Trisha: முகம் முழுக்க பூரிப்பு.. பதவியேற்பு விழாவில் விஜயின் தாயை பார்த்தவுடன் த்ரிஷா செய்த செயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழக சட்டமன்ற தேர்தலில் 4 முனை போட்டி நிலவியது. இதில் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது. விஜய் இன்று முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர். அரசியலுக்கு வந்த பிறகு விஜய் வெள்ளைச் சட்டை, சந்தன கலர் பேன்ட் அணிந்து வந்தார். இன்று வெள்ளைச் சட்டை, கறுப்பு நிற பேன்ட் ஹின் செய்தபடி கெத்தாக என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த நிகழ்வில் பல அரசியல், சினிமாத்துறையைச் சேர்ந்த பல விவிஐபிகள் வந்துள்ளனர். நடிகை த்ரிஷாவும் கலந்து கொண்டுள்ளார். விஜயின் தாயைப் பார்த்தவுடன த்ரிஷா செய்த செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சட்டமன்ற தேர்தலில் தவெக தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 தொகுதிகள் அவர்களிடம் இல்லை. இதனால் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வந்தது. நேற்று பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவு கிடைத்ததால், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் விஜய் முதல்வராக பதவியேற்க அழைத்துள்ளார்.

Vijay Trisha TVK Tamil Nadu Politics Swearing In Ceremony

விஜய் முதல்வராக பதவியேற்கும் நிகழ்வு நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், விஜய் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ள சிபிஎம், சிபிஐ, விசிக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். விஜய்யின் தாய் சோபா, தந்தை சந்திரசேகர் கலந்து கொண்டுள்ளனர்.

சினிமாத்துறையைச் சேர்ந்த பல பிரபலங்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர். நடிகை த்ரிஷாவும் விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். நீல நிற புடவையுடன் த்ரிஷா சிரித்தபடியே நேரு ஸ்டேடியத்திற்குள் என்ட்ரி கொடுத்தார். அவரை திரைத்துறை பிரபலங்கள் வரவேற்றனர். பதவியேற்பு விழாவில் விஜயின் தாயை பார்த்தவுடன் த்ரிஷா ஆரத்தழுவிய செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து, அரங்கத்தில் அமர்ந்தவர்களுக்கு கையசைத்தபடி வந்து இருக்கையில் அமர்ந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+