குடிகாரர்களை குஷிப்படுத்தும் அறிவிப்பு.. டாஸ்மாக் கடையில் இனி பேவரைட் உங்க சரக்கு! இன்று முதல் அமல்!

  • சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப மதுவகைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் புதிய கொள்முதல் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதுவரை டாஸ்மாக் கடைகளில் குறிப்பிட்ட மதுவகைகள் மட்டுமே அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இனி ஒவ்வொரு கடையிலும் விற்பனை நிலவரத்துக்கு ஏற்ப மதுவகைகளை கொள்முதல் செய்து இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டி தரும் முக்கிய துறைகளில் ஒன்று டாஸ்மாக். தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் மது விற்பனை தனியார் வசம் இருந்து நிலையில் டாஸ்மாக் நிறுவனம் மது விற்பனையை கட்டுக்குள் கொண்டு வந்தது.

    Advertisement

    அரசு மூலமே மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. மேலும் அப்போது பல தனியார் மது கடைகளில் வேலை பார்த்தவர்களும், வேலையில்லாமல் காத்திருந்த அதிமுகவினர் - திமுகவினர் உட்பட பலர் அந்தந்த ஆட்சி காலங்களில் டாஸ்மாக் சூப்பர்வைசர்களாகவும் விற்பனையாளர்களாகவும் நியமனம் செய்யப்பட்டனர்.

    டாஸ்மாக்

    ஆனால் தற்போது வரை அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அதிமுக ஆட்சியில் பாட்டிலுக்கு 2 ரூபாய் கூடுதலாக பெறப்பட்டது. கூலிங் கட்டணம், மின்சார கட்டணம், கட்டிட வாடகை என பல காரணங்களை காட்டி 2 ரூபாய்க்கு ஆரம்பித்த வசூல், தொடர்ந்து 5 ரூபாயாகி திமுக ஆட்சியில் 10 ரூபயானது. இந்த நிலையில் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட்டதோடு ஈடுபட்ட போது பாட்டிலுக்கு 10 ரூபாய் என திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரடியாக தாக்கியது பரபரப்பாக பேசப்பட்டது.

    Advertisement

    மதுவிலக்கு

    தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்ததும் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சராக விக்னேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வரும் அவர் டாஸ்மாக்கில் கூடுதலாக 10 ரூபாய் பெறுவதை தவிர்க்கும் வகையில் அதிரடி நடவடிக்கை எடுத்து நூற்றுக்கணக்கான ஊழியர்களை சஸ்பெண்ட் செய்தார்.

    ஊதிய உயர்வு

    இதற்கிடையே டாஸ்மாக் ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பணி நிரந்தரம் தற்போது வரை அமல்படுத்தப்படவில்லை. அதே நேரத்தில் ஊதிய உயர்வு, பண்டிகை கால முன்பணம், கடைகளை பராமரிக்க கூடுதல் நிதி, தற்போது சீருடை என அடுத்தடுத்து பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகு வரும் நிலையில் தற்போது மற்றொரு அறிவிப்பு வந்திருக்கிறது. இந்த முறை வந்திருக்கும் அறிவிப்பு குடிகாரர்களை குஷிப்படுத்துவது போல அமைந்துள்ளது.

    Advertisement

    புதிய கொள்முதல் நடைமுறை

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப மதுவகைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் புதிய கொள்முதல் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதுவரை டாஸ்மாக் கடைகளில் குறிப்பிட்ட மதுவகைகள் மட்டுமே அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இனி ஒவ்வொரு கடையிலும் விற்பனை நிலவரத்துக்கு ஏற்ப மதுவகைகளை கொள்முதல் செய்து இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மதுவகைகள்

    தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும் மதுவகைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தேவையான மதுவகைகளை வழங்கும் வகையில் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு பகுதியில் அதிகம் விற்பனையாகும் மதுவகைகளுக்கு ஏற்ப அந்தந்த கடைகளில் கூடுதல் இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    Advertisement

    மதுவகைகள் தட்டுப்பாடு

    குறிப்பாக மதுக் கடைகளில் குறைவாக விற்பனையாகும் மதுவகைகளின் கொள்முதலை தேவைக்கேற்ப மாற்றவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டாஸ்மாக் கடைகளில் மதுவகைகள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்கும், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான மதுவகைகளை பெறுவதற்கும் இந்த புதிய நடைமுறை உதவும் என கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Tasmac introduces demand-based liquor stock allocation from today, ensuring popular brands remain available across Tamil Nadu retail shops.