரிசி விற்பனை கடந்த 17 ஆம் தேதி அன்று சென்னையில் முதற்கட்டமாக 30 இடங்களில் தொடங்கப்பட்டது.

    தமிழ்நாடு முழுவதும் இந்தத் திட்டத்திற்காகத் மொத்தம் 995 மெட்ரிக் டன் சன்ன ரக அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டு. இதில், 574.058 மெட்ரிக் டன் அரிசி 34 மாவட்டங்களுக்குப் அனுப்பப்பட்டது. அவற்றில் 439.108 மெட்ரிக் டன் அரிசி விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    மாநிலம் முழுவதும் 34 மாவட்டங்களில் மொத்தம் 184 விற்பனை நிலையங்கள் (Sale Points) மூலம் சன்னரக அரிசி விற்பனை நடைபெற்று, 21.10.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 16 மெட்ரிக் டன் சன்னரக அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    குறிப்பாக சென்னையில் உள்ள 19 விற்பனை நிலையங்கள் மூலம் இதுவரை 1,286 கிலோ சன்னரக அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவுச் சங்கத்தின் மாநகராட்சி வணிக வளாக விற்பனை முனையில் 298 கிலோவும், கார்த்திகேயன் சாலையில் உள்ள விற்பனை முனையில் 178 கிலோவும், பார்க் டவுன் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலையின் விற்பனை முனையில் 120 கிலோவும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    Advertisement

    பொதுமக்களுக்கு சன்னரக அரிசி குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்வதுடன், அரிசி விலை அரிசி விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 439 டன் ரூ.30 சன்ன ரக அரசியில் 16 டன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த கடைகளில் சன்னரக அரிசி கிடைக்கும் என்ற முறையான அறிவிப்பு வெளியிடப்படவில்லை, அதன் காரணமாகவே விற்பனை மந்தமாக உள்ளது என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.

    English Summary

    Out of 439 tonnes of fine-variety rice—priced at Rs. 30 per kg—supplied by the Government of Tamil Nadu to 184 retail outlets, only 16 tonnes have been sold. There are allegations that no formal announcement was made regarding which specific shops carry this fine-variety rice.