விஜய் லண்டன் பயணம்: யாரை சந்தித்தார்? எவ்வளவு முதலீடு வரும்? வெளிப்படையாக பதில் கேட்கும் எல் முருகன்

  • சென்னை: தமிழக முதல்வர் விஜய் வெளிநாட்டு பயணத்தில் யாரை சந்தித்தார்? எவ்வளவு முதலீடு வரும்? என்பது குறித்து வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கூறியுள்ளார். மேலும், தொழில்துறை அமைச்சர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தலைமைச் செயலாளர் என யாருமே வெளிநாடு செல்லாதபோது, உண்மையில் முதல்வர் விஜய் தொழில் முனைவோரை சந்திக்கிறாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    நாடு முழுக்க இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. மத்திய இணை அமைச்சர் எல் முருகனும், கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த எல் முருகன் விஜய்யின் வெளிநாடு பயணம், கம்யூனிஸ்ட் கட்சிகள் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    Advertisement

    யார் யாரை எல்லாம் சந்திக்கிறார்?

    தமிழக முதல்வர் விஜய் வெளிநாட்டில் தொழில் முனைவோரைச் சந்தித்து முதலீடுகளை ஈர்த்து வருவதாக செய்திகள் மூலமாக தெரியவருகிறது. ஆனால் தொழில்துறை அமைச்சரோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ, தலைமைச் செயலாளரோ என யாரும் விஜய்யுடன் போகவில்லை. எனவே முதல்வர் விஜய் உண்மையில் தொழில் முனைவோரை தான் சந்திக்கிறாரா?.. முதலீடுகளை ஈர்க்கிறாரா? என்பது குறித்து வரும் நாட்களில் தான் தெரியவரும்.

    முதல்வர் விஜய்யின் வெளிநாடு பயணம் ஏன் என்பது குறித்து தமிழக மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அரசு பிரதிநிதியாகத் தான் வெளிநாடு சென்று இருக்கிறார் முதல்வர் விஜய். அவர் தனது பயணத்தில் யார் யாரை எல்லாம் சந்திக்கிறார்?.. தமிழ்நாட்டிற்கு என்னென்ன முதலீடுகள் வருகின்றன? என்பதை எல்லாம் அவர் மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். லண்டனில் அஜித் குமார் பஙேற்ற ரேஸ் போட்டியை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தது நல்ல விஷயம் தான்.. தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் அஜித்குமார் ரேசில் கலந்து கொண்டதை வரவேற்கிறேன்.

    Advertisement

    மு.க ஸ்டாலின் இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில்லை. விநாயகர் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாததால் தான் இப்போது அவரை மக்கள் வீட்டில் அமர வைத்து இருக்கிறார்கள். எல்லாரும் எல்லா பண்டிகைகளுக்கும் வாழ்த்துகள் கூற வேண்டும். திமுக மக்களையும், பெண்களையும் மதிப்பது கிடையாது. திமுகவின் பல பேச்சாளர்கள் பெண்களை அவமதிப்பு செய்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர். .

    ஏன் இரட்டை நிலைப்பாடு?

    தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். இதற்காக நாங்க முழு ஒத்துழைப்பினை வழங்கி தேர்தல் பணிகளை செய்வோம். கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒருபுறம் தவெக அரசுக்கு ஆதரவு அளித்துக்கொண்டே மறுபக்கம் இடைத்தேர்தலில் தனித்து போட்டி என சொல்கிறார்கள். இது என்ன நிலைப்பாடு என்பதை அவர்கள் தான் தெளிவுப்படுத்த வேண்டும்.

    Advertisement

    ஏன் இரட்டை நிலைப்பாடு.. ஒரு பக்கம் அவருக்கு ஆதரவு கொடுப்போம்.. இன்னொரு பக்கம் இவங்களுக்கு ஆதரவு என ஒரு தெளிவான நிலையில் இல்லை. கம்யூனிஸ்ட்கள் குழம்பிய நிலையில் தான் இருக்கிறார்கள். நாங்க எல்லாருமே ஒற்றுமையாக தான் இருக்கிறோம். திமுக தான் இன்றைக்கு சுக்கு நூறாக போயுள்ளது. எங்கள் கூட்டணியில் எல்லாருமே இருக்கிறார்கள்.. எங்கள் கூட்டணி இடைத்தேர்தலில் வரலாற்று வெற்றி பெறும்." என்று கூறினார்.

    English Summary

    L Murugan has stated that Tamil Nadu Chief Minister Vijay must transparently inform the public about whom he met during his foreign trip and the expected volume of investment. He further questioned whether the Chief Minister is actually meeting entrepreneurs, noting that the Industries Minister, relevant officials, and the Chief Secretary did not accompany him on the trip.