சென்னை: பாஜக மகளிர் அணி தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், இந்தியாவின் தற்போதைய வளர்ச்சிப் பாதை குறித்து முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். நாடு இன்று தொழில்நுட்பம், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு என அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெற்று, உலக அரங்கில் ஒரு சக்திவாய்ந்த நாடாக உருவெடுத்து வருகிறது என்று வானதி தெரிவித்துள்ளது பலரது கவனத்தை பெற்று வருகிறது.
ஒருபக்கம் எதிர்க்கட்சிகளை விமர்சித்து கொண்டும், மறுபக்கம் மத்திய அரசின் நலனில் அக்கறை கொண்டும வானதி சீனிவாசன் தொடர்ந்து இயங்கி வருகிறார்.
பிரதமர் மோடியின் செயல்பாடுகள் மற்றும் நாட்டின் வளர்ச்சி குறித்த விவகாரங்களில் நடிகர் விஜய் காட்டும் அலட்சியப்போக்கு மிகுந்த வருத்தமளிப்பதாக 2 நாட்களுக்கு முன்புகூட வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தார். தமிழகத்தின் நீண்டகால வரலாறு மற்றும் கலாச்சாரப் பெருமைகளைத் தாங்கி நிற்கும் நிகழ்வுகளிலோ அல்லது நாட்டின் முன்னேற்றம் குறித்த முக்கியமான தருணங்களிலோ விஜய் போன்ற பிரபலங்கள் தங்களின் சமூகப் பொறுப்பைத் தட்டிக் கழிப்பது தேசப்பற்றுக்கு உகந்தது அல்ல என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார். ஒரு முக்கியத் தலைவராகத் தன்னை முன்னிறுத்திக் கொள்ள விரும்பும் விஜய், பிரதமருக்கு வாழ்த்து தெரிவிக்கத் தயங்குவதும், பொது விவகாரங்களில் பாராமுகமாக இருப்பதும் அவர் தமிழக வரலாற்றையும், தேசத்தின் வளர்ச்சியையும் எந்த அளவுக்கு அலட்சியப்படுத்துகிறார் என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்று வானதி சீனிவாசன் சாடியிருந்தார். விஜய்யின் இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் தமிழக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதோடு, தனது அரசியல் பயணத்தைத் தொடங்கும் ஒரு பிரபலம் இவ்வளவு குறுகிய மனப்பான்மையுடன் செயல்படுவது தமிழகத்திற்குப் பெருமை சேர்க்காது என்றும் அவர் எச்சரித்திருந்தார். நடிகர் விஜயைக் கடுமையாகச் சாடிய அதே வேளையில், வானதி சீனிவாசன் அவர்கள் மத்திய அரசின் சாதனைகளைத் தொடர்ந்து முன்னிறுத்திப் பாராட்டி வருகிறார். அந்த வகையில், இந்தியா அனைத்து துறைகளிலும் அசுர வளர்ச்சி கண்டு வருவதாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நாடு இன்று தொழில்நுட்பம், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு என அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெற்று, உலக அரங்கில் ஒரு சக்திவாய்ந்த நாடாக உருவெடுத்து வருகிறது என்பது வானதி கருத்தின் மையப்பொருளாக உள்ளது. பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: பிரதமர் மோடிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் உயரிய விருதான அக்ரிகோலா பதக்கம் வழங்கப்பட்டது. ஆளில்லா விமானம் மூலம் ஏவப்படும் ஏவுகணையை வான் மற்றும் தரைவழிப் போர் முறைகளில் DRDO வெற்றிகரமாகச் சோதித்தது. $428 மில்லியன்+ மதிப்புள்ள அப்பாச்சி, M777 பராமரிப்பு மற்றும் ஆதரவுச் சேவைகளுக்காக ஒப்பந்தங்களுக்கு இந்தியாவுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்தது என்று அதில் தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடிக்கு பாராட்டு
வானதி சீனிவாசன் சாடல்
மத்திய அரசைப் பாராட்டி வானதி சீனிவாசன் பதிவு
உயரிய விருது அக்ரிகோலா பதக்கம்