சென்னை: காவிரி விவகாரம், பட்ஜெட் எதிர்பார்ப்பு ஆகியவற்றை கடந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியின் கைது நடவடிக்கை பரபரப்பாகியுள்ளது. பெண்களை இழிவாக பேசியதற்காக உதயநிதி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் உதயநிதி தாத்தாவின் சொத்துக்கு வேண்டுமானாலும் ஆசைப்படலாம். ஆனால் அவரைபோல அரியணை ஏற முடியாது. விஜய் தான் நிரந்தர முதலமைச்சர் என செங்கோட்டையன் கூறியுள்ளார்.
பனையூரில் நடந்த தவெக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், "திமுகவினர் வயிர் எரிந்து பேசி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தூக்கம் வருவதில்லை. பெண்களை இழிவுபடுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. திமுகவி எல்லாருமே இதை செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன்பு பொன்முடி பேசினார். பெண்களை பற்றி பேசுவதற்கு யாருக்கும் தகுதி இல்லை. தவெக தெளிவான, தொலைநோக்கு சிந்தனையோடு இருக்கிறாம். இந்தியாவுக்கே வழிகாட்டும் முன்னோடி மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும்.
முதலமைச்சர் அதை கனவாக வைத்து செயல்படுவதால் இவர்களால் தூங்க முடியவில்லை. பெண்களை கொச்சைப்படுத்தும் எதிர்க்கட்சி தலைவரின் பேச்சை எவராலும் ஏற்க முடியாது. இதைத்தான் பெண்களும், அனைத்து கட்சி தலைவர்களும் சொல்கிறார்கள். உதயநிதியை கைது செய்தது சரியே. நாளை தேர்தல் நடந்தால் 234 தொகுதிகளிலும் தவெக தான் வெற்றி பெறும். எவனாலும் வெற்றி பெற முடியாது. அதனால் தான் அவர்களால் பொறுக்க முடியாமல் தூக்கத்தை தொலைத்துள்ளனர். அப்பனுக்கு பிறகு தான் வரலாம் என கனவு கண்டார். பேரனாக தாத்தாவின் சொத்துக்கு உரிமை கோரலாம். தமிழகத்தை பொறுத்துவரை தமிழ்நாட்டு மக்கள் தான் முடிவு செய்வார்கள். வேறு எவராலும் முடியாது. சொத்துக்கு ஆசைப்படலாம். தாத்தாவின் சொத்து மீது பேரன் ஆசைப்படலாம். பேரன் அரியணை ஏற முடியாது என்கிற வரலாற்றை தான் தமிழகம் நிர்ணயித்து கொண்டிருக்கிறது. நம் தலைவர் இருக்கும் வரை அவர் முதலமைச்சர் அரியணையில் இருப்பதை யாராலும் தடுக்க முடியாது. புரட்சி தலைவர் எம்ஜிஆர் பொறுப்பேற்ற போது, 100 நாட்கள் ஓடாது என்றனர். அவர் உயிருடன் இருந்த வரை நிரந்தர முதலமைச்சராக இருந்தார். அதேபோலத்தான் புரட்சி தலைவி அம்மா இருந்தவரை, அவர் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக இருந்தார். தவெக தலைவர் தளபதி இருக்கும்வரை அவர் தான் நிரந்தர முதலமைச்சர். இதையெல்லாம் பொறுத்து கொள்ள முடியாமல் விமர்சிக்கிறார்கள். மக்கள் இதை பார்த்து கொண்டிருக்கிறார்கள். 100க்கு 90 சதவிகிதம் பெண்கள் தவெகவுக்கு வாக்களித்துவிட்டனர் என திமுகவினர் வயிற்று எரிச்சல் இருக்கிறது. இளைஞர்களும், பெண்களும் இவர் தான் தமிழ்நாட்டுக்கு தகுதியானவர் என்று வாக்களித்தை நாடே உணர்ந்துள்ளது. மேலை நாடுகளில் இருந்து வந்து பலரும் வாக்களித்துள்ளனர். ஒரு தலைவருக்கு இப்படி வாக்களித்ததை யாரும் பார்க்கவில்லை. ஒரு மிராக்கிள் உருவாகியுள்ளது. திமுகவினரின் செயல்பாட்டை மக்கள் கூர்ந்து கவனித்து கொண்டிருக்கிறார்" என்றார்.தாத்தா சொத்துக்கு மட்டும் ஆசை
விஜய் நிரந்தர முதலமைச்சர்