பக்குவமா பேசுங்க.. அமைச்சர் வன்னி அரசுக்கு அட்வைஸ் செய்த தவெக தலைமை.. என்ன நடந்தது?

  • சென்னை: அரசு விடுதியில் தங்கி இருக்கும் மாணவர்களுக்கு மாட்டுக் கறி வழங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் வன்னி அரசு பேசியது சர்ச்சையான சூழலில், தவெக தலைமை அவருக்கு கொஞ்சம் அமைதி காக்க அட்வைஸ் கொடுத்திருக்கிறது. இதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    அண்மையில் அரசு விடுதியில் அமைச்சர் வன்னி அரசு ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது வன்னி அரசு பேசுகையில், அரசு விடுதியில் தங்கி இருக்கும் மாணவர்களுக்கு மாட்டுக் கறி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. அதனை பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருந்தார். வன்னி அரசின் பேச்சிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    Advertisement

    ஏற்கனவே புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நேரடியாக எதிர்ப்பை பதிவு செய்தார். மாணவர்களுக்கு மாட்டுக் கறி வழங்கும் முடிவு தவறானது என்றும் கூறி இருந்தார். அதேபோல் அமைச்சர் வன்னி அரசின் பேச்சிற்கு பல்வேறு மத மற்றும் சமுதாய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் இந்த விவகாரம் பூதாகரமாக மாறி இருக்கிறது.

    இது தவெகவுக்கு பின்னடைவாக மாறியுள்ளது. ஏற்கனவே தவெக அமைச்சரவையில் 8 தலித்துகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் தலித் மக்களுக்கான அரசு என்று தவெகவினரே உற்சாகமாக சொல்லி வருகின்றனர். இதனால் தலித் மக்களின் ஆதரவு தவெகவுக்கும், விஜய்க்கு கணிசமாக உயர்ந்திருக்கிறது. இதனால் திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஓபிசி அரசியலை கையில் எடுத்துள்ளன.

    Advertisement

    தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மாவட்டங்களில் ஓபிசி மக்கள் அதிகளவில் இருக்கின்றனர். அடுத்தடுத்து கொங்கு மற்றும் தென் மாவட்டங்களில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதனை உணர்ந்த தவெக தலைமை, அலர்ட்டாகி இருக்கிறது. இதனால் அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை, கொஞ்சம் சூழல் அறிந்து பக்குவமாக பேசுங்கள் என்று அட்வைஸ் கொடுத்துள்ளது.

    தவெக தலித் மக்களுக்கான அரசு என்று பார்வை அதிகமாகிவிடக் கூடாது என்ற காரணத்தினாலேயே இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் திருமாவளவனுடன் விஜய் ஒரே மேடையேற விரும்பவில்லை என்று கூறப்பட்டிருந்தது. மதுராந்தகம் தொகுதியில் கணிசமாக இருக்கும் வன்னியர் வாக்குகளை அறுவடை செய்யும் வகையிலேயே விஜய் இந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    English Summary

    Vanni Arasu: TVK Leadership Advises Minister Vanni Arasu to Stay Silent Following Remarks on Beef in Govt Hostels