விரட்டியடிக்குறாங்க சத்யபாமாவை! டெபாசிட்டாவது தேறுமா! தட்டுத் தடுமாறும் தவெக நண்பா! நண்பீஸ்!

  • சென்னை: தாராபுரம் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுகவிலிருந்து தமிழக வெற்றி கழகத்திற்கு தாவிய சத்யபாமா போட்டியிடுகிறார். தொகுதி முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கும் நிலையில், செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பெரிய குமாரபாளையம் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளர் சத்திய பாமாவை பொதுமக்கள் ஊருக்குள் நுழையவிடாமல் விரட்டியடித்துள்ளனர்.

    Advertisement

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டமன்றத் தொகுதியில் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Advertisement

    இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியபாமா நேற்று பெரிய குமாரபாளையம் பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களில் சிலர் அவரை தடுத்து நிறுத்தி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

    தாராபுரம் இடைத்தேர்தல்

    குறிப்பாக தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்து 140 நாட்கள் கடந்து விட்டதாக நிலையில், பி.ஏ.பி. பாசன விவசாயிகளுக்கு முறையாக தண்ணீர் வழங்கப்படவில்லை. உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்குவது தொடர்பாகவும் அதிருப்தி தெரிவித்தனர். உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கக்கூடாது என்று சத்யபாமா தெரிவித்ததாக சிலர் கூறி, இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    Advertisement

    சத்யபாமா

    மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சத்யபாமாவுக்கு குண்டடம் மற்றும் பெரிய குமாரபாளையம் பகுதிகளில் அதிக வாக்குகள் கிடைத்ததாகவும், வெற்றி பெற்ற பின்னர் தங்களுக்கு நன்றி தெரிவிக்கக்கூட அவர் வரவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். அதன்பின்னர் திடீரென தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது குறித்தும் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். தங்களது கருத்துகளை கேட்காமல் கட்சி மாறியதால், தங்களுக்கு வாக்களித்த பொதுமக்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டதாக உணர்வதாக சிலர் தெரிவித்தனர்.

    பொதுமக்கள் எதிர்ப்பு

    அப்போது, அதிமுகவின் முன்னாள் திருப்பூர் மாவட்ட அவைத்தலைவரும், தற்போது தமிழக வெற்றிக் கழக நிர்வாகியுமான பி.கே.ராஜ், பொதுமக்களிடம் பேசி, குடிநீர் பிரச்சினை தொடர்பாக 6 அமைச்சர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், சுமார் ரூ.1,350 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டம் இப்பகுதியில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கான ஆவணங்கள் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தேர்தல் முடிந்த பின்னர் முதலமைச்சர் மூலம் அந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    Advertisement

    தமிழக வெற்றிக் கழகம்

    இதற்கு பொதுமக்கள், "ஏற்கனவே பலமுறை வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. மீண்டும் மீண்டும் பொய் வாக்குறுதிகளை கூறி எங்களை ஏமாற்ற வேண்டாம். முதலில் எங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் மற்றும் பாசனப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்" என எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமா தங்கள் பகுதிக்கு பிரசாரத்துக்கு வரக்கூடாது என சில பொதுமக்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    முதல்வர் விஜய்

    "நாங்கள் முதல்வர் விஜய் மீது அதிக நம்பிக்கையும், பாசமும் வைத்துள்ளோம். ஆனால், வேட்பாளர் சத்யபாமா மீது எங்களுக்கு அதிருப்தி உள்ளது. அதனால் மட்டுமே இப்பகுதியில் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். எங்கள் பகுதிக்கு தேவையான திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பொதுமக்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களையும், கட்சி நிர்வாகிகளையும் சமாதானப்படுத்தினர்.

    Advertisement

    கூடுதல் பாதுகாப்பு

    இதேபோல், சத்தியபாமா பிரசாரம் மேற்கொண்ட அடுத்தடுத்த 2 கிராமங்களிலும் பொதுமக்கள் அவரை தடுத்து நிறுத்தி தங்களது கோரிக்கைகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரசாரத்தின் போது பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கூடுதல் போலீசார் அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்தல் பிரசாரத்தின்போது வேட்பாளர்களிடம் பொதுமக்கள் நேரடியாக கேள்வி எழுப்பி வருவது தாராபுரம் இடைத்தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    TVK candidate Sathyabama faces protests in Periya Kumarapalayam as residents question water issues, irrigation promises and her party switch.