எடப்பாடி அவுட்.. வேலுமணி இன்.. அதிமுக நிர்வாகிகள் கார்களிலும் மாற்றம்
கோவை: சட்டமன்ற தேர்தல் முடிந்தும் தமிழக அரசியல் களத்தின் பரபரப்பு ஓயவில்லை. நீண்ட இழுபறிக்கு பிறகு விஜய் முதலமைச்சராக பதவியேற்று கொண்டார். தவெகவுக்கு பல்வேறு கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி வருகிறார்கள். அதிமுகவில் உள்கட்சி பிரச்சனை வெடித்து கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் அணி, வேலுமணி அணி என்று இரண்டாக பிரிந்துள்ளது. அதிமுகவில் ஒரு தரப்பினர் தங்களின் கார்களில் எடப்பாடியின் புகைப்படத்தை நீக்கிவிட்டு வேலுமணியின் புகைப்படத்தை வைத்து வருகிறார்கள்.
தமிழக அரசியல் களம் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, தேர்தலுக்கு பிறகு என்று மாறிவிட்டது-. தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றனர். திமுக எதிர்க்கட்சியாக வந்துள்ளது. அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தேர்தலுக்கு அதிமுக இரண்டாக பிரிந்து செயல்பட தொடங்கியுள்ளது. எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்துள்ளதாக அவரின் ஆதரவு எம்எல்ஏக்கள் மனு அளித்தனர்.

எடப்பாடி வேலுமணி அணிகள்
இதேபோல வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் அவரை அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்துள்ளதாக சபாநாயகரிடம் மனு அளித்தார்கள். அதிமுகவில் 47 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதில் 22 பேர் எடப்பாடி பழனிசாமிக்கும், 25 பேர் வேலுமணி மற்றும் சி.வி சண்முகம் அணியிலும் உள்ளனர். எடப்பாடி பழனிசாமி திமுக ஆதரவுடன் முதலமைச்சராக முயற்சி செய்ததாக தகவல் வெளியானது.
இதனால் அதிமுகவில் கருத்து வேறுபாடு எழுந்தது. வேலுமணி, சி.வி சண்முகம், நத்தம் விஸ்வநாதன், சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தனி அணியாக செயல்பட்டனர். எடப்பாடியின் செயலில் அதிர்ச்சியடைந்த வேலுமணி அணி, தவெகவுக்கு ஆதரவளிப்பதாக முடிவு செய்துள்ளனர். இதனால் அதிமுக மீண்டும் உடைந்துள்ளது. இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாறிய புகைப்படம்
எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும், எஸ்.பி வேலுமணி ஆதரவாளர்களுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது. கோவையில் உள்ள வேலுமணி ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். வேலுமணி ஆதரவாளர்களின் கார்களில் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை நீக்கிவிட்டு, வேலுமணியின் புகைப்படத்தை பொருத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications