கோவை கண்ணம்பாளையத்தில் 10 வயது சிறுமி சடலமாக மீட்பு.. 2 பேரை கைது செய்தது காவல்துறை

  • கோவை: கோவை கண்ணம்பாளையத்தில் 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி உயிரிழப்புக்கு நீதி கேட்டு உறவினர்கள் சூலூர் காவல் நிலையம் முன்பு இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நாகையை சேர்ந்த கார்த்தி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு உதவியதாக மோகன்ராஜ் என்பவரையும் போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

    Advertisement

    கோவை சூலூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த சிறுமி கடந்த வியாழக்கிழமை மாலையில் கடைக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அருகில் உள்ள இடங்களி சிறுமியை பெற்றோர் தேடினர்.

    Advertisement

    பைக்கில் வந்த இருவர் சிறுமியை கடத்தி சென்றதாக சொல்லப்பட்ட நிலையில், கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமியின் பெற்றோர் சூலூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சூலூர் அருகே உள்ள முட்புதர் ஒன்றில் சிறுமி உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார் சிறுமியின் உடலை மீட்டனர். விசாரணையில் காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்ட சிறுமிதான் சடலமாக கண்டெடுக்கப்பட்டது தெரியவந்தது. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து முட்புதரில் வீசியிருக்கலாம் என்று தகவல் பரவிய நிலையில் அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடந்தனர்.

    Advertisement

    சிறுமி உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட இஎஸ்.ஐ மருத்துவமனை முன்பு திரண்ட சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானம் செய்து அவர்கள் கலைந்து செல்லவில்லை. விடிய விடிய போராட்டம் நடைபெற்ற நிலையில், தவெக எம்.எல்.ஏ நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நாகையை சேர்ந்த கார்த்தி (வயது 33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உதவியதாக மோகன் ராஜ் என்பவரும் கைதாகியுள்ளார். இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    English Summary

    A 10-year-old girl was found dead in Kannampalayam, Coimbatore, triggering outrage among relatives who staged an overnight protest seeking justice outside Sulur police station. Based on CCTV footage, police arrested 33-year-old Karthi from Nagapattinam and are also questioning Mohan Raj for allegedly assisting him.