முதல்வரான விஜய்.. ஆளுநர் சந்திப்பு முடிந்த உடன் நடந்த மேஜிக்.. திரும்ப வந்த கான்வாய் வாகனங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டுக்கு இன்று மிகவும் முக்கியமான நாள், சட்டமன்ற தேர்தல் முடிந்து 4 நாட்களாக ஆட்சி அமைப்பதில் பெரும் தடுமாற்றத்தை சந்தித்து வந்த தவெக தலைவர் விஜய், இன்று ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை 3வது முறையாக சந்தித்து தங்களுக்கான 118 எம்எல்ஏ-களுக்கான ஆதரவை காட்டி முதல்வராக பதவியேற்பு செய்து வைக்க கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களில் அனைவராலும் கவனிக்கப்பட்டது வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி 2வது நாளில் விஜய்க்கு அளிக்கப்பட்ட முதலமைச்சருக்கான கான்வாய் வாகனங்கள், போலீஸ் பாதுகாப்பு அனைத்தும் நீக்கப்பட்டது. இதனால் விஜய் வீடு, அலுவலகம் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

TVK leader Vijay met Tamil Nadu Governor Rajendra Viswanath Arlekar today and presented 118 MLA support letters securing official approval to form the government and take oath as Chief Minister Following the meeting the full CM-level security convoy that was withdrawn earlier due to lack of majority has now been restored marking Vijay s official transition from opposition leader to the head of the state

இந்த நிலையில் இன்று மாலை ஆளுநரை சந்திக்க போகும் போது டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரில் பயணம் செய்த போது காவல் துறை பாதுகாப்புடன் சென்றார். ஆனால் இது முதல்வருக்கான முழு கான்வாய் இல்லை.

ஆளுநர் அலுவலகம் செல்லும்போது தவெக தலைவராக சென்ற விஜய், வெளியில் வரும் போது முதல்வராக வந்தார். இதன் மூலம் தமிழ்நாடு அரசும், காவல் துறையும் முதல்வருக்கான முழு கான்வாயும், பாதுகாப்பும் அளிக்க உள்ளது. இப்போ கொண்டு வாங்க கான்வாய் வாகனங்களை..

வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு வழங்கப்பட்ட கான்வாய்

மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியான உடனேயே தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து விஜயின் இல்லம் மற்றும் அலுவலகத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அதேநேரத்தில், முதலமைச்சருக்கு வழங்கப்படும் அளவிலான காவல்துறை கான்வாய் வாகனங்களும் அவருக்கு ஒதுக்கப்பட்டன.

ஆனால், விஜய் ஆளுநரை முதல் முறை சந்தித்த பின்பு ஆட்சி அமைக்க முடியாத நிலையில், அந்த கான்வாய் வாகனங்கள் திரும்பப் பெறப்பட்டன. காரணம், விஜயே தானாக முன்வந்து "முழுமையான பெரும்பான்மை பெற்று அதிகாரப்பூர்வமாக முதலமைச்சராக பதவியேற்ற பிறகு மட்டுமே இந்த பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்வேன்" என்று காவல்துறையிடம் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் முதலமைச்சர் அளவிலான கான்வாய் பாதுகாப்பு வழங்குவது எதிர்க்கட்சிகளிடம் இருந்து விமர்சனத்தை ஏற்படுத்தலாம் என காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியதும் இந்த முடிவுக்கு ஒரு காரணம் என்று தெரியவருகிறது. இதனால், விஜய் எந்தக் கான்வாய் பாதுகாப்பும் இன்றி தனது சொந்தக் காரில் பயணம் செய்து வந்தார்.

இந்த நிலையில் ஆளுநர் சந்திப்பு வெளியே வந்த உடன் கான்வாய் மற்றும் பாதுகாப்பு விஜய்-க்கு கொடுக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+